இடுகைகள்

ஆண்ட்ராய்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகையே கட்டுப்படுத்தும் டெக் நிறுவனமாக கூகுள் வளர்ந்த கதை! சூப்பர் பிஸினஸ்மேன் - லாரி பேஜ், செர்ஜி பிரின்

படம்
      சூப்பர் பிஸினஸ்மேன் கூகுள் இரட்டையர்கள் செர்ஜி பிரின், பேஜ் பில்கேட்ஸின் மைக்ரோசாப்டைப் போன்ற ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக கூகுள் மாறிவிட்டது அதைப் பற்றியும் அதனை தொடங்கிய கூகுள் இரட்டையர்கள் பற்றி கட்டுரைகள் செய்தி வெளிவராத நாளிதழ்களோ, வார இதழ்களோ இருக்க முடியாது. அந்தளவு சர்ச் எஞ்சின் ஒன்றை உருவாக்கி மக்களை எளிதாக அதில் இணைத்துவிட்டனர். இப்போதும் சமூக வலைத்தள விஷயத்தில் நினைத்த வெற்றி பெற முடியவில்லை என்றாலும் ஆண்ட்ராய்டு விஷயத்தில் மக்களை கட்டுப்படுத்தி தான் வருகிறார்கள்.  வெற்றி பெற்ற பெரு நிறுவனம் என்றாலும் கூட பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்து வருவதோடு, வன்பொருட்கள், மென்பொருட்கள் என பலவற்றையும் உருவாக்கி வருகின்றனர். 2004இல் கூகுளின் நிறுவனர்களான செர் ஜி பிரின், லாரி பேஜ் ஆகியோரைப் பற்றி கட்டுரை பிளேபாய் இதழில் வெளியானது.  அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்று வரும் நிறுவனர்களின் திறமையை வெளிப்படையாக பாரட்டி வெளியான கட்டுரை அது. பேஜ், அமெரிக்காவின் மிச்சிகனில் பிறந்தவர். பிறகு ஸ்டான்போர்டில் பிஹெச்டி படிக்க  முடிவெடுத்து சேர்ந்தார். பிரின் ரஷ்யாவில் பிறந்தவர். இவரது பெற்றோர்

கூகுள், ஐஓஎஸ் இயக்கமுறைகளுக்கு மாற்றான லினக்ஸ் இயக்கமுறைமைகள்! - எது பெஸ்ட் ஒரு அலசல்!

படம்
      பொதுவாக ஆண்ட்ராய்ட் , ஐஓஎஸ் ஆகியவை ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் கோலோச்சுகின்றன . இதற்கு முக்கியமான காரணம் இந்த மென்பொருட்களின் தரமும் விலையும் என்று கூறலாம் . கு றிப்பிட்ட நிறுவனங்கள் தங்கள் மென்பொருட்களை விற்கும் அதேசமயம் . போனிலுள்ள சென்சார்களைப் பயன்படுத்தி பயனர்களை உளவு பார்க்கும் விஷயங்களையும் செய்கின்றன . இலவசமாக ஒன்றை ஒருவர் ஒருவருக்கு கொடுக்கிறார் என்றால் அவரையே இலவசமாக மாற்றி விற்பனை செய்கிறார் என்று படித்த வரி இப்போது நினைவுக்கு வருகிறது . அப்படித்தான் பெரு நிறுவனங்கள் முடிவு செய்து வேலைகளைத் தொடங்கி வருகின்றன . இதற்கு மாற்றாக ஓப்பன் சோர்ஸ் வகையில் பல்வேறு ஓஎஸ்கள் உள்ளன . இவை பயனருக்கான பாதுகாப்பை உறுதி செய்கின்றன . தேவையில்லாத ஆப்களும் இதில் இருக்காது . கூகுள் , ஆப்பிள் ப்ரீ இன்ஸ்டால்டு ஆப்கள் பிரச்னையும் இருக்காது . ஆனால் நீங்கள் பயன்படுத்தி வரும் அனைத்து விஷயங்களையும் இதில் பயன்படுத்துவது கடினமாகவே இருக்கும் . ஆண்ட்ராய்டு , ஐஓஎஸ்ஸிலுள்ள அனைத்து விஷயங்களும் இதில் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது . ஆனால் இப்படி ஓப்பன் சோர்ஸ் முறையில் தயாரிக்க

தினசரி வாழ்க்கையில் பயன்படும் எளிமையான ஆப்கள் இவை!

படம்
  ஆப்கள் ஓட்டெர் வாய்ஸ் மீட்டிங் நோட்ஸ் இது ஒரு டிக்டேஷன் ஆப். எனவே யார் பேசினாலும் நீங்கள் அதனை ரெக்கார்ட் செய்து வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். நேர்காணல், ஆசிரியரின் உரைகள், சந்திப்புகள் என அனைத்தையும் ஆடியோ டூ எழுத்தாக கூட மாற்றிக்கொள்ளும் வசதியை தருகிறார்கள். கூகுள் ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது. மன்த்லி பட்ஜெட் பிளானர், டெய்லி எக்ஸ்பென்ஸ் டிராக்கர். தலைப்பில் சொல்லிவிட்டோமே அதுதான் விஷயம். நாயர் கடையில் டீ குடித்துவிட்டு மிச்ச சில்லறைக்கு சென்டர் பிரஷ் வாங்குவது வ்ரையில் அனைத்து விஷயங்களையும் இதில் பதிவு செய்து கணக்கு பார்த்து பட்ஜெட் போடலாம். ஆக்ட் ஆப் காட் என்று பழி சொல்லாதபடி கணக்கு வழக்குகளை சுத்தமாக கணக்கு போட்டு காட்டுகிறது இந்த ஆப். பிளே ஸ்டோர் கிராமர்லி ஆப் இலக்கணத்திற்கான உதவியாளர். நீங்கள் எழுதும் வார்த்தைகள் ஆங்கிலத்தில் சரியானபடி உள்ளதா என கண்டுபிடித்து பாலீஷ் போட்டு நம் மாண்பைக் காக்கிறது. நீங்கள் செய்யும் அசைன்மெண்டுகளில் உள்ள பிழைகளைக் கண்டுபிடித்து சொல்லுகிறது. பிளே ஸ்டோர் ஆன்டி சோசியல் போன் அடிக்‌ஷன் நீங்கள் செய்யும் வேலைகளைக் கண்காணித்து உங்களை எச்சரிக்கிறது. இதனா

சிறந்த காலண்டர் ஆப்ஸ்கள் உங்களுக்காக....

படம்
giphy வாழ்க்கையை திட்டமிட ராணிமுத்து காலண்டர்களை ஒருகாலத்தில் நம்பியிருந்தோம். ஆனால் இன்று டெக்னிக்காக நாம் நிறைய மாறி உள்ளோம். பல விஷயங்களை டிஜிட்டலாக மாற்றி விட்டோம். அல்லது நிறுவனங்கள் மாற்றி விட்டார்கள். எனவே நாமும் மாறுவது எதிர்காலத்திற்கு நல்லது.  Fantastical 2 ஆப்பிளில் காலண்டர் ஆப் உள்ளது. ஆனால் கம்பெனியோடு வருவது எப்போது சிறப்பாக இயங்காது. டிசைன் அப்படித்தான். எனவே 49 டாலர்களை கொடுத்து இந்த ஆப்பை வாங்குங்கள். இதனை குரல் மூலமும் இயக்க முடியும். ஐக்ளவுட், கூகுள் ட்ரைவ் ஆகியவற்றிலும் இதனை இணைத்துக்கொள்ள ஆதரவு வழங்குகிறார்கள். இரண்டு எழுத்துகளை எழுதினால் முழுவார்த்தையும் கண்டுபிடித்து நிரப்பிக்கொள்வதால், டக்கென திட்டமிட்டு பட் டென காரியத்தைப் பார்க்கலாம்.  ஆப்பிளுக்கு மட்டுமான ஆப் இது.   Business Calendar 2 சிங்கம் 1,2,3 போல பெயர் தெரிந்தாலும் வேலை செய்வதற்கு ஏற்ற ஆப் இது. ஆண்ட்ராய்டில் சிறப்பாக இயங்குகிறது. இலவச பதிப்பில் விளம்பரத் தொல்லைகள் உண்டு. ஆனாலும் கூகுள் காலண்டர் லெவலுக்கு நிறைய வசதிகளைத் தருகிறார். காசு கொடுத்து வாங்கும் முன்பு இலவச பத