இடுகைகள்

போலிச்செய்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் செயற்கை நுண்ணறிவு!

படம்
  செயற்கை நுண்ணறிவு காலத்தில் பரவும் போலிச்செய்திகளும், நேர்மையான தேர்தலும் 2018ஆம்ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்தோடு செய்த ஊழல் அனைவரும் அறிந்ததே. ஒருவர் எழுதும் பதிவுகளை வைத்து அவர் எந்த கட்சிக்கு வாக்களிக்கிறார் என அல்காரிதம் மூலம் கணித்தனர். இதைப் பற்றி மக்களுக்கு எந்த கவனமும் இல்லாமல் இரையாக மாட்டிக்கொண்டனர். இதில் பயன்பெற்றது, உலகம் முழுக்க உள்ள அரசியல் கட்சிகள்தான். இலவசம் என்ற பெயரில் ஃபேஸ்புக் உலகம் முழுக்க பரவலாகி அதில் இணைந்த பயனர்களாகிய மக்களையே நல்ல விலைக்கு விற்ற கதை அது.  செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலிச்செய்திகள், வீடியோக்களை ஒருவர் உண்மையா, பொய்யா என்று கண்டுபிடித்து தடுப்பது உண்மையில் கடினமான ஒன்று. அரசியல் கட்சிகளுக்கு எந்த நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மாடல் உதவும் என்று தெரியவில்லை. ஓப்பன் ஏஐ, கூகுள், அமேஸான் ஆகிய பெருநிறுவனங்களே பந்தயத்தில் முன்னணியில் உள்ளன.  வெறுப்பு, பிரிவினைவாத கருத்துகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவுகின்றன. இதன் அடிப்படையில் போலிச்செய்திகளை வைத்தே கூட ஒரு கட்சி தேர்தலில் வெல்லலாம். செயற்கை நுண்ணற

செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 - அமீலியோ, பிளைண்ட், கிராபிகா

படம்
  அமீலியோ - சிறைக்கைதிகளுக்கான வீடியோ அழைப்பு டைம் செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023   நோவா நார்டிஸ்க் அமெரிக்க சந்தையில் நோவா நார்டிஸ்கின் ஆசம்பிக், ரைபெல்சஸ் ஆகிய மாத்திரைகளுக்கு கிராக்கி அதிகம். ஏனெனில் இந்த மாத்திரைகள் உடல் எடை குறைப்பிற்கானவை. இந்த மாத்திரைகளை இரண்டாம் நிலை நீரிழிவுக்கும் பயன்படுத்தலாம். நோவா மருந்து உற்பத்தி நிறுவனம், தனது மருந்துகளை எப்படி பயன்படுத்துவது, யாருக்கு பரிந்துரைப்பது என்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. உடல் எடை குறைப்பு சந்தை பெரியது. அதில் நோவாவின் மாத்திரைகளைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பவர்கள் அதிகம். அதையும் அந்த நிறுவனம் அறிந்திருக்கிறது. அல்சீமருக்கான மருந்துகள், சிகிச்சைகளை வழங்கவதற்கு திட்டமிட்டு வருகிறது. இதன் இயக்குநர் லார்ஸ் ஃப்ரூயர்கார்ட். #Nova nordisk கிராபிகா செயற்கை நுண்ணறிவு மூலம் செய்யப்படும் போலி செய்திகள், போலி புகைப்படங்கள், பிரசாரங்களை அலசி ஆராய்ந்து உண்மை என்ன என்பதை கிராபிகா கண்டுபிடிக்கிறது. இந்த நிறுவனம், அமெரிக்காவின்   நியூயார்க் நகரில் செயல்படுகிறது. 2022ஆம் ஆண்டு மெட்டா, கூகுள், ஸ்டான்ஃபோர்ட் பல்கல

செய்திகளை எழுதுவதில் எந்தப்பக்கம் நிற்பது? - எது சரி, எது தவறு?

படம்
  கொள்கை ரீதியான சவால்கள் இதழியலைப் பொறுத்தவரை நவீன காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அச்சு ஊடகம் கடந்து காட்சி ஊடகங்கள் சக்தி பெற்றுள்ளன. கையில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள், தனி ஒரு ஊடகமாக செயல்படத் தொடங்கிவிட்ட காலமிது. எப்படி இயங்கினாலும் செய்திகளை மக்களுக்கு வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டால் அதுவும் இதழியலில்தான் சேரும். இதழியலைப் பொறுத்தவரை நிருபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கும் பெரும் சவால். ஒரு விவகாரத்தில் எடுக்கும் நிலைப்பாடு ஒரு சூழலில் சரியாக இருக்கும். மற்றொரு சூழலில் தவறாக இருக்கும். அதை முட்டாள்தனம் என்று கூட பிறர் கருதலாம். செய்தி தொடர்பாக முடிவெடுக்கும்போது தொழில் சார்ந்த கொள்கைளை அடிப்படையாக கொள்ளவேண்டும். ஆசிரியர் குழுவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் நாம் அதற்கு சரியான பதிலைக் கண்டுபிடித்தால்தான் முன்னே நகர முடியும். இரண்டு இடங்களில் நாம் என்ன முடிவெடுப்பது என தடுமாறி நின்றுவிடுகிறோம். ஒன்று. எது சரி அல்லது எது தவறு என குழம்புவது. அடுத்து நாம் எடுக்க வேண்டிய ஒரே முடிவு. ஒரே முடிவால் நாம் செய்யும் செயல்களுக்கு கிடைக்கும் சரியான ப

போலியான கோட்பாடுகளை மக்கள் நம்புவதற்கு காரணம் என்ன? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? பெரும்பாலான மேப்கள் ஏன் தவறாக இருக்கின்றன? பூமி உருண்டையாக இருக்கிறது. ஆனால் மேப் உள்ள தாளோ தட்டையாக இருக்கிறதே அதனால்தான். உள்ளபடியே சரியான தகவல் வேண்டுமென்றால் மேப் மிகப்பெரிதாக இருக்கவேண்டும். வரைபடத்தில் உலகத்தை எப்படி அடக்குவது என்றால் அதை சாதித்தவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர், ஜெரார்டஸ் மெர்கேடர். 1569இல் இவர் உருவாக்கிய முறையைத் தான் பலரும் பின்பற்றி வருகிறார்கள். இன்று கூகுள் மேப்பில் பார்க்கும் உலகைக் கூட மெர்கேடர் காட்டும் முறையைப் பின்பற்றித்தான் பார்க்கிறோம். இதில் மாற்றங்களை ஏற்படுத்தினால் பல்வேறு நாடுகளின் அளவு மிகப்பெரிதாகிவிடும். சில நாடுகள் மிக சிறியதாக சுருங்கிவிடும்.  மக்கள் ஏன் போலியான பல கோட்பாடுகளை நம்புகிறார்கள்? கட்டடங்களை இடிப்பது எளிது. கட்டுவது கடினம். இதைப்போலவே வதந்திகளை உருவாக்குவது எளிது. அதனை உடைப்பது கடினம்.  நம்பிக்கை ஒருவரின் மனதில் உருவாகிறது என்றால் அதற்கு அடிப்படையாக உண்மை அல்லது பொய் இருக்கலாம். எதனை நீங்கள் நம்புகிறீர்களோ அதுதான் முக்கியம். முரட்டுத்தனமான புத்திசாலிகள் கோட்பாடுகளை உருவாக்குவதோடு அதனை பரப்பவும் செய்கின்

போலிச்செய்திகளுக்கு ஏற்ப நாமும் விதிகளை மாற்றி கண்டுபிடிப்புகளை அதிகரிக்க வேண்டும்! - வான் டெர் லிண்டென்

படம்
      வான் டெர் லிண்டென் போலிச்செய்தி ஆய்வாளர் உங்களுக்கு போலிச்செய்திகளைக் கண்டறிவதில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி ? உலஇரண்டாவது உலகப்போர் நடைபெற்று முடிந்தபிறகும் , பிற மனிதர்களின் மோசமான நடவடிக்கைகள் , ஆபத்தான யோசனைகளை அறிந்தபிறகுதான் இதைப்பற்றி ஆராய வேண்டும் என்று தோன்றியது . இது அனைத்து சமூக உளவியலாளர்களின் எமமும்தான் . மக்கள் எப்படி செய்திகளின் மூலம் ஆதிக்கம் செலுத்தப்படுகிறார்கள் என்பதை ஆராய நினைத்தேன் . 2015 ஆம் ஆண்டு நான் அமெரிக்க தேர்தலுக்கு முன்னர் , பருவச்சூழல் மாறுபாடு பற்றிய தவறான தகவல்களை படித்தேன் . குறிப்பாக இப்படி தவறான தகவல்களை வெளியிட்டு சுற்றுச்சூழலுக்கு பாடுபடும் மனிதர்களை முடக்க சிலர் நினைத்தனர் . இதில் ஏராளமான மூடநம்பிக்கைகள் , முட்டாள் தனங்கள் இருந்தாலும் இதன் அடிப்படை நோக்கம் மேற்சொன்னதுதான் . எங்களுக்கு முன்னிருந்த கேள்வி எப்படி இதிலிருந்து மக்களை காப்பது , அ வர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது என்பதுதான் . தவறான தகவல்களுக்கு எதிராக உளவியல் தடுப்பூசி என்ற யோசனையை எங்கே பிடித்தீர்கள் ? ஐம்பது அறுபதுகளில் பில் மெக்யூர் என்பவர் உருவ

இந்தியாவில் நடக்கும் குற்றங்களுக்கு அமெரிக்காவில் சென்று புகார் கொடுக்க முடியாது! - ரவிசங்கர் பிரசாத், ஐடி அமைச்சர்

படம்
                ரவிசங்கர் பிரசாத் , ஐடி அமைச்சர் சமூக வலைத்தளங்களை முறைப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்திய உள்ளது . இதைப்பற்றி அமைச்சர் பேசினார் . மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை எதிர்த்து சமூக வலைத்தள நிறுவனங்கள் நிற்க காரணம் என்ன ? இந்தியா ஜனநாயக நாடு . சமூக வலைத்தள நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்து வருமானம் ஈட்டத்தான் வருகின்றன . அவர்கள் குடிமக்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்குகிறார்கள் என்பது உண்மைதான் . ஆனால் சமூக வலைத்தளங்கள் இந்தியாவில் அரசியலமைப்புக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்களை கடைப்பிடித்துதான் ஆகவேண்டும் . நீங்கள் கூறுகிறபடி விதிகளை அமைத்தால் அரசை விமர்சிக்கும் குரலகளை கூட எளிதாக தணிக்கை செய்யமுடியுமே ? மத்திய அரசு அமல்படுத்தியுள்ள விதிகள் , சமூக வலைத்தளங்களை கையாள்வதற்கானவை அல்ல . அரசு , பிரதமரை விமர்சிக்கும் விமர்சனங்களை அனுமதிக்கிறோம் . ஆனால் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அவதூறு செய்வது , அதனை தவறாக பயன்படுத்துவது ஆகியவற்றை கட்டுப்படுத்த நினைக்கிறோம் . இளம்பெண்களை மார்பிங் செய்து புகைப்படங்கள

சுய ஒழுங்கு சமூக வலைத்தளங்களுக்கு முக்கியமா? -

படம்
                சுய ஒழுங்கு சமூக வலைத்தளங்களுக்கு முக்கியமா ? ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ இதழில் மூன்று வல்லுநர்கள் சமூக வலைத்தளங்கள் தங்களைத் தாங்களே ஒழுங்குமுறைபடுத்திக் கொள்ளவேண்டுமென கூறியுள்ளனர் . அமெரிக்காவில் கேபிடல் ஹில் தாக்குதலுக்கு சமூக வலைத்தளங்களே காரணமாக இருந்தன . இச்சம்பவம் நடைபெற்று ஒரு மாதத்திற்குப் பிறகு சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை பிரதமர் மோடி உருவாக்கினார் . இதற்கு வாட்ஸ்அப் , ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்துள்ளன . இதுபற்றிய தகவல்களைப் பார்ப்போம் . உலகிலுள்ள 33 சதவீத நாடுகள் சமூக வலைத்தளங்களை கட்டுப்பாடுகளுடன் இயங்க வலியுறுத்தியுள்ளன . மூன்றில் ஒரு நாடு சமூக வலைத்தளங்களை சட்ட ரீதியாக கட்டுப்படுத்தியுள்ளது . உலகில் 13 சதவீத நாடுகள் சமூக வலைத்தளங்களை முழுமையாக தடுத்துள்ளன . வட அமெரிக்காவில் கட்டுப்பாட்டு சட்டங்கள் கிடையாது . ஆனால் தென் அமெரிக்காவில் சட்டங்கள் உள்ளன . 2015 ஆம் ஆண்டு தொடங்கி முப்பது நாடுகளில் நான்கு நாடுகள் சமூக வலைத்தளங்களை தடுக்கத் தொடங்கியுள்ளன . 54 நாடுகளில் 29 நா

ஓடிடி பிளாட்பாரங்களுக்கான தணிக்கை தடை பாதிப்பை ஏற்படுத்துமா? டேட்டா கார்னர்

படம்
                  நவம்பர் 9 அன்று , இணையத்தில் வெளியாகும் படங்கள் , பாடல்கள் , பேச்சு உள்ளிட்ட அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டது . இதனை தகவல்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை கட்டுப்படுத்தும் . இதன் கீழ் இனி அனைத்து ஓடிடி சேவை வழங்கும் நிறுவனங்களும் , சமூக வலைத்தளங்கள் , இணையதளங்கள் வரும் . இந்த நிறுவனங்கள் இருக்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது . இந்த வகையில் 26 சதவீதம் வெளிநாட்டு முதலீடுகள் மட்டுமே இவற்றில் இருக்கும் . மேற்கண்ட முதலீட்டிற்கு மேல் உள்ள செய்தி நிறுவனங்ளள் இதுபற்றிய விவரங்களை மத்திய அரசுக்கு வழங்கவேண்டும் . இதில் நிறுவனத்தின் இயக்குநர் , தலைவர் , உறுப்பினர்கள் என பல்வேறு விவரங்கள் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது . அக்டோபர் 15, 2021 ஆம் ஆண்டிற்குள் வெளிநாட்டு முதலீடுகள் 26 சதவீதமாக்கப்படவேண்டும் என்ற மத்திய அரசு காலவரம்பு நிர்ணயித்துள்ளது . இதுபற்றி டிஜிபப் நிறுவனம் , மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஊடகங்களை கட்டுப்படுத்த நினைக்கிறது . அரசின் இதுபோன்ற

பெருந்தொற்று காலத்தில் பரவும் பல்வேறு போலி நம்பிக்கைகளும் செய்திகளும்! விக்ரம் டாக்டர்

படம்
pixabay கோவிட் -19 தொற்று பரவிவரும் வேளையில் பல்வேறு போலியான அறிவியல் செய்திகள், நம்பிக்கைகளும் மக்களிடம் பரவி வருகின்றன. தனது செயலின்மையை மறைக்க சமூக வலைத்தளங்களில் அரசு சார்பான ஆட்கள் இனப் பாகுபாடு காட்டி பல்வேறு போலிச்செய்திகளை உலவ விட்டு வருகின்றன. பலர் அதனை உணர்ச்சிகரமான தாக மட்டும் பார்த்துவிட்டு சாமி கண்ணைக் குத்திவிடும் என்பது போல தனது நண்பர்களுக்கும் அனுப்பி வருகின்றனர். எது உண்மை எது பொய் என்றே தெரியாமல்  ஊரடங்கு காலத்தில் மக்கள் செய்திகளை பரப்புகின்றனர். 5 ஜி டவர்கள் மூலம்தான் கோவிட் தொற்று பரவுகிறது என்று வந்த செய்தியை நீங்களும் படித்திருப்பீர்கள். எப்படி இப்படிப்பட்ட செய்திகளை கேட்டவுடன் நம்புகிறார்கள். அதனையும் இன்னும் சில பிட்டுகளை நெருக்கமாக போட்டு நங்கூரம் போட்டது போல மாற்றி பிறருக்கு அனுப்பி வைக்கின்றனர் என்பதும் புரியவில்லை. அனைத்து மனிதர்களும் பல்வேறு சிக்கல்களில் உள்ளனர். பொருளாதார பலம் குறைந்து வருகிறது. வேலை சார்ந்த எதிர்காலம், பள்ளிக்கட்டணம், வீட்டு வாடகை, எப்போது ஊரடங்கு தளர்ந்த  வேலைக்குச் செல்வது என பதற்றத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் அடுத்தவர்களின் ரத்த அழுத

டிஜிட்டல் வரலாற்றை மாற்றி எழுத முடியுமா? - மாட்டிக்கொண்ட விக்கிப்பீடியா

படம்
இன்று எந்த தகவல்கள் தேவை என்றாலும் பலரும் சொடுக்குவது விக்கிப்பீடியாவைத்தான். சிலர் இதனை பல்வேறு எடிட்டர்கள் திருத்துவதால் தகவல்கள் சரியாக இருப்பதில்லை என்று பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை நாடுவார்கள். ஆனால் அதிலும் கூட தொன்மையாக தகவல்கள்தான் இருக்கும். நடப்பு சம்பவம், விருதுவாங்கிய நபர் என்றால் விக்கிப்பீடியாவில் எளிமையாக அவர் பற்றி தகவல்களை பதிவிட்டு பக்கங்களை உருவாக்க முடியும். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் இந்துத்துவா குண்டர்கள், போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தினர். சிலர் உத்தரப்பிரதேசத்திலிருந்து துப்பாக்கியோடு களத்தில் குதித்து போராட்டக்காரர்கள்  மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் தொடுத்தனர். டில்லியில் அண்மையில் தேர்தல் வெற்றியை ருசித்த அரவிந்த் கெஜ்ரிவால் நமக்கு எதற்கு வம்பு என்று போராட்டக்காரர்கள் மீது நடந்த தாக்குதல், முஸ்லீம் வீடுகளை எரித்த சம்பவ இடத்திற்கு கூட வராமல் நடுநிலை காத்தார். நிச்சயம் வரலாறு இதற்காகவே அவரை நினைவுகூரும். இந்த வெறுப்புவாத கலவரத்தை தூண்டிவிட்டவர்களில் முக்கியமானவர்கள

2020இல் நீங்கள் கேட்கவேண்டிய கேள்விகள்!

படம்
giphy 2020ஆம் ஆண்டு  நீங்கள் கேட்கவேண்டிய கேள்விகள்! இந்த ஆண்டு ட்ரோன் டெலிவரி செயல்படுமா? ஆப்பிரிக்காவில் ரத்தப்பைகளை எடுத்துச்செல்ல ட்ரோன்களை பயன்படுத்துகின்றனர்.அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குறிப்பிட்ட பகுதிகளில் ட்ரோன் சேவைகள் செயல்பாட்டில் உள்ளன. எனவே இந்த ஆண்டு அரசின் அனுமதி பெற்று ட்ரோன் சேவைகள் வேகம் பெறும் என எதிர்பார்க்கலாம். அரசியல் விளம்பரங்கள், போலிச்செய்திகள் தடுக்கப்பட வாய்ப்பு உள்ளதா? இதை மார்க் ஸூக்கர்பெர்க்தான் சொல்லவேண்டும். ஃபேஸ்புக் எங்கெங்கு வளர்கிறதோ அங்கெல்லாம் உள்நாட்டு கலகம், புரட்சி, போராட்டம் என வளர்க்கப்பட்டு நாட்டின் அரசியல் நிலைமை படுமோசமாகி வருகிறது. இதற்கு காரணம், ஃபேஸ்புக் நாட்டை ஆளும் சர்வாதிகார கட்சிகளுடன் சூயிங்கம்மும் வாயும் போல இணைந்து செயல்படுகிறது. இதன்காரணமாக, நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு பாசிச தன்மை வளர்ந்து வருகிறது. இதை நாமே தீர்க்கலாம். எப்படி என்றால் ஃபேஸ்புக் கணக்கை கைவிடுவதன் மூலம். ட்விட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு இடமில்லை என்று கூறிவிட்டனர். அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்ற கேள்வி உள்ளது. நன்றி - வெப்

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கான போராட்டம் நடந்ததா?

படம்
ஜம்மு காஷ்மீர் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களாக செயல்படவிருக்கிறது. சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தால் கட்டுப்படுத்தப்படும்படி மாநிலம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புகள் வரவில்லையா? ஊடகங்கள் எதிலும் இத்தகைய காட்சிகளைப் பார்த்திருக்க முடியாது.  அரசு விசுவாசம்தான் இதற்குக் காரணம். ஆனால் பிபிசி, அல்ஜசீரா ஆகிய டிவி நிறுவனங்கள் உண்மையை வெளிக்காட்டி விட்டன. பத்தாயிரம் பேர்களுக்கு மேல் பங்கேற்ற பேரணியைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டு, ரப்பர் மூடி கொண்ட தோட்டாக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். மேற்சொன்ன வீடியோக்கள் பொய் தேசபக்தி டிவி சேனலான ரிப ப்ளிக் டிவி கூறியது. கூடவே ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் இதற்கு சமூக வலைத்தளத்தில் போலிச்செய்தி என சப்பைக் கட்டு கட்டினர்.  உள்துறை அமைச்சகம் நடந்த போராட்டம் உண்மை. அதில் 20 பேர்தான் இருந்தனர் என விநோதமான காரணத்தைக் கூறியது. ஆனால் உண்மை என்ன என ஆல்ட் நியூஸ் வலைத்தளம் களமிறங்கி விளக்கியது. வீடியோவில் காணப்படும்  அங்கிருந்த விளம்பரப்பலகை, ஜீனப் சாயிப் பசூதி,  பேனரிலுள்ள போராட்ட வாச