இடுகைகள்

கேள்வி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூமியிலுள்ள மர்மங்கள் பற்றி அறிய கேட்க வேண்டிய கேள்விகள்!

படம்
  பூமியைப் பற்றி அறிந்துகொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. நேஷனல் கிராபிக் இதழ், டிகேபுக்ஸ் , ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்  வழியாக,  நிறைய விஷயங்கள் வெளியே தெரிய வந்தாலும் அறிய வேண்டிய பதில்கள் நிறைய உள்ளன. அப்படி சிலருக்கு தோன்றிய பூமி பற்றிய கேள்விகளும் பதில்களும் இதோ.... காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உயிரினங்கள் தங்களை மாற்றிக்கொள்ளுமா? இதற்கு எதிர்காலத்தில் உயிரியல் துறையில் நடைபெறும் ஆராய்ச்சிகள், மேம்பாடுகள்தான் பதில் சொல்லவேண்டும். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உயிரினங்கள் தங்களை எப்படி மாற்றிக்கொள்ளும். அதற்கான கால வரம்பு என்ன என்பதை உடனே கூறுவது கடினம். இதை எதிர்காலத்தில்தான் ஆய்வு செய்து அறியவேண்டும்.  பேட்ரிக் வாலன்ஸ், முன்னாள் அறிவியல் ஆலோசகர் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நுண்ணுயிரிகள் உதவுமா? நிலம், நீர், நமது வயிறு, கை, கால்கள் ஆகியவற்றில் ஏராளமான கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் உள்ளன. இவற்றில் நல்ல நுண்ணுயிரிகளை எடுத்து பயன்படுத்தினால் மரத்தின் வளர்ச்சியைக் கூட மும்மடங்கு அதிகரிக்க முடியும். மனிதர்களின் வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளை மேம்படுத்தினால் செ

வட்டவடிவ பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி எதற்காக?

படம்
  பழமொழிகளை நாம் நிறைய இடங்களில் பயன்படுத்துவோம். நிறைய நம்பிக்கைகளை முன்னோர்கள் கூறினார்கள் என அப்படியே பின்பற்றுவோம். அதை ஏன் என கேள்வி கேட்டால்தானே அதன் பின்னணி தெரியும். அப்படி சில விஷயங்களை தேடிப்பார்த்த அனுபவம் இது.  தினசரி 10 ஆயிரம் அடிகள் நடந்தால் உடலுக்கு நல்லது இப்படி கூறுவதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. பொதுவாக வாக்கிங் சென்றால் நல்லது என்ற நிலைக்கு நீரிழிவு நோய் வந்தவர்கள் வந்துவிட்டார்கள். எனவே பத்தாயிரம் அடி என்பது கூட இப்போது போதுமா என்று தெரியாத நிலை. ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வந்த காலம். 1960ஆம் ஆண்டு, மான்போ கெய் என்ற கருவி விற்பனைக்கு வந்தது. இதை பத்தாயிரம் அடி மீட்டர் என்று அழைத்தனர். இக்கருவியை தயாரித்த யமாசா என்ற நிறுவனம் பத்தாயிரம் என்ற எண்ணைக் குறிக்கும் ஜப்பானிய எழுத்தைக் கவனித்தது. அது ஒரு மனிதர் நடப்பது போலவே இருந்ததால்,அதேயே விற்பனைப் பொருளுக்கு பயன்படுத்தியது.  உடல் ஒரே இடத்தில் இருந்தால் அது கெடுதலை உருவாக்கும், எனவே சிறிது நடங்கள், உட்காருங்கள். உடலை பல்வேறு வடிவங்களில் நிலைகளில் மாற்றி உட்கார்ந்து பாருங்கள். இதெல்லாமே உடலுக்கு ப

கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகள்!

படம்
ஆதிக்கவாதியாக ஒருவர் செயல்பட முடிவெடுத்துவிட்டார். சரி, ஆனால், அவர் முதலில் சில கேள்விகளை அவராக கேட்டுப் பார்த்து அதற்கான பதில்களைப் பெறவேண்டும். அப்போதுதான் தான் ஏற்கவேண்டிய பொறுப்பு பற்றி தெளிவாக அறிய முடியும். இப்போது கேள்விகளைப் பார்ப்போம். நீங்கள் குரூரமான அல்லது இரக்கம் கொண்ட ஆதிக்கவாதியா? நீங்கள் சாடிஸ்டா? ஆம் எனில் உங்களை எப்படி வரையறை செய்வீர்கள்? உங்கள் இணையர் மாசோசிஸ்டாக இருந்தால் அது உங்களை பாதிக்குமா? ஒரு இணை அல்லது பல இணையர்களை பயன்படுத்துபவரா? பல இணையர்களை பயன்படுத்துபவர் என்றால் அதில் கட்டுப்பாடுகளைக் கொண்டவரா? உங்கள் இணையர்களுக்கான விசுவாச விதிகளை தனியாக வகுத்து வைத்தீர்களா? அது உங்களுடையதிலிருந்து மாறுபடுமா? ஆதிக்கவாதியாக இருப்பது பிறரை விட உங்களை தனித்து காட்டுவதாக நினைக்கிறீர்களா? ஒரு உறவுக்குள் குறிப்பிட்ட விதிமுறைகளை மதித்து நடப்பது என்பது எந்தவகையில் முக்கியமானது? கீழ்படிபவரைத் தண்டிப்பது உண்டா? ஆம் என்றால் எப்படி? இணையர்களுக்குள் முரண்பாடு வந்தால் அதை எப்படி கையாள்வீர்கள்? உங்களுக்கு சட்டென கோபம் வருமா? அப்படி வந்தால் அதை எப்படி வெளிப்படுத்துவீர்கள்? ஒரு மாசோசி

18. கௌதம் அதானி பதிலளிக்க வேண்டிய கேள்விகள் - மோசடி மன்னன் அதானி - இறுதிப்பகுதி

படம்
  26.2021ஆம் ஆண்டு, குழுமத்தின் நிதித்துறை தலைவராக ராபிசிங் பொறுப்பு வகித்தார். அப்போது குழுமத்தின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. 2021ஆம் ஆண்டு, ஜூன் 16 அன்று,என்டிடிவியில் கொடுத்த நேர்காணலில் ராபி சிங், “மொரிஷியஸில் உள்ள நிதி நிறுவனங்கள் அதானி குழுமத்தில் புதிதாக நிதியை முதலீடு செய்யவில்லை. தங்களின் பிற அதானி நிறுவன பங்குகளை விலக்கிக்கொண்டனர்” என்று கூறினார். ஹிண்டன்பர்க்கின் ஆய்வாளர்கள் கூற்றுப்படி, அப்போது நிதி நிறுவனங்கள் அதானி க்ரீனில் புதிய முதலீடுகளைச் செய்தனர். அந்த சமயத்தில் அதானி குழும முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை விதிப்படி, தங்கள் பங்கு அளவை குறைத்துக்கொள்ள நினைத்தார்கள். இந்த செயல்பாட்டிற்கு, அதானி குழுமம் என்ன பதில் தரப்போகிறது? 27.1999-2005 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அதானி குழும முதலீட்டாளர்கள், தனிநபர்கள், எழுபதிற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக செபி குற்றம்சாட்டி அவர்களை விசாரித்தது. இதுபற்றி கௌதம் அதானியின் கருத்து என்ன? 28. அதானி எக்ஸ்போர்ட்ஸ் (தற்போது, அதானி என்டர்பிரைசஸ்) நிறுவனத்தின் பங்குகளை அதானி குழும முதலீட்டா