இடுகைகள்

தடயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புத்தக கடை உரிமையாளரைக்கொன்ற கொலையாளி - 11 ஆண்டுகள் போராடி பிடித்த காவல்துறை!

படம்
  உணமையான சமத்துவமான நீதி என்பது உலகில் எங்குமே இல்லை. ஏனெனில் மனிதர்களிடையே சாதி, மதம், இனம், அந்தஸ்து, செல்வாக்கு, சமூக அடுக்கு என்ற வகையில் ஏராளமான பாகுபாடுகள் உள்ளன . அரசியலமைப்பு அடிப்படையில் சாமானியர் ஒருவருக்கு நீதி கிடைக்கும் இடம நீதிமன்றம், ஆனால் அங்குள்ள நீதிபதிகள் மனிதர்கள்தான். அவர்கள், மனதிலுள்ள முன்முடிவுகளும் கருத்துகளும் கூட தீர்ப்பில் வெளிப்படுகிறது. ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே பார்த்து தேவையான சட்டப்பிரிவுகளை சுட்டிக்காட்டி தண்டனை வழங்குவது சரியானது. பெரும்பாலான நேரங்களில் அரசியல் அழுத்தங்கள், இறந்துபோனவரின் குடும்ப செல்வாக்கு, பணபலம், ஏழையின் நிர்க்கதியான பலவீன நிலை கூட தீர்ப்பை மாற்ற வைக்கிறது. இப்போது இங்கே நீங்கள் வாசிக்கப்போகும் குற்றச்சம்பவம் கூட அத்தகையதுதான்.  ஒரு புத்தக்கடையை வயதான பெண்ணும், அவரது கணவரும் சேர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை உண்டு. அவர் வழியாக பேரப்பிள்ளைகளும் பிறந்துவிட்டார்கள். வயதான பெண்ணுக்கு புத்தகடை மேல் தனிப்பிரியம் உண்டு. இவர் ஒருநாள் கடையில் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டு கிடந்தார். அதே கடையில்தான் அவரின்

அம்மா விட்டுச்சென்ற தடயங்களை தேடி புறப்படும் மகளின் கதை! - எனோலா ஹோம்ஸ் 2020

படம்
        எனோலா ஹோம்ஸ் Screenplay by Jack Thorne Based on The Enola Holmes Mysteries: The Case of the Missing Marquess by Nancy Springer Directed by Harry Bradbeer   Music by Daniel Pemberton Cinematography Giles Nuttgens   எனோலா , ஷெர்லாக் ஹோம்ஸின் தங்கை . எனோலாவின் தாய் , அவரை பள்ளிக்கு அனுப்பாமலேயே அனைத்து பாடங்களையும் வீட்டிலேயே கற்பிக்கிறார் . இதனால் எனோலாவுக்கு சண்டைப்பயிற்சி , கணிதம் , அறிவியல் , வேதியியல் என அனைத்துமே அத்துபடியாகிறது . ஒருநாள் திடீரென காலையில் எனோலாவின் அம்மாவைக் காணவில்லை . அவரை எப்படி எனோலா கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை . படம் முழுக்க எனோலா , தான் தாய் சொல்லித்தந்த விஷயங்கள் வழி எப்படி செயல்பட்டு தாயை தேடிப்போகிறார் . வாழ்க்கையில் முதல் காதலை எப்படி பெறுகிறார் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள் . எனோலாவின் கதையை அவரே கேமராவைப் பார்த்து அடிக்கடி சொல்லுவது படத்தின் புதுமைகளில் ஒன்று . ஷெர்லாக் ஹோம்சை பார்த்து பழகியவர்களுக்கு ஹென்றிக் கோவில் எப்படி செட் ஆவார் என்பது சந்தேகம்தான் . படம் அவரைப்பற்றியல்ல என்பதால் . அதைப்பற்றி நாம் கவலை

ஹென்றி லெண்டரு - விதவைகளை தீர்த்துக்கட்டிய குரூரன்!

படம்
அசுரகுலம் - இன்டர்நேஷனல் ஹென்றி லெண்டரு பிரான்சைச் சேர்ந்தவர் ஹென்றி. அவசரவேலையாக ஊருக்கு போகும்போதுதான் சாவிக்கொத்தை மனைவியிடம் கொடுத்தார். ஒரே ஒரு விஷயத்தைத்தான் கசியவிட்டார். அனைத்து ரூம்களையும் திறந்துகொள். கடைசி ரூமை மட்டும் திறக்காதே என்றார். அப்படியென்றால் நம் மனதில் என்ன தோன்றுமோ அதே குறுகுறுப்புதான் அவர் மனைவிக்கும். உடனே அவர் தலை தெருவில் மறைந்ததும், மனைவி அந்த அறையை திறந்து பார்த்தார். மயக்கமே வந்துவிடும் போல இருந்தது. அந்த  அறை கீழேயுள்ள அறைக்கும் செல்லும் வழி கூடத்தான். அந்த அறையில்தான் ஏழு சடலங்கள் வைக்கப்பட்டிருந்தன. அத்தனை பிணங்களிலும் கழுத்து மட்டும் அறுக்கப்பட்டிருந்தன. பார்சி இனத்தைச் சேர்ந்த நாற்காலி  விற்பவராக இருந்தார். ஓவியங்களையும் வரைந்து கொண்டிருந்தார். சின்ன வயதில் தன் சகோதரியோடு பாலுறவு வைத்திருந்தார். நான்கு குழந்தைகளையே இம்முறையில் பெற்றெடுத்தார். ஆனால் அவர்களை வளர்க்க காசு வேண்டுமே? பல்வேறு தில்லுமுல்லுகளை செய்யத்தொடங்க சிறை வாசம் தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை கிடைத்தது. சந்தோஷமாக வாழ வேண்டும்? என்ன செய்வது? வசதியான விதவைப் ப