இடுகைகள்

சூழல்பாதுகாப்பு- ஏரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்களைக் கொல்லும் சால்டன் சீ ஏரி

படம்
நச்சு ஏரி ! கலிஃபோர்னியாவிலுள்ள ஏரி வேகமாக சுருங்கி வருவதோடு , நச்சு மாசுக்கள் மக்களின் வாழ்வை குலைத்து வருகின்றன . 2009 ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவிலுள்ள இம்பீரியல் கவுண்டியில் மிட்செல்லின் தங்கை மேரி ஆஸ்துமா தாக்குதல் ஏற்பட்டு சில மணிநேரத்தில் இறந்துபோனார் . காரணம் , நுரையீரலில் ஏற்பட்ட தொற்று . 27 வயதில் எண்பது வயதானவர் போல நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தது . இம்பீரியல் கவுண்டியில் ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பிரச்னை இருக்கிறது . பூச்சிக்கொல்லிகள் , பயிர்களை எரிப்பது , கார்களில் வரும் புகை , மணல் புயல் என ஒவ்வொரு காற்றின் ஒவ்வொரு அங்குலத்திலும் மாசுக்கள் அதிகரித்து வருகின்றன . சால்டன் ஏரியில் தொடர்ச்சியாக நீர் குறைந்து மாசுக்கள் அதிகரித்துவருகிறது . இரானின் ஊர்மியா ஏரி , ஆப்பிரிக்காவின் சாட் ஏரி ஆகியவை இதுபோல 90% வறண்டுபோன நிலையை எட்டியவை . சால்டன் ஏரி நீர் குறைய குறைய வறண்ட அதன் நீர்ப்பரப்பிலிருந்து வரும நச்சு துகள்கள் காற்றில் பரவத்தொடங்கியதுதான் மேரி போன்றவர்கள் ஆஸ்துமா தீவிரமாகி இறக்க காரணம் .