இடுகைகள்

மின்மினிப்பூச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெரிஞ்சுக்கோ - இணையைக் கவரும் மின்மினிப்பூச்சி!

படம்
தெரிஞ்சுக்கோ! மின்மினிப்பூச்சிகள்! அண்டார்டிக் தவிர அனைத்து கண்டங்களிலும் மின்மினிப்பூச்சிகள் காணப்படுகின்றன. எப்படி அதன் உடலில் வெளிச்சம் எப்படி ஏற்படுகிறது? தன் இணையை ஈர்க்க உருவாக்குவதுதான் இந்த வெளிச்சம். சூப்பர் ஆக்சைடு அனியன் எனும் வேதிப்பொருள்தான் உடலில் ஏற்படும் வெளிச்சத்திற்குக் காரணம். இதில் எலக்ட்ரான்களும் கால்சியமும், அடெனோசைன் ட்ரைபாஸ்பேட், லூசிஃபெரின் ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. அனைத்தும் இணைந்துதான் வெளிச்சம் கிடைக்கிறது. இணைகளைக் கவர்வதற்கு என்றாலும் இதில் எதிரிகளுக்கும் எச்சரிக்கையும் உண்டு. மின்மினிப்பூச்சிகளில் 2 ஆயிரம் வகைகள் உண்டு. இதில் வெளிச்சம் தருவது மிகச்சிலவே. லார்வா நிலையைக் கடக்கவே மின்மினிப்பூச்சிகள் 2 ஆண்டுகள் எடுத்துக்கொள்கின்றன.  முழுவளர்ச்சியடைந்த மின்மினிப்பூச்சியாக மாற 2 மாதங்கள் தேவைப்படுகிறது. பாக்டீரியா கலப்படத்தை அறிய மின்மினிப்பூச்சியின் லூசிஃபெரஸ் வேதிப்பொருள் கொண்ட கிட் உதவுகிறது. இதன் விலை 338 டாலர்கள். மின்மினிப்பூச்சியின் உடலில் வெளியாகும் வெளிச்சத்திற்கான மின் அளவு 14.1 மைக்ரோவாட்ஸ். தன் உடலில் வேதிவினையின் மூலம