இடுகைகள்

உலகப்போர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யூதமக்களின் வாழ்க்கையை உலகப்போர் பின்னணியில் அங்கதமாக விவரிக்கும் நாவல்! ஷோஷா - ஐசக் சிங்கர்

படம்
  ஷோஷா ஐசக் பாஷாவிஸ் சிங்கர் தமிழில் கமலக்கண்ணன் போலந்து நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஐசக் பாஷாவிஸ் சிங்கர் இத்திய மொழியில் எழுதிய நாவல். தமிழில் கமலக்கண்ணன் வெகு சிரத்தையெடுத்து மொழிபெயர்த்திருக்கிறார்.   போலந்து நாட்டில் உள்ள யூதக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஆரோன் கிரடிங்கர். இவர்கள் யூத மத ராபி குடும்பம். இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஆரோன், இன்னொரு மதம் சார்ந்த பஷிலி – செல்டிக் ஆகியோரின் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுகிறான். பஷிலியின் பெண்தான் ஷோஷா. இவள் புத்திசாலி கிடையாது. ஆனால் ஆரோன் சொல்லும் கதைகளையெல்லாம் பொறுமையாக கேட்பவள். ஆரோனுக்கு மிக நெருக்கமான அவனை கிண்டல் செய்யாத தோழி, அவள் மட்டுமே. ஆரோன் தனது அப்பா படிக்க கூடாது என்று சொல்லும் நூல்களை படித்துத்தான் தனது இலக்கிய வாழ்வை தொடங்குகிறான். அவர்களது குடும்பம் பிழைக்க பல்வேறு இடங்களுக்குச் செல்கிறது. ஆரோனின் தம்பி யூத மத வழக்கப்படி ராபி ஆகிறான். ஆனால் ஆரோன் இலக்கியவாதியாக எழுத்தாளனாகிறான். தமிழ் எழுத்தாளர்கள் தமிழ்நாட்டில் எழுதிய நூல்களின் ராயல்டிக்கு ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்கும் நிலை. போலந்திலும் கூட அப்படித்

உலகப்போரை தடுத்து நிறுத்தும் அசாதாரண படை! - டிசி காமிக்ஸின் கொஞ்சம் கிளாசிக் அவெஞ்சர்! லீக் ஆப் எக்ஸ்ட்ராடினரி ஜென்டில்மேன்

படம்
              லீக் ஆஃப் எக்ஸ்ட்ராடினரி ஜென்டில்ஸ்மேன் 2003   Director: Stephen Norrington Produced by: Trevor Albert, Rick Benattar, Sean Connery, Mark Gordon, Don Murphy, Michael Nelson Screenplay by: James Dale Robinson Based on The League of Extraordinary Gentlemen by Alan Moore , Kevin O'Neill   Music by Trevor Jones Cinematography Dan Laustsen   1899 ஆம் ஆண்டு நடைபெறும் கதை . சீன் கானரிதான் படையின் தலைவர் . படம் இன்றைய மார்வெல்லின் அவெஞ்சர் படத்தின் கதைதான் . படத்தின் கதை , இங்கிலாந்தின் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுகிறது . உளவுத்தகவல்களில் ஜெர்மனிதான் அத்தாக்குதல்களை நடத்தியது என தெரியவருகிறது . உண்மையில் இப்படி ஐரோப்பிய நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதால் ஜெர்மனி நாட்டுக்கு என்ன லாபம் ? இதனால் உலகப்போர் நடைபெறுமா என பலரும் பயந்து நடுங்குகிறார்கள் . இதனை செய்வது பேன்டம் என்ற முகமூடி அணிந்த மனிதர் . இவை அழித்தால் போதும் . போரைத் தடுத்துவிடலாம் என தெரிகிறது . இதனால் எம் என்ற பணக்கார பேராசிரியர் இதற்கென ஒரு படையை அமைக்க திட்டமிடுகிறார் . அத

க்வெர்ட்டி கீபோர்டு எப்படி சந்தையில் வென்றது?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி க்வெர்ட்டி கீபோர்டை நாம் பயன்படுத்துவது எதற்காக? படத்தில் உள்ள டிசைனைப் போன்ற கீபோர்டைப் பயன்படுத்தித்தான் பல இலக்கியச் செல்வங்களை நவீன எழுத்தாளர்கள் உருவாக்கி வருகின்றனர். ஏனென்றால் இந்த வடிவம்தான் தட்டச்சுப்பலகையில் உள்ளது. விக்கிப்பீடியா இம்முறை டைப் செய்ய சரியாக உள்ளது என்று கூறமுடியாது. ஆனால் தற்போது கீபோர்டு என்பதே பெரும்பாலும் க்வெர்ட்டி முறையைத் தான் பின்பற்றுகின்றன. 1860 ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் லதாம் ஷோல்ஸ் என்ற டெக் மனிதர், இதுபற்றிய ஆராய்ச்சி செய்து வந்தார். ஏராளமான லே அவுட் விஷயங்களை வைத்து, எது அலுவலகத்திற்கு பயன்படும் என்று ஆராய்ச்சிகள் செய்து வந்தார். இறுதியாக 1867ஆம் ஆண்டு தனது லேஅவுட் ஒன்றை உருவாக்கி அதற்கு காப்புரிமையும் பெற்றார். இன்று நாம் பயன்படுத்தும் கீபோர்ட் ஏறத்தாழ ஷோல்ஸின் வடிவத்தை ஒத்ததுதான். அவரின் முதல் கீபோர்ட் அகரவரிசைப்படி உருவாக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக டைப் செய்ய பலரும் எழுத்துக்களைத் தேடிக்கொண்டு இருந்தனர். அப்போது மோர்ஸ் கோட் ரகத்திலும் டைப் செய்துகொண்டிருந்தனர். எனவே எஸ், இ, இசட் ஆகிய எழுத்துகள்