இடுகைகள்

உப்பு நாய்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இருள் மனிதர்களின் கொந்தளிப்பான வாழ்க்கை - உப்பு நாய்கள் - லஷ்மி சரவணக்குமார் - எதிர் வெளியீடு

படம்
  உப்பு நாய்கள்  லஷ்மி சரவணக்குமார்  எதிர் வெளியீடு  மின்னூல்  இந்த நாவல் சென்னையில் இருளான, நிழல் வேலைகளை செய்யும் மனிதர்களைப் பற்றி துல்லியமாக சொல்லிச் செல்கிறது. வாசிப்பவர்களை நிறைய வன்முறை சம்பவங்கள் வாயடைத்து பீதி கொள்ளச்செய்யும். அந்தளவு காட்சிகள் வன்முறையை விவரிக்கின்றன.  நூலுக்கு வண்ணதாசன் முன்னுரை எழுதியிருக்கிறார். ல.ச.குவின் அனைத்து நூல்களையும் படித்துவிடுவதாக கூறியிருக்கிறார். நம்பிக்கையான மனிதர்கள் பற்றி மட்டுமே அதிக சிறுகதைகள் எழுதியுள்ளவர், ல.ச.குவின் கதை பற்றி முன்னுரை எழுதியுள்ளது ஆச்சரியமானது. உண்மையில் அவர் அப்படிப்பட்ட மனிதர்களையும் அறிய நினைப்பது இயல்பானதுதான். மணிரத்னம் எப்படி பாலா படங்களைப் பார்த்து அவரைப் பாராட்டுகிறாரோ அதேபடிதான்.  சென்னையில் சேரி அருகில் வாழ்பவர்களான சம்பத், மணி, சுந்தர் ஆகியோரின் வாழ்க்கைதான் முக்கியமான கதை. இதற்கடுத்து மதுரையில் பிக்பாக்கெட் அடிக்கும் செல்வி, தவுடு அவர்களின் கணவர்கள், விபச்சாரத்தை தொழிலாக செய்யும் முத்துலட்சுமி, ஆந்திரத்தில் வாழ்ந்து வந்து சென்னையில் வாழ்க்கையைத் தொலைக்கும் ஆதம்மா ஆகியோர் வருகிறார்கள்.  நாவலில் சற்று நம்பிக்