இடுகைகள்

லஞ்சம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மோ(ச)டிகளின் தலைநகரம் டெல்லி!

படம்
  மோசடிகளின் தலைநகரம் டெல்லி! 2020ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பத்தொன்பது நகரங்களில் பணமோசடிகள் எங்கு அதிகம் நடைபெறுகிறது என ஆய்வு செய்யப்பட்டது. இதில் தேசிய குற்ற ஆவணகத்தின்  தகவல்படி டெல்லி முதல் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள் என்ற தலைப்பில் இந்த அறிக்கை கடந்த வாரம் வெளியானது.  பொருளாதார மோசடி சார்ந்து டெல்லியில் மட்டும் 4,445 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கடுத்த இடத்தில் மும்பை 3,927 குற்றங்களுடன் உள்ளது. ஜெய்ப்பூர் மூன்றாவது இடத்தைப் பிடித்து 3,127 குற்றங்களை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் குற்றங்களின் அளவு என்பது ஜெய்ப்பூரில் 10.4 சதவீதமாக உள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் 2.72, 2.13 சதவீதமாக உள்ளது. பாட்னா, லக்னோ, ஹைதராபாத் ஆகிய நகரங்களும் இப்பட்டியலில் உள்ளன.  மொத்த வழக்குகளில் 44.5 சதவீத த்திற்கு டெல்லி காவல்துறையினர் சார்ஜ்ஷீட் பதிவு செய்துள்ளனர். கொரோனா காரணமாக டெல்லியின் பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இதன் காரணமாக பொருளாதார குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.  நொய்டா, காச

பொருளாதாரத்தை அடித்து நொறுக்கும் ஊழல்!

படம்
பொருளாதார வளர்ச்சியை சிதைக்கும் ஊழல்!  இந்தியா, சீனா என இரண்டு நாடுகளிலும் ஊழல் பிரச்னை உள்ளது. ஆனால் சீனா ஊழலையும் மிஞ்சி பொருளாதார வளர்ச்சியில் சாதனை செய்து வருகிறது.  2019ஆம் ஆண்டில் வெளியான ஊழல் பட்டியலில் சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் 80ஆவது இடத்தில் உள்ளன. சீனாவில் ஊழல் பிரச்னை இந்தியாவைப் போலவே இருந்தாலும் 1961ஆம் ஆண்டு தொடங்கி அங்கு பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் வளர்ந்து வருகிறது. 1971 தொடங்கி 22 ஆண்டுகளாக 27 சதவீத பொருளாதார வளர்ச்சியை சீனா கொண்டுள்ளது. உலகளவிலான ஏற்றுமதிச் சந்தையில் இதன் பங்களிப்பு 1948இல் 0.3 இருந்து 2019இல் 13.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.  ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் ஆய்வுப்படி உலகளவில் உற்பத்திச்சந்தையில் சீனா, 28.4 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பங்கு அதேகாலகட்டத்தில் 3% ஆகும்.  இரண்டரை லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் ஏற்றுமதியை சீனா செய்து வருகிறது. இந்தவகையில் கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவின் ஏற்றுமதி பங்களிப்பு 1.7 சதவீதமாக உள்ளது.  இந்தியாவில் ஊழல் என்பது தேர்தல் மூலமாக நாடெங்கும் பரவலாக்கப்பட்டது. இதற்கு எதிராக 1974இல் ஜெயப்பி