இடுகைகள்

கும்பளாங்கி நைட்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தி, பஞ்சாபி, மலையாளத்தில் கலக்கும் புதிய(!) நடிகர்கள்!

படம்
  நடிகர், பாடகர் - தில்ஜித் தோசன்ஞ்சி அட்டகாசமான நடிகர் தில்ஜித் தோசன்ஞ்சி தில்ஜித் தோசன்ஞ்சி பஞ்சாபி மொழியில் முக்கியமான நடிகர். இப்போது இந்தி மொழி படங்களை, பஞ்சாப் மொழி படங்கள் வருகிறது என்றால் தள்ளி வைக்கும் அளவுக்கு சிறப்பாக தயாரிக்கிறார்கள். சந்தைப்படுத்தலும் அப்படித்தான். பஞ்சாபி மொழியில் தில்ஜித் நடித்த படங்கள் அனைத்துமே வசூல் மழை பொழிந்தவை. இவர் பாடி நடிக்கும் பாடல்களும் அப்படித்தான். பஞ்சாபி பாடல்களை மேற்கத்திய பாணியில் பாடுவது இவரது சிறப்பு அம்சம்.  இந்திப்படங்களிலும் இப்போது நடித்து வருகிறார். இவர் நடித்த அர்ஜூன் பட்டியாலா, குட் நியூஸ் ஆகிய படங்களில் இவரது நகைச்சுவை நடிப்பிற்காக பேசப்பட்டவை. பஞ்சாபி மொழியில் நடித்த ராக் ஹவுஸ்லா என்ற படம் தியேட்டர் வசூல் மட்டுமே இப்போதைக்கு 54 கோடிக்கும் அதிகம். இன்னும் இப்படம் அமேசானில் திரையிடப்படவில்லை.  பிலாதூரில் பிறந்தவர் குருத்துவாராவில் உள்ள பஜனைகளைப் பாடி இசையைக் கற்றுக்கொண்டவர். 2011 ஆம் ஆண்டு தொடங்கி படங்களில் நடித்து வருகிறார்.  தில்ஜித்திற்கு பிராண்ட் நிறுவனங்களின் உடை என்றால் கொள்ளைப் பிரியம். வாங்கும் சம்பளத்தில் பாதியை உடைக்கா

அண்ணன் தம்பிகளின் பாசமும், சண்டையும்! - கும்பளாங்கி நைட்ஸ்

படம்
கும்பளாங்கி நைட்ஸ் மலையாளம்(2019) இயக்கம் – மது ஸ்ரீ நாராயணன் இசை - சுஷின் ஸ்யாம் திரைக்கதை - ஸ்யாம் புஷ்கரன் கேரளத்தில் ஆற்றின் கரையில் வாழும் குடும்பத்தின் கதை. அந்தக் குடும்பத்தின் கலாசாரமே வேறுமாதிரி என ஊருக்குள் பேசினாலும், சகோதரர்களின் பாசம் மட்டும் குறைதில்லை. குடும்பத்தின் மூத்தவன் ஷாஜி. மெக்கானிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறான். இளையவன் பாபி, வயர்லெஸ் ஸ்பீக்கரில் பாட்டு கேட்டுக்கொண்டு சில்லறை வேலைகளை செய்து வருகிறான். நடுச்சகோதரன் டான்ஸ் அகாடமியில் பணிபுரிந்து வருகிறான். இளையவன் பள்ளியில் படித்து வருகிறான்.  பாபியில் வாழ்க்கையில் வரும் மாற்றம் அவனோடு பள்ளியில் படித்த பேபி மூலம் வருகிறது. பள்ளியில் பாபிக்கு லவ் லெட்டர் கொடுக்க முயன்று தோற்றவள் பேபி. இப்போது வேலையில்லாமல் சோம்பிக்கிடக்கும் பாபியைப் பார்த்ததும் அவளுக்கு காதல் காவிரி வெள்ளமாக பொங்குகிறது. அணைபோட அவளது குடும்பத்தினர் முயல்கின்றனர். குறிப்பாக அவளது அக்காவின் கணவர், பகத் பாசில். ஷாஜியின் குடும்பம் வறுமையில் உள்ளதாலும், அவரின் தந்தையின் இருதார மணத்தாலும் அவரது தம்பி பாபிக்கு பேபியை கொடுக