இடுகைகள்

அசோக் கெலாட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய வரலாறெங்கும் காங்கிரஸ் தடம் பதித்துள்ளது

படம்
ndtv.com நேர்காணல் அசோக் கெலாட், முதல்வர், ராஜஸ்தான் தமிழில்: ச.அன்பரசு எதிர்க்கட்சிகள் மீது தேர்தல் சமயத்தில் திடீர் ஐடி ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஊழலை எதிர்க்கும் நோக்கம் என பிரதமர் மோடி கூறியுள்ளாரே? பாஜக அலுவலகம், இன்று நாடெங்கும் சிறிய கிராமங்களிலும் கூட தொடங்கப்பட்டு வருகிறது. இதற்கான பணம் அவர்களுக்கு எப்படி கிடைத்தது? பாஜக வின் அலுவலகம்தான் கருப்பு பணத்திற்கான மூலாதாரம். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விட நாட்டிற்கு ஒருவர் சேதம் இழைத்துவிட முடியுமா என்ன?  ரஃபேல் ஊழல் வழக்கு பிரச்னையும் கூட இந்தியாவின் மரியாதையை உலகளவில் அழித்துள்ளது. பிரதமர் மோடி புல்வாமா தாக்குதலை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன என்று கூறினார். இது உங்களை பாதிக்கவில்லையா? இளைஞர்களை, மக்களை உணர்ச்சிக் கொந்தளிப்புக்குள்ளாக்கும் பேச்சுக்களை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்வது நல்லது. இது இம்முறை வேலை செய்யாது. ராஜிவ்காந்தி வாக்களிக்கும் வயதை பதினெட்டாக மாற்றினார். காரணம், இளைஞர்களின் புத்தியை, செயல்படும் திறனை, முடிவெடுப்பதை அவர் நம்பினார். ஆனால் மோடி இளைஞர்களை தவறான திசையில்