இடுகைகள்

விக்ரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனநல குறைபாடு கொண்ட அண்ணனைப் பழிவாங்கும் சுயநலமான தம்பி - கோப்ரா - அஜய் ஜானமுத்து

படம்
  கோப்ரா இயக்குநர் அஜய் ஞானமுத்து இசை ஏ ஆர் ஆர் ஸிஸோபெரெனியா குறைபாடு கொண்ட அண்ணனுக்கும், சுயநலமான தம்பிக்கும் நடக்கும் பழிக்குப்பழி சம்பவங்கள்தான். கதை.  மதியழகன், அனாதை ஆசிரம குழந்தைகளுக்கு உதவும் கணித ஆசிரியர். கணிதத்தில் சற்று மேம்பட்ட மனிதர். அதில் கற்ற கோட்பாடுகளை வைத்தே தன்னையும், ஆசிரம குழந்தைகளையும் காப்பாற்ற கொலைத்தொழில் செய்கிறார். இதற்கு நெல்லையப்பர் என்ற பத்திரிகையாளர் உதவி செய்கிறார். இந்த நிலையில் மதி செய்யும் கொலைச்செயல்கள் பற்றி தகவல்கள் மெல்ல இன்டர்போலுக்கு கசிகின்றன. எப்படி என அறியும்போதுதான் அதிர்ச்சி உருவாகிறது. மதியைப் போன்ற தோற்றத்தில் உள்ள இன்னொருவன்தான் தகவல்களை பிறருக்கு கொடுக்கிறான். ஏன் அப்படி செய்கிறான் என்பது ஃபிளாஷ்பேக்கிற்கான முன்னோட்டம்.  விக்ரமை விடுங்கள். அவர் சிறப்பாக நடிப்பார் என அனைவருக்குமே தெரியும். இதிலும் அப்படியேதான். அதைத்தவிர மற்றவர்களைப் பார்ப்போம். படத்தில் மதி, கதிர் என இரு பாத்திரங்களிலும் நடித்துள்ள சிறுவன் சிறப்பாக நடித்திருக்கிறான். அடுத்து, கல்லூரி பருவத்திலுள்ள மதி, கதிர் நடிகர் கூட நல்ல பங்களிப்புதான்.  ஆனால் படத்தில் ஆர்வம் தரும்

பிட்ஸ் எக்ஸ்ட்ரா - சந்திரயான் 2 புதிய தகவல்கள்!

படம்
பிட்ஸ் - சந்திரயான் 2  சந்திரயான் 2 விண்கலனில் மூன்று முக்கியப் பகுதிகள் உண்டு. ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்), ரோவர் (பிரக்யான்) ஆகியவையே அவை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டத்திற்கு அடித்தளமிட்ட டாக்டர் விக்ரம் சாராபாய் நினைவாக, லேண்டருக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. சந்திரயான் 2 வுக்கான அல்காரிதத்தை முழுக்க இந்தியாவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் எழுதி உருவாக்கி உள்ளனர். சந்திரயான் 1 போன்று இல்லாமல் சந்திரயான் 2 நிலவின் தரையில் சுமுகமாக இயங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லேண்டர் விக்ரம், ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவர் பிரக்யான் மூலம் பல்வேறு அறிவியல் சோதனைகள் செய்யப்படவிருக்கின்றன.  சந்திரயான் 2 இல் செயல்படும் ஆர்பிட்டரின் ஆயுட்காலம் ஓராண்டு ஆகும். சந்திரயான் 2 நிலவின் தரைப்பரப்பை ஆராய்வதோடு அதன் சூழலையும் ஆராயும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆர்பிட்டர் வட்டப்பாதையில் நூறு கி.மீ. தள்ளி இருந்தாலும் லேண்டர், ரோவர் செய்யும் சோதனைகளை ரிமோட் முறையில் அறிய முடியும். சந்திரயான் 2 வில் உள்ள பல்வேறு ஆய்வுப் பொருட்கள் மூலம், நிலப்பரப்பு, நில அதிர்வு, கனிம