இடுகைகள்

சர்ஃபிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தீவு மக்கள் மீது திடீரென கோபம் கொண்டு வேட்டையாடும் தொன்மை கடவுள்! - அலோகா ஸ்கூபி டூ

படம்
                அலோகா ஸ்கூபி டூ ஹவாயிலுள்ள அழகான தீவுதான் அலோகா . அங்கு அரசுக்கு முக்கியமான வருமானம் சுற்றுலா பயணிகளும் , கடலில் மீன் பிடித்து விற்பதும்தான் . இப்படி இருக்கையில் திடீரென அ்ங்குள்ள தொன்மையான கடவுளின் ஆன்மா அம்மக்களை தாக்க தொடங்குகிறது . விரைவில் அங்கு கடலில் அலைச்சறுக்கு போட்டி நடக்கவுள்ளது . இதனால் அந்த நகரின் மேயர் பதறுகிறார் . அங்கு நிலங்களை விற்று கட்டிடங்களை கட்டி எழுப்ப நினைத்தவர்களும் தொழிலை இழக்கின்றனர் . உண்மையில் திடீரென நடக்கும் அந்த தாக்குதலின் பின்னணி என்ன ? சிறு மனிதர்களை அனுப்பி சுற்றுலா பயணிகளை அடித்து உதைத்து விரட்டும் நோக்கம் என்ன ? வெளியாட்களை மெல்ல உள்ளூர் மக்கள் வெறுக்கும் அளவுக்கு சூழல் மாறுகிறது . இந்த சூழ்நிலையை எப்படி மிஸ்ட்ரி மெஷின் குழு கண்டுபிடிக்கிறது என்பதுதான் கதை .    ஹவாய் மக்களின் கலாசாரம் , அவர்களின் நம்பிக்கை , உணவு என நிறைய விஷயங்களை அனிமேஷன் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள் . மக்களிடையே உள்ள நம்பிக்கையை வைத்து எப்படி சிலர் அவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றனர் என்பதை ஃபிரெட் , டெப்னி , வெல்மா , சே