பொருளாதார முன்னேற்றத்தில் சாதித்த கர்நாடகா - முதலீடு கொழிக்கும் பெங்களூரு
கர்நாடகம் |
கர்நாடகா மாநிலத்தின் வரைபடம் |
பொருளாதார
வளர்ச்சியில் சாதித்த கர்நாடகா
தேர்தல் பணிக்காக
இருபத்தைந்து ஆண்டுகளில் முப்பது முறை கர்நாடகாவிற்கு சென்றிருக்கிறேன். பல்வேறு எழுத்தாளர்களோடு
சென்ற பயணத்தில் நிறைய ஆச்சரியங்கள் கிடைத்துள்ளன. கடந்த மாதம் கர்நாடகத்திற்கு அரசியல்
பயணமாக சென்றேன். அங்கு நிறைய ஆச்சரியங்கள் எனக்காக காத்திருந்தன.
ஐந்து ஆண்டுகளுக்கு
முன்னர் கர்நாடகத்திற்கு சென்றபோது நிறைய வளர்ச்சி பணிகள் நிலுவையில் இருந்தன. அதாவது
நடந்துகொண்டு இருந்தன. இம்முறை அவை முழுமை பெற்றிருந்தன. மாறாத காட்சியாக உள்ள இடங்கள்
அப்படியேதான் இருந்தன என்றாலும் வளர்ச்சி என்ற பார்வையில் பார்த்தால் பரவாயில்லை என்ற
மனதை தேற்றிக்கொள்ளலாம்.
பிற இந்திய
மாநிலங்களோடு ஒப்பிட்டால் கர்நாடகம் ஏழையான மாநிலம் கிடையாது. பெங்களூரு நகரத்தில்
குவிந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் காரணமாக விவசாய முறைகள் நவீன தொழில்நுட்பத்துடன்
கைகோத்தது. இதனால் அங்கு பொருளாதார முன்னேற்றம் உருவானது. ஆண்டிற்கு 8 சதவீத பொருளாதார
வளர்ச்சியைப் பெற்றது. தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு முன்னேற்றம் கிடைத்தது. நாம்
கருத்தில் கொள்ளவேண்டியதாக தனிநபர் வருமானம் வளர்ச்சி பெற்றதை கூறலாம்.
2020 ஆண்டு
தொடங்கிய பொருளாதார முன்னேற்றம், 2022ஆம் ஆண்டு கர்நாடகத்தை மூன்றாவது வளர்ச்சியடைந்த
மாநிலமாக மாற்றியுள்ளது. பத்தாண்டுகளில் சராசரி வருமானம் 2.8 லட்சமாக அதிகரித்துள்ளது.
பின்தங்கியுள்ள மாநிலம் என்ற பழைய அடைமொழியைக் கடந்து, வளர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறி
வருகிறது கர்நாடகா.
பெங்களூரு
வளர்ந்துள்ள நகரம் என்பதை அங்குள்ள போக்குவரத்து நெரிசலே அடையாளம் காட்டுகிறது. இந்தியாவில்
உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 45 சதவீத நிதி முதலீடு பெங்களூருவுக்குத்தான் செல்கிறது.
காரணம், தொழில்நுட்பத்துறை சார்ந்த திறமையான மனிதர்கள் பெங்களூருவில் உள்ளனர். கர்நாடகத்தின்
பொருளாதாரப் பங்களிப்பில் மூன்றாவது இடத்தில் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சி பத்தாண்டுகளாக
சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது. அடுத்து மைசூரு
சென்றோம். அங்குள்ள வருணா என்ற விவசாய கிராமத்தைப் பார்த்தோம். ஒருபுறம் குளத்தின்
நீரில் எருமைகள் குளித்துக்கொண்டிருந்தன. மற்றொரு புறத்தில் டோல்ஸ் அண்ட் கப்பானா பிராண்ட்
உடைகளை அணிந்துகொண்டிருந்த மனிதர்கள் திருமணத்தில் பங்கேற்று விழாவை சிறப்பித்துக்கொண்டிருந்தனர்.
அருகில், ஹேர் டை அடிக்க ரூ. 500 என கட்டணம் விதித்து சலூன் இயங்கி வந்தது. பல்வேறு
கடைகளில் யுபிஐ மூலம பணம் செலுத்தும் வசதி இருந்தது. சுன்னஹல்லி என்ற கிராமத்தில் குடிசைகளுக்கு
மத்தியில் நவீன குடியிருப்பு ஆச்சரியமாக தரும் விதமாக எழுந்து நின்றது.
கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி,
பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உதவியுள்ளது. நகரம் மட்டுமல்லாது கிராமத்திலும்
பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வேலை பார்ப்பவர்கள் பணத்தை எளிதாக தங்கள் பெற்றோருக்கு
அனுப்பி வைக்கும் வகையில் பணப்பரிமாற்ற வசதிகள் பரவலாகி உள்ளன.
கிராமத்தில் உள்ள பத்து பேர்களில் எட்டு பேர்களிடம்
ஸ்மார்ட்போன் புழக்கம் வந்துவிட்டது. இந்த வளர்ச்சி, ஐந்து ஆண்டுகளில் சாத்தியமாகியுள்ளது.
ஆர்காநட், மாங்கனி ஆகியவற்றை லாபம் தரும் பயிர்களாக அரசு விளம்பரம் செய்கிறது. விவசாயிகளும்
இப்பயிர்களை நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி பயிர் செய்கிறார்கள். இணையம் வழியாக கடன் பெறுவதும் எளிதாகியிருக்கிறது. 2010ஆம் ஆண்டு கர்நாடகத்தின் விவசாய வளர்ச்சி 7
சதவீதமாக இருந்தது. தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம்.
இதன் மறுபக்கமாக
ஊழலும், வேலைவாய்ப்பின்மையும் இருக்கிறது. அரசியல் வாதிகள் பலரும் ஏராளமான கல்வி நிறுவனங்களை
நடத்தி வருகிறார்கள். தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி நிலங்களை வாங்குவதை அதிக எதிர்ப்பின்றி
செய்கிறார்கள். டெல்லியின் நச்சுத்தன்மை வாய்ந்த தேசிய அரசியல் பிரச்னைகளை கடந்து இந்தியா
வளரும் என நம்புகிறேன். கர்நாடகா பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றதை இந்த வகையில் ஆச்சரியமாகவே
பார்க்கிறேன்.
ருச்சீர்
சர்மா
டைம்ஸ் ஆஃப்
இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக