இடுகைகள்

என்பிகே லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தங்கச்சியின் கையால் உயிரைப் போக்கிக்கொள்ளும் அண்ணனின் அன்லிமிடட் பாசம்! வீரசிம்ம ரெட்டி-என்பிகே (2)

படம்
  வீரசிம்மா ரெட்டி வீர சிம்ம ரெட்டி இயக்கம் கோபிசந்த் மலினேனி இசை தமன் சாய் கண்டசாலா என்பிகே, ஸ்ருதி, ஹனிரோஸ், வரலட்சுமி   அண்ணன் தங்கை பாசத்தின் எக்ஸ்ட்ரீம் வெர்ஷன். இருவருக்கும் பாசத்தால் ஒருவருக்கொருவர் தம் உயிரைக் கூட விடுகிறார்கள். இதனால் ஓ ஹென்றி கதை போல யாருக்கும் சல்லி பைசா பிரயோஜனம் இல்லாமல் போகிறது.   இதனால் பாசமேனும் மனதில் பதிகிறதா என்றால் அதுவும் இல்லை என்பதுதான் வேடிக்கை. முதல் காட்சியில் ஊரின் பெரிய நிலத்தைக் காட்டுகிறார்கள். அங்கு கட்டிலில் அமர்ந்திருக்கிற ஒருவரிடம் கல்யாணப் பத்திரிக்கையை ஒருவர் கொண்டு வந்து கொடுக்கிறார். அதற்கு ஊரின் பெரிய தலையை வரச்சொல்ல சொல்லுகிறார். வந்தால் அங்கு வைத்தே அவரைக் கொல்வதாக சொல்லுகிறார். ஆனால் அதற்கு கட்டிலில் உட்கார்ந்திருக்கிறவர். அது முடியாது. சாத்தியமே இல்லை என்கிறார். இதனால் அவரைக் கொன்று, அவரது பயிர்களை தீ வைத்து எரித்து விடுகிறார். அவர்தான் வில்லன், பிரதாப் ரெட்டி. புலிசர்லா ஊரில் வாழும் வீர சிம்மா ரெட்டி, அந்த ஊரையே வாழ வைக்கிற ஆள். அதேசமயம் நல்லதோ கெட்டதோ இரண்டையும் அந்த ஊர் மக்களுக்கு அவரே செய்கிறார். அவர் ஏற்பாடு

சுலைமானி டீயை அறிமுகம் செய்த அருமை நண்பர் சக்திவேல்! கடிதங்கள்- கதிரவன்

படம்
  25.1.2022 மயிலாப்பூர் அன்பிற்கினிய நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?  நோய்த்தொற்று ஓரளவுக்கு இங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. ஞாயிறு லாக்டௌன் விலக்கப்பட்டு விடும் என்று பேசிக்கொள்கிறார்கள். அப்படி நடந்தால் நல்லதுதான். நாங்கள் தினசரி செய்திகளை அடிப்படையாக கொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறோம். ஃபாரின் ரிடர்ன் முதலாளிக்கு பிடித்தால் வேலை இப்படியே தொடரும். இல்லையா மீண்டும் கோட்டை அடித்து திரும்ப போடவேண்டியதுதான்.  கதிரவன், முன்னர் நீங்கள் அனுப்பி வைத்த கடிதங்களை தொகுத்து தனி நூலாக்கிவிட்டேன். வெகுநாட்களாக தேங்கி கிடந்த வேலை அது. நூலை முடித்து மின் நூலாக அமேஸானில் பதிவேற்றம் செய்துவிட்டேன். இதுவரை அமேஸானில் பத்து மின்னூல்களை எழுதி பதிவிட்டுள்ளேன்.  குறிப்பிட்ட நேரத்தில் விஷயங்களை சேகரித்து எழுத முடியுமா என்று சோதித்த சோதனையின் விளைவுகள் இவை. வணிக ரீதியாக இந்த மின்நூல்களால் பெரிய பயன் ஏதுமில்லை. இந்த நூல்களை எழுதி முடிக்கும்போது தன்னிறைவு கிடைக்கிறது. அதுதான் இப்போதைக்கு ஊக்கம். பணம் பிறகுதான். அதுவும் கிடைத்தால்தான். ரீடர்ஸ் டைஜெஸ்ட் இதழில் மனிதநேய உதவிகளை வழங்கிய மனிதர்களைப் பற்றி எழுதியிருந்

எதிரிகளை ஆல் இன் ஆலாக வதம் செய்யும் அகோரி அகண்டா! - அகண்டா - பொயபட்டி ஸ்ரீனு- தெலுங்கு

படம்
  அகண்டா - பாலகிருஷ்ணா(NBK) அகண்டா பொயபட்டி ஸ்ரீனு என்பிகே, பிரக்யா ஜெய்ஸ்வால் முரளி கிருஷ்ணா, புகழ்வாய்ந்த பணக்கார விவசாயி. இவர், தன்னுடைய பிராந்தியத்தில் உள்ள ரவுடிகளை அடித்து திருத்தி நம்நாடு எம்ஜிஆர் போல பக்குவப்படுத்துகிறார். அப்படி ஒருவரை அடித்த அடியில் நேர்மையான மனிதராக மாறி, அத்தொகுதியில் வென்று எம்.பியாகிறார். இந்த நேரத்தில் அங்கு சாமியாராக உள்ளவர், தனக்கென ரவுடி கூட்டத்தை வைத்து சுரங்கங்களை தோண்டுகிறார். அதில் கிடைக்கும் யுரேனிய பாதிப்பு பற்றி அரசு அதிகாரிகளுக்கு கூட சொல்லுவதில்லை.  கழிவுகளை ரிவர்ஸ் போரிங் முறையில் நிலத்திற்கு அடியில் செலுத்துகிறார்கள். இதனால் மண், நீர் மாசுபட மக்களும் , குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் முரளி கிருஷ்ணாவிற்கும் சுரங்க மாஃபியாவிற்கும் முட்டல் மோதல் தொடங்குகிறது. இதன் அடுத்த விளைவாக, முரளி கிருஷ்ணாவின் மருத்துவமனையில் குண்டு வைத்து வெடிக்க வைக்கப்படுகிறது. இதில் பிராந்திய எம்பி பலியாகிறார். சாமியாரின் தந்திரத்தால் தேசிய புலனாய்வு முகமையால் முரளி கிருஷ்ணா கைதாகிறார். அவரது மனைவியின் மாவட்ட ஆட்சியர் பதவியும் பறிபோகிறது. இப்போது அவர்களை யா