இடுகைகள்

பெங்களூரு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொருளாதார முன்னேற்றத்தில் சாதித்த கர்நாடகா - முதலீடு கொழிக்கும் பெங்களூரு

படம்
  கர்நாடகம் கர்நாடகா மாநிலத்தின் வரைபடம் பொருளாதார வளர்ச்சியில் சாதித்த கர்நாடகா தேர்தல் பணிக்காக இருபத்தைந்து ஆண்டுகளில் முப்பது முறை கர்நாடகாவிற்கு சென்றிருக்கிறேன். பல்வேறு எழுத்தாளர்களோடு சென்ற பயணத்தில் நிறைய ஆச்சரியங்கள் கிடைத்துள்ளன. கடந்த மாதம் கர்நாடகத்திற்கு அரசியல் பயணமாக சென்றேன். அங்கு நிறைய ஆச்சரியங்கள் எனக்காக காத்திருந்தன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகத்திற்கு சென்றபோது நிறைய வளர்ச்சி பணிகள் நிலுவையில் இருந்தன. அதாவது நடந்துகொண்டு இருந்தன. இம்முறை அவை முழுமை பெற்றிருந்தன. மாறாத காட்சியாக உள்ள இடங்கள் அப்படியேதான் இருந்தன என்றாலும் வளர்ச்சி என்ற பார்வையில் பார்த்தால் பரவாயில்லை என்ற மனதை தேற்றிக்கொள்ளலாம். பிற இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டால் கர்நாடகம் ஏழையான மாநிலம் கிடையாது. பெங்களூரு நகரத்தில் குவிந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் காரணமாக விவசாய முறைகள் நவீன தொழில்நுட்பத்துடன் கைகோத்தது. இதனால் அங்கு பொருளாதார முன்னேற்றம் உருவானது. ஆண்டிற்கு 8 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பெற்றது. தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு முன்னேற்றம் கிடைத்தது. நாம் கருத்தில் கொள்ளவேண்டி

மார்க்கெட்டைப் புரிந்துகொண்டு வளர வேண்டும்! - ஐஸ்வர்யா ரெட்டி, கென்சு

படம்
  ஐஸ்வர்யா ரெட்டி, கென்சு ஐஸ்வர்யா ரெட்டி நிறுவனர், கென்சு ஐஸ்வர்யா, இந்திய வடிவமைப்பில் சற்று நவீனத்துவத்தை குழைத்து பல்வேறு நாற்காலிகள் மற்றும் உள் அலங்காரங்களை செய்து வருகிறார். இவரது வடிவமைப்பு மூலம் தொன்மையான இந்திய வடிவமைப்பில் அமைந்த பொருட்கள் நவீனத்துவ அழகுடன் மிளிர்கின்றன. 2019ஆம் ஆண்டில்தான் கென்சு என்ற சொகுசு பொருட்களுக்கான நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.  உங்கள் தொழிலில் முக்கியமான ஊக்கம் என்ன? எனது தந்தை நாகராஜ் ரெட்டி, எனக்கு பெரும் ஊக்கம் தருகிறார். குறிப்பிட்ட காலத்தில் வணிகம் செய்யும் நாகராஜ் பல்வேறு சவால்களை சந்தித்து தொழிலை செய்தவற்கான ஊக்கத்தை எனக்கு கொடுத்திருக்கிறார்.  நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன? மார்க்கெட்டை புரிந்துகொண்டு காலத்திற்கேற்ப மாறி வளர்ச்சி பெறவேண்டும் என்பதைத்தான் கற்ற பாடம் என்பேன்.  தொழில்முனைவோராக நீங்கள் கூற நினைக்கும் அறிவுரை என்ன? பொறுமை விடாமுயற்சி தொழிலுக்கு முக்கியம். எதுவுமே இல்லாமல் அடிப்படையின்றி முன்னேறி வளர்வது எளிதல்ல. நமக்கான நெட்வொர்க்கை நாம் உருவாக்கிவிட்டால் தொழிலை எளிதாக  செய்ய முடியும். வாடிக்கையாளர் கொடுக்கும் கருத்துகளை திற

அசாதாரண இந்தியர்கள்! - முதியோர்களைக் காப்பாற்ற முன்வந்த முன்னாள் குற்றவாளி ஆட்டோ ராஜா

படம்
  தாமஸ் ராஜா - நியூ ஆர்க் மிஷன் இந்தியா தாமஸ் எனும் ஆட்டோ ராஜாவுக்கு இப்போது வயது 54 ஆகிறது. அவருக்கு வாழ்க்கையை மாற்றிய நிகழ்ச்சி எதையும் நினைவுகூர நேரம் இல்லை. தெருவில் ஆதரவில்லாமல் கிடப்பவர்கள் தூக்கிக்கொண்டு போய் தனது ஆர்க் மிஷன் இல்லத்தில் சேர்த்து பாதுகாப்பதைத்தான் செய்து வருகிறார்.  பள்ளியில் படிக்கும்போது பிற மாணவர்களை கடுமையாக கேலி, கிண்டல் செய்து வந்தார். மாணவர்களின் பணத்தைக் கூட அடித்துப் பிடிங்கிக்கொண்டிருக்கிறார். அவரது பெற்றோர் என்ன செய்தார்கள் என்று இங்கு கேள்வி வருகிறதல்லவா? அவர்களிடமிருந்து அன்பு கிடைக்கவில்லை என்பதுதான் தாமஸை இப்படி செயல்பட வைத்திருக்கிறது. இதன் போக்கிலேயே தான் ஒருநாள் பெங்களூருவில் பெரிய டான் ஆகவேண்டும் என லட்சியத்தை வளர்த்துக்கொண்டார்.  இந்த லட்சியத்தை நோக்கி கர்ம சிரத்தையாக தினந்தோறும் முன்னேறிக் கொண்டிருந்தார். அப்போது, பீதியானவர்கள் பள்ளி நிர்வாகம்தான். உடனே தாமஸை பள்ளியிலிருந்து நீக்கினர். பிறகு பெற்றோர் அவரை வீட்டிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர். தாமஸின் வீட்டைச் சுற்றியிருப்பவர்கள் பலரையும் அடித்து வெளுத்திருந்ததால் அவர் மீது சொன்ன குற்

உயிரிவேதியியல் துறையில் இந்தியாவை உயரத்துக்கு கொண்டு சென்ற பெண்மணி! - கிரண் மஜூம்தார் ஷா

படம்
  கிரண் மஜூம்தார் ஷா கிரண் மஜூம்தார் ஷா தொழிலதிபர் தனது வாழ்க்கையை தானே செதுக்கி தொழிலதிபர் ஆனவர் என்று சொல்லலாம்.  1953ஆம்ஆண்டு மார்ச் 23 அன்று பிறந்தவர், கிரண். பெங்களூரில் பிறந்தவரின் அப்பா, யுனைடெட் ப்ரீவர்ஸ் நிறுவனத்தில் தலைமை பொறுப்பாளராள இருந்தார். இவரது அம்மா,  யாமினி மஜூம்தார் சலவைத்தொழிலை நடத்தி வந்தார். கிரணுக்கு தொடக்கத்தில தனது அப்பாவின் தொழிலை அப்படியே பின்தொடர்ந்து செய்யலாம் என்று எண்ணம் இருந்தது. தனது மதுபான தயாரிப்பு தொடர்பான படிப்பை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகரில் பல்லாரட் பல்கலையில் முடித்தார். ஆனால் இந்தியாவில் நிலைமை வேறாக இருந்தது. பெண்களுக்கு மதுபானத் தயாரிப்பில் பெரிய வேலைகள் கிடைக்கவில்லை. அப்போது அவருக்கு ஐரிஷ் கம்பெனியான பயோகான் பயோகெமிக்கல்  வேலை தருவதாக கூறியது. அதனை உருவாக்கி நிறுவியர் லெஸ்லி ஆசின்குளோஸ்.  1978ஆம் ஆண்டு ஆசின்குளோஸ், கிரணை தனது பயோகான் இந்தியா நிறுவனத்தில் கூட்டாளியாக சேர அழைப்பு விடுத்தார்.  பயோகான் நிறுவனம் பாபெய்ன், இசின்கிளாஸ் எனும் என்சைம்களை பப்பாளி, மீனிலிருந்து பிரித்தெடுத்துக்கொண்டிருந்தது. இந்தியாவில் தொடங்கிய பயோகான் நிறுவன

இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவித்த அறிவியல் அமைப்பு! - இந்தியா 75

படம்
  இன்று அறிவியல் அமைப்புகள் அதில் சேர்க்கப்படும் பல்வேறு முட்டாள்களால் உலகளவில் அவமானப்பட்டுக்கொண்டிருக்கிறது. விலங்கின் கழிவுப்பொருளில் என்ன வேதிப்பொருட்கள் இருக்கிறது என ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒருகாலத்தில் இந்திய அறிவியல் கழகம் நிறுவப்பட்டதால்தான், இந்தியாவின் தொழில்துறை சிறப்பான வளர்ச்சியைப் பெற்றது என்பது உண்மை. இந்தியன் இன்ஸ்டிடியூட்ஆப் சயின்ஸ் எனும் அமைப்பு தொழில்துறைக்கான பல்வேறு ஊக்கத்தை கண்டுபிடிப்புகளை வழங்கியது. பொதுத்துறை நிறுவனங்கள் இந்திய மண்ணில் வேரூன்ற, இந்த அறிவியல் அமைப்பின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதைப்பற்றித்தான் இங்கே நாம் படிக்கப் போகிறோம்.  இந்திய அறிவியல் கழகத்தை உருவாக்குவதற்கான ஐடியாவைக் கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர். இவர், ஜப்பானில் இருந்து சிகாகோவுக்கு ஜாம்ஷெட்ஜி டாடாவுடன் ஒரே விமானத்தில் பயணித்தார். அப்போது அவர், மேற்குலகில் இருக்கும் அறிவியல் அமைப்புகளை போல இந்தியாவில் ஒன்றை அமைக்க வேண்டும். அப்போதுதான் இந்தியர்களின் திறமையை உள்நாட்டிலேயே பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று வலியுறுத்தினார். இதற்குப்பிறகுதான் 1898ஆம் ஆண்டு நவ.23 அன்று தனது முடிவை

தமிழகத்திற்கு ஏதாவது செய்வதற்கு கிடைத்துள்ள வாய்ப்புதான் இது! - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை

படம்
      முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை- விகடன்   அண்ணாமலை, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கரூரைச் சேர்ந்த குப்புசாமி அண்ணாமலை அண்மையில் டில்லியில் தன்னை பாஜக கட்சியில் இணைத்துக்கொண்டார். பெங்களூருவில் பணியாற்றிய அண்ணாமலை, 2019ஆம் ஆண்டு தனது பணியிலிருந்து விலகிக்கொண்டார். வீ தி லீடர்ஸ் என்ற அமைப்பு உருவாக்கி இளைஞர்களுக்கு உதவி செய்து வந்தார். அவரிடம் பேசினோம். அரசியலில் சேருவதற்கான முடிவை எப்படி எடுத்தீர்கள்? பொதுமக்களின் வாழ்க்கை நலமாக இருக்கவேண்டும் என்று நான் நினைத்தேன். அரசியல் மூலம் மக்களின் வாழ்க்கை மாறுதல் அடையும் என்று நான் நம்புகிறேன். நான் முதலில்  அரசியல் சார்ந்து இயங்கவில்லை. சமூகசேவைகளை செய்து வந்தேன். அரசியல் மாற்றம் சமூகத்தையும் மாற்றும் என்று நம்பினேன். எனவே, நான் அரசியலுக்குள் நுழைந்தேன். இது சரியான நேரம் என்று நம்புகிறேன். பாஜகவை எதற்கு தேர்ந்தெடுத்தீர்கள்? அடுத்த நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நிற்கும் எண்ணம் இருக்கிறதா? நான் மனதளவில் தேசியவாதி. முன்னரே இந்திய பிரதமர் மோடியின் நிர்வாகத்திறமை, தொலைநோக்கு  பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளேன். தமிழகத்தில் திராவிட ஆட்சிகள்