இடுகைகள்

அவசிய சத்துகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகள் தேவை- அரசு கவனிக்க வேண்டியது அவசியம்!

படம்
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகள் தேவை! தேசிய குடும்ப நலத்துறை ஆய்வு, இந்தியாவில்  38 சதவீதக்குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளது. இந்தியா, பொருளாதார ரீதியாக வளர்ந்துவரும் நாடு. நம் நாட்டின் எதிர்காலமான அடுத்த தலைமுறைக் குழந்தைகளின் உடல்நலன் விவாதிக்கப்படவேண்டிய சூழலில் உள்ளது.  மத்திய அரசின் உதவியுடன் பல்வேறு மாநில அரசுகள் பள்ளியில் குழந்தைகளின் ஊட்டச்சத்திற்காக உணவு,முட்டை, பயறுவகைகளை வழங்கி வருகின்றன. ஆனாலும், ஊட்டச்சத்து பற்றாக்குறை இன்னும் நீங்கிய பாடில்லை. காரணம், இவை குடும்பம் சார்ந்தே ஏற்படுவதுதான்.  தாய் ஆரோக்கியமாக இல்லாதபோது, அவரின் குழந்தை சிறந்த உடல்திறனுடன் எப்படி பிறக்க முடியும்?  இதைத் தவிர்க்க ஒடிஷாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதம் 12 முட்டைகளை வழங்கிவருகிறது மாநில அரசு. இந்த முட்டை வழங்கும் ஊட்டச்சத்துத் திட்டம்,  கர்ப்பிணி குழந்தை பெற்று ஆறுமாதங்கள் வரை அமலில் இருக்கும். ஒடிஷாவின் அங்குல் மாவட்டத்தில் 31.8 சதவீத குழந்தைகள்  (5வயதிற்குட்பட்டவர்கள்) ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 37.4% பேர் ரத்தச