இடுகைகள்

ஜின்பிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மேற்கு நாடுகளின் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கும் சீன அரசு!

படம்
  டியூக் பல்கலைக்கழகம், சீனா நியூயார்க் பல்கலைக்கழகம், சீனா லிவர்பூல் பல்கலைக்கழகம், சீனா வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை கண்காணிக்கும் சீனா! சீனா, தனது நாட்டிற்குள் வெளிநாட்டினரின் சிந்தனைகள் நூல் வழியாக அல்லது வேறு எந்த வழியாக வருவதையும் விரும்புவதில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக அங்கு செயல்பட்டுவரும் நியூயார்க் பல்கலைக்கழகம், டியூக் பல்கலைக்கழகம், லிவர்பூல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடந்து வரும் மாற்றங்களைக் கூறலாம். இங்கு அமெரிக்காவின் சுதந்திரமான சிந்தனை கொண்ட பேராசிரியர்களை பல்கலைக்கழக போர்டில் உள்ள கம்யூனிச கட்சியினர் மெல்ல அகற்றி வருகின்றனர். பாடநூல்களையும் மாற்றச்சொல்லி அழுத்தம் கொடுத்து வருகின்றனர். சீனாவில் வந்து கல்வித் தொழில் சேவையை செய்யும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் சீன அரசின் பங்களிப்பு உண்டு. அதாவது, தொழில் கூட்டாளி. எனவே, இந்த அடிப்படையில் கம்யூனிச கட்சி உறுப்பினர்   போர்டில் அமர்ந்து சீன அரசின் பல்வேறு கல்வித் திட்டங்களை, விருப்பு வெறுப்புகளை நடைமுறைப்படுத்தி வருகிறார். இதை பல்கலைக்கழகம் மறுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. மேற்குநாடுகளின் அறிவியல், பொறியிய