இடுகைகள்

உள்நாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொழிற்சாலை வேலை என்பது மத்தியதர வர்க்க மக்களைக் காப்பாற்றாது!

படம்
  தொழிற்சாலை வேலை எனும் மாயத்திரை தொழிற்சாலையில் வேலை எனும் மூடநம்பிக்கை தொழிற்சாலையில் வேலை என்பது உலகம் முழுக்க உள்ள அரசியல்வாதிகளால் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்படுகிறது. உண்மையில் இன்று தொழிற்சாலைகள் எப்படி இயங்குகின்றன என்ற குறைந்தபட்ச புரிதல் உள்ளவர்கள் கூட இதை ஏற்க மாட்டார்கள். பேசுவதுதான் முக்கியம். பேசுவதை செயல்படுத்தினால்தானே பிரச்னை என அரசியல் தலைவர்கள் நினைக்கலாம். அப்படித்தான உலகம் முழுக்க நடப்பு இருக்கிறது. ‘’தொழிற்சாலையில் உற்பத்தி நடைபெறும்போது சமூகத்தில் உள்ள மூடநம்பிக்கைகள், அடிமை முறை ஆகிய சமூக தீமைகள் ஒழியும்’’ என ஃபெர்னான்டோ கலியானி என்ற சிந்தனையாளர் கூறினார். அவர் இந்தக் கருத்தைக் கூறி 250 ஆண்டுகள் ஆகியும் அரசியல்வாதிகள் இதே கருத்தில் கடந்த காலத்திலேயே வாழ்ந்து வருகிறார்கள். சிந்தனையாளர் கூறிய கருத்தில் பெரிய தவறு இல்லை. ஆனால், அது இன்றைய காலத்திற்கு பொருந்தாது. காலநிலை மாற்றம், மத்தியவர்க்கத்தின் வேலை, பொருளாதார வளர்ச்சி சுணக்கம், புவியியல் ரீதியாக அரசியல் நெருக்கடி என அனைத்துக்கும் சர்வரோக நிவாரணியாக தொழிற்சாலைகளைத் தொடங்குவதை அரசியல் தலைவர்கள் முன்வைக்க

இந்திய அரசின் புதிய தனித்துவமான ஸ்மார்ட்போன் ஓஎஸ்!

படம்
  ஸ்மார்ட்போன்களுக்கான புதிய ஓஎஸ் - எப்படி இருக்கும்? மத்திய அரசு இந்தியாவிற்கென தனித்துவ  ஸ்மார்ட்போன் இயக்க முறைமையைத் (OS) தயாரிக்க உள்ளது. இந்த இயக்க முறைமை, கூகுளின் ஆண்ட்ராய்ட், ஆப்பிளின் ஐஓஎஸ் ஆகிய இயக்கமுறைமைகளுக்கு மாற்றாக இருக்கும். இதுபற்றிய செய்தியை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.  இந்தியாவின் பிராண்ட்! தற்போது இந்தியச் சந்தையில் பன்னாட்டு நிறுவனமான கூகுளும், ஆப்பிளும்  ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மென்பொருள் மட்டுமன்றி, வன்பொருள் சந்தையையும் கட்டுப்படுத்தி வருகின்றன. இதற்கு நிகரான திறன் கொண்ட ஓஎஸ்ஸை தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தகவல்தொடர்பு அமைச்சகம் வல்லுநர்களிடம் கருத்து கேட்டுள்ளது.   புதிய இயக்கமுறைமையை இந்தியா உருவாக்கினால், அது இந்தியாவின் வணிக பிராண்டாக மாறும் என அரசு எதிர்பார்க்கிறது. மக்களுக்கு இரண்டு இயக்கமுறைமைகளைக் கடந்து மூன்றாவது வாய்ப்பாகவும் இது அமையும்.  ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களின் ஆதரவு மற்றும் உதவியால் ஸ்மார்ட்போன் இயக்கமுறைமையை உருவாக்க மத்திய அரசு தி