மாருதி 800 காரை உருவாக்கிய கர்த்தா - ஒசாமு சுசுகி
மாருதி 800 காரை உருவாக்கிய கர்த்தா - ஒசாமு சுசுகி அண்மையில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகனின் விருப்பமான கார் மாருதி 800. பிஎம்டபிள்யூவைத் தாண்டி மாருதி காரையே முன்னாள் பிரதமர் நம்பினார். மக்களின் காரான மாருதி 800 ஐ உருவாக்கி சாலைகளில் ஓடவைத்த ஒசாமு டிசம்பர் 25 ஆம் தேதி மறைந்தார். 1930ஆம் ஆண்டு பிறந்தவருக்கு ஒசாமு மட்சுடா என்பதான் வைக்கப்பட்ட பெயர். பின்னாளில் சுசுகி மோட்டார் கார்ப் நிறுவன குடும்பத்தில் பெண் எடுத்த காரணமாக ஒசாமு மட்சுடா மாறி ஒசாமு சுசுகி என்றானது. இந்தியாவில் தொழில் தொடங்க முடிவெடுத்ததே ஒசாமுவின் துணிச்சலான குணத்திற்கு சான்று. அப்போது கார்களின் சந்தையே நாற்பதாயிரம் கார்கள் என்றுதான் நிலை இருந்தது. பதினான்காயிரம் பேர்களில் ஒருவர் காரை வாங்கிப் பயன்படுத்தி வந்தார். அன்றைய காங்கிரஸ் அரசு, மாருதி என்ற நிறுவனத்தை தொடங்கி சுசுகியுடன் கைகோர்த்து கார் ஒன்றை உருவாக்க முனைந்தது. இதற்கான ஒப்பந்தத்தில் ஆர்சி பார்க்கவா, வி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர். அன்றைய சூழலில் ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு வாகனமாக சுசுகி தடுமாறிக்கொண்டிருந்தது. ...