இடுகைகள்

ஐபிஎம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குற்றச்சாட்டுகளை பூமாரி போல எதிர்கொண்ட ஹூவாய் நிறுவனர் ரென் - பூக்களின் மத்தியில் ஒரு கோப்பை திராட்சை ரசம் மின்னூல் வெளியீடு

படம்
    அமெரிக்க அரசால் தேச துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனம்தான். ஆனால் அதன் வெற்றி என்பது எளிதாக வரவில்லை. அதன் நிர்வாக கொள்கைகளை வகுத்தவர், ரென். நிறுவனத்தின் ஆன்மிகத் தலைவரும் அவர்தான். எப்படி ஜெயித்தார் என்பதை பல்வேறு சம்பவங்களை விளக்கி சற்று எளிமையான முறையில் சுருக்கமாக சொல்லும் நூல்தான் இது. வளவளவென சுற்றி வளைக்காமல் என்ன விஷயமோ அதைப்பற்றி மட்டுமே கவனப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இதனால் போனில், டேபில் படித்தாலும் வேகமாக வாசிக்க முடியும். இது தொழில்நுட்ப ரீதியான சாதக அம்சம். இதைத்தாண்டி ரென் எப்படி ஹூவாவெய் நிறுவனத்தை கட்டமைத்தார். பன்னாட்டு உலக நிறுவனமாக அதை மாற்றினார் என்பதுதான் நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.  ஆசியாவில் தொழில்நுட்ப ரீதியாக ஒரு நிறுவனம் வெற்றி பெறுவது எளிதல்ல. இன்றும் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் அதிக விலை கொண்ட ஆப்பிளுக்கு நிகரான தரத்தைக் கொண்டுள்ளன. இப்படியொரு வளர்ச்சி எப்படி சீனத்துக்கு சாத்தியமானது என்பதையும் ரென் நூலில் கூறியுள்ளார். இப்படி ஆசியாவில் உள்ள இந்தியாவுக்கு அண்டை நாடான சீனாவை புரிந்துகொள்வதன் மூலம் நான் முன்னேற வேண்டிய பாதை தெ

வாடிக்கையாளர்களை உருவாக்குவதே நிறுவனத்தின் சாமர்த்தியம்!

படம்
  வாடிக்கையாளர் தான் தெய்வம்!   அண்மையில் ஊடகவியலாளர் கோகுலவாச நவநீதன் ஒரு புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில், மளிகை கடை ஒன்றில் வாடிக்கையாளர்களே தெய்வம். தெய்வத்திற்கு கடன் கொடுக்கும் தகுதி எனக்கில்லை எழுதியிருந்தது. இந்த வாசகத்தை எளிமையாக கடன் கிடையாது என்று எழுதலாம். ஆனால்  என மளிகை கடைக்காரர் கிரியேட்டிவாக யோசித்து வாடிக்கையாளரையும் உயர்த்திப்பிடித்து, தனது கடன் கிடையாது கொள்கையையும் சொல்லிவிட்டார்.   ஹூவெய்யின் வணிக சூத்திரமே இதுதான். ரென்  நடத்தும் நிறுவனம் தொலைத்தொடர்பு சேவை தொடர்பானது. தினசரி ஏராளமான கண்டுபிடிப்புகள், ஆய்வுகள் நடக்கும் துறை. இதில் எப்படி அவர் வாடிக்கையாளர்களை பொருட்படுத்தாமல் இருக்க முடியும். அப்படி செய்தால், அவரது நிறுவனம் விரைவில் வீழ்ந்துவிடும் அல்லவா? இந்த வணிக கொள்கைக்கு பெயர்தான் கஸ்டமர் சென்ட்ரிசிட்டி.   வாடிக்கையாளரின் சூழல், குணம், தேவை புரிந்து பொருட்களை தயாரித்து வழங்குவது. இதைத்தான் ஹூவெய் ரென் தனது ஊழியர்களுக்கு வகுப்பெடுத்து சொல்லித் தருகிறார். அதிக மாறுதல்களை சந்திக்காத அணுசக்தி துறையில் சில முதலீடுகளை ரென் செய்துள்ளார

ஐபிஎம் நிறுவனத்தின் வணிகத்தை விரிவாக்கிய விற்பனைப்பிரிவு ஆளுமை! தீபாளி நாயர்.

படம்
      தீபாளி நாயர் ஐபிஎம் விற்பனைபிரிவு இயக்குநர், தெற்காசியா, இந்தியா பிரிவு எல்அண்ட் டி, மகிந்திரா ஹாலிடேஸ், ஹெச்எஸ்பிசி ஆகிய நிறுவனங்களில் நிதி சார்ந்த பதவிகளை வகித்துள்ளார். தற்போது ஐபிஎம் நிறுவனத்தின் தெற்காசிய விற்பனை சமாச்சாரங்களை கவனிக்கிறார். இத்துறையில் நாயருக்கு 20 ஆண்டுகள் அனுபவம் உண்டு. ஐபிஎம் காரேஜ் என்ற திட்டத்தை இந்தியாவில் முதன்முதலில் செயல்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்த்தார். நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் ஐபிஎம் இப்போது தனது வணிகத்தை மீண்டும் செய்து வருகிறது. இவரது தலைமையிலான விற்பனைக் குழு கிரியேட்டிவிட்டி சார்ந்தும், விற்பனை சார்ந்து நல்ல நிலையில் உள்ளது. ஏராளமான விருதுகளையும் கூட வாங்கியுள்ளது. இம்பேக்ட் இதழில் 2018,2019 ஆகிய ஆண்டுகளிலும் செல்வாக்கு பெற்ற பெண்கள் பட்டியலில் தீபாளி நாயர் இடம்பெற்றுள்ளது அவரது திறமையை உலகிற்குச் சொல்லும். 6 அபர்ணா அகார்கர் நிகழ்ச்சி ஆக்கத்தலைமை, ஜீ5 இந்தியா ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் முதுகலைப்பட்டம் பெற்றவர். டைம்ஸ் குழுமத்தில் ஆசிரியர்குழுவில் பணியாற்றியவர். அண்மையில் இ வணிகம் சார்ந்த டிப்ளமோ ஒன்றை படித்துள்ள

ஐபிஎம் கணினியை மிஞ்சும் புதிய ரக குவாண்டம் கணினி!

படம்
          cc     புதிய குவாண்டம் கணினி !   அமெரிக்காவைச் சேர்ந்த ஹனிவெல் கணினி நிறுவனம் , உலகிலேயே சக்தி வாய்ந்த குவாண்டம் கணினியைக் கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது . ஹனிவெல் நிறுவனம் கூறியபடி , குவாண்டம் கணினி அமைந்தால் அது ஐபிஎம் நிறுவனத்தின் குவாண்டம் கணினிக்கு அடுத்தபடியாக அமையும் . பொதுவாக இக்கணினிகளின் கணக்கிடும் திறன் , தவறுகளின் எண்ணிக்கை ஆகியவை அதன் குவாண்டம் வால்யூம் அளவைப் பொறுத்து அமையும் . ஹனிவெல் குவாண்டம் கணினியின் அளவு 64 குவாண்டம் பிட்ஸாக உள்ளது . இது ஐபிஎம் கணினியின் திறனுக்கு அடுத்தபடியான திறன் கொண்ட கணினி ஆகும் . ” குவாண்டம் கணினியின் திறனை அளவிட 120 அல்காரிதம்கள் பயன்படுத்தப்படுகின்றன . எங்களது கணினி , அதிக தகவல்களைக் கொண்ட கணிதத்தை செய்யும் திறன் பெற்றது” என்கிறார் ஹனிவெல் நிறுவனத்தின் இயக்குநரான டோனி உட்லே . இக்கணினி , எந்திரவழி கற்றல் , வேதியியல் , பொருள் பற்றிய அறிவியல் ஆகிய துறைசார்ந்த அறிவைக் கொண்டது . மேலும் இக்கணினியின் திறன் காலத்திற்கேற்ப அதிகரிக்கும்போது , பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரச்னைகளை சமாளிக்கும் திறன் பெற்று விளங்க வாய்ப்புள்ள

செயற்கை நுண்ணறிவு விளையாட்டில் வெல்வது இப்படித்தான்!

படம்
1951 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலையைச் சேர்ந்த கிரிஸ்டோபர் ஸ்டார்சே, வெற்றிகரமான ஏ.ஐ. விளையாட்டு புரோகிராமை எழுதினார். செக்கர்ஸ் எனும் விளையாட்டு புரோகிராம் இங்கிலாந்திலுள்ள ஃபெரான்டி மார்க் 1 எனும் கணினியில் இயங்கியது. அமெரிக்காவில் முதல் விளையாட்டு புரோகிராமான செக்கர்ஸ் ஐபிஎம் 701 என்ற கணினியில் வெற்றிகரமாக இயங்கியது. ஆர்தர் சாமுவேல் என்ற ஆராய்ச்சியாளர் இந்த விளையாட்டை மேம்படுத்தினார். இதன்விளைவாக, 1962 ஆம் ஆண்டு கனெக்டிகட்டில் நடைபெற்ற கணினி விளையாட்டுப் போட்டியில் செக்கர்ஸ் புரோகிராம் வென்றது. ஜான் ஹாலந்து என்பவர் இந்த கணினி புரோகிராம்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றார். ஐபிஎம் 701 இல் இவர்  நியூரல் நெட்வொர்க் எனும் பதத்தை உருவாக்கி, மல்டி புரோசசர் கணினிகளை உருவாக்கும் கருத்தை வெளியிட்டார். இதனை அடியொற்றி 1957 ஆம்ஆண்டு ஆலன் நியூவெல், ஜே.கிளிஃபோர்டு ஷா ஆகியோர் ஜெனரல் பிராப்ளம் சால்வர் எனும் புரோகிராமை கண்டுபிடித்தனர். பரிசோதனை அடிப்படையில் பல்வேறு புதிர்களை இந்த புரோகிராம் கண்டுபிடித்தது. 1992 ஆம் ஆண்டு ஐபிஎம்மின் TD-Gammon எனும் விளையாட்டை கணினி ஆராய்ச்சியாளர் ஜெரா

க்ளவுட் கம்ப்யூட்டிங்கின் சாதனை என்ன?

படம்
மேக கணிணி கடந்த ஆண்டு அக்டோபரில் ஐபிஎம் நிறுவனம், லினக்ஸ் நிறுவனமான ரெட்ஹேட்டுகு 33 பில்லியன் டாலர்களை கொடுத்து தன் மேக கணினி சேவை மேம்படுத்தியுள்ளது. இந்த மார்க்கெட்டில் ஐபிஎம்மின் சந்தை ரேங்க்: 4 அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை பத்து பில்லியன் டாலர்கள் செலவில் மேக கணியகத்தை அமைக்கவிருக்கிறது. கடந்தாண்டில் மட்டும் மேக கணியகத்திற்கான அடிப்படை கட்டமைப்புக்காக செலவிடப்பட்ட தொகை 80 பில்லியன். அலிபாபா நிறுவனம் மேக கணியக கட்டமைப்புச் சேவையை வழங்கி சம்பாதித்த தொகை ஒரு பில்லியன் டாலர்கள். ஆண்டுதோறும் அலிபாவின் வளர்ச்சி 84 சதவீதம். உலக கார்பன் வெளியீடாக தகவல் மையங்கள் கூறிய அளவு 0.3% அரிசோனாவிலுள்ள ஆப்பிளின் தகவல் மையத்திற்கு தேவைப்படும் மின்சார அளவு - பனிரெண்டாயிரம் வீடுகளில் சேமிக்கும் சோலார் மின்சாரம் . நன்றி: க்வார்ட்ஸ்