இடுகைகள்

ஒயின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பீர் குடித்தால் ஹேங் ஓவர் ஏற்படுகிறதா?

படம்
giphy மிஸ்டர் ரோனி பீர் குடிப்பதற்கு முன்பு ஒயின் குடித்தால் ஹேங்ஓவர் ஏற்படாது என்கிறார்களே? அது உண்மையா? இந்த விஷயத்தில் பாதிப்பு ஏற்படுத்துவது ஆல்கஹால்தான். இதில் பல்வேறு மதுபானங்களில் உள்ள ஆல்கஹால் அளவுதான் போதை ஏற்படுத்துகிறது. பீர் குடிப்பதற்கு முன்பு வைன் என்பது ஆராய்ச்சிப்படி மோசமான தலைவலியை சிலருக்கு ஏற்படுத்தியது. அடிப்படையில் மது குடித்தால் உடலிலுள்ள நீரை டீ, காபியை விட வேகமாக வெளியேற்றுகிறது. இதன் காரணமாக உங்களுக்கு உடலில் நீரின் அளவு மிகவும் குறைகிறது. இதனால் காலையில் தலைவலி கண்டிப்பாக ஏற்படும். இதனைத் தவிர்க்க வைனை முன்னால் குடித்து பீரை பின்னால் குடிக்கலாமா என்று கேட்க கூடாது. மதுவை குறைவாக அருந்தினால் பாதிப்பு குறைவாக இருக்கும். மதுவை கல்லீரல் பிரித்து செரிக்கும்போது அசிட்டால்டிஹைடு எனும் நச்சுப்பொருள் உருவாகிறது. இதுவும் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே எதைக்குடித்தாலும் நீரை குறிப்பிட்ட இடைவெளியில் நீங்கள் குடித்தே ஆகவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் நீர் நமது உடலில் இருந்து வெளியேறியே ஆகவேண்டும். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

ஓயின் பாட்டில்களை கிடைமட்டமாக வைப்பது ஏன்?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி ஓயின் பாட்டில்களை கிடைமட்டமாக வைப்பது ஏன்? இப்படியெல்லாம் நீங்கள் கேள்வி கேட்கவேண்டும் என்பதால்தான். சும்மா ஜாலிக்காக சொன்னேன். பொதுவாக பாட்டிலை மூடியுள்ள கார்க் தன் ஈரப்பதத்தை இழக்க கூடாது என்பதுதான் கான்செஃப்ட். கிடைமட்டமாக ஒயின் பாட்டிலை வைக்கும்போது அதன் தரம்  கூடுவதாக உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள். பாட்டிலிலுள்ள நொதித்தலும் சீராக நடைபெறுகிறது. நன்றி - பிபிசி

வெப்பமயமாதலின் விளைவுகள் என்ன?

படம்
புத்தக அறிமுகம் உலகில் ஏற்பட்டுள்ள வெப்பமயமாதலால் அமெரிக்காவில் காட்டுத்தீ பற்றுகிறது. அல்லது மேக உடைப்பு ஏற்பட்டு வெள்ளம், அல்லது புயல் என ஏதேனும் மிதமிஞ்சி தாக்குகிறது. வெப்பமயமாதலுக்குப் பிறகு உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம், அரசியல் மாற்றங்களைக் குறித்து ஆசிரியர் டேவிட் பேசுகிறார்.  நீர் எப்படி நமக்கு முக்கியமோ அதேபோலத்தான ஒயின் மற்றும்  காபி கூட. லண்டன் டூ சான்பிரான்சிஸ்கோ செல்லும் விமானப் பயணத்தில் பல்வேறு நீர்ம பொருட்களைப் பற்றி மார்க் விவரிப்பதே நூலின் சுவாரசியம். லேபில் உள்ள பொருட்களோடு அலையடிக்கும் கடலும் உண்டு.  பாலினம் பொறுத்து ஆண், பெண் மூளைகளின் திறன்கள் மாறுவது உண்மையா என்பது பற்றி தீர்க்காமாக ஜினா ரிப்பன் ஆராய்ந்து எழுதியு ள்ள நூல் இது.  அமெரிக்காவை கதிகலக்கிய ஏலியன் என்ற கம்ப்யூட்டர் ஹேக்கரின் கதை இது. தற்போது பல்வேறு வங்கிகள் நிறுவனங்களின் பாதுகாப்புக்கு உதவி வருகிறார் என்றாலும் முன்னர் இவரது வாழ்க்கை வேறுவிதமாக இருந்தது. அது குறித்த அறிமுகம் அருமை.  நன்றி: குட்ரீட்ஸ்