இடுகைகள்

இந்திரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அவசரகாலத்தையும், அதில் நடைமுறையான குடும்பக்கட்டுப்பாட்டு விவகாரத்தை அங்கதமாக்க முயலும் நாவல்! - 1975 - இரா முருகன்

படம்
  1975 இரா முருகன் கிழக்குப் பதிப்பகம்  pages 449 விலங்குப்பண்ணை, 1984 ஆகிய நாவல்களை நினைவுபடுத்துகிற படைப்பு. அதாவது, நல்ல அவல நகைச்சுவையை படிக்கலாமே என தூண்டுகிற இயல்பு கொண்டது. காங்கிரஸ் அரசின் சர்வாதிகாரம், கண்காணிப்பு ஆகியவற்றை அவல நகைச்சுவையாக்கி ஆசிரியர் எழுதியுள்ள நாவல்தான் 1975. இரா முருகன், வங்கிப் பின்னணியைக் கொண்டு எமர்ஜென்சி காலகட்டத்தை பகடி செய்திருக்கிறார். இந்நாவலை கிழக்கு பதிப்பகம் எதற்கு வெளியிட்டிருக்கிறது என்ற காரணத்தை நாம் ஆராய அவசியமே இல்லை. வலதுசாரி பதிப்பகம். அதற்கு உகந்தபடி நாவலின் மையப்பொருளை தேர்ந்தெடுக்கிறது.  இருபத்தொரு மாதங்கள் நீடித்த எமர்ஜென்சியை நினைவூட்டும் விதமாக அதே எண்ணிக்கையில் அத்தியாயங்கள் உள்ளன. சென்னை, திருநெல்வேலி, தில்லி என மூன்று நகரங்களுக்கு கதை நகர்கிறது. அதேபோல பாத்திரங்களும் மாறுகிறார்கள். அனைத்திலும் மாறாத ஒன்று, இருபதம்ச திட்டம். ஐந்து அம்ச கொள்கை, பேச்சைக் குறை. வேலையைச் செய் என்ற வாசகம் ஆகியவைதான்.  நாயகன் சிவசங்கரன் போத்தி வங்கி ஊழியன். அவனுக்கு அரசியலோ, தத்துவமோ, அப்பா வழியில் கூடக்குறைய கற்ற ஆயூர்வேதம் கூட முக்கியமில்லை. வங்கிப்பண

வங்கிகள் தேசியமயம் - 50 ஆண்டுகள்- என்ன நடந்தது?

படம்
வங்கிகள் தேசியமயம்: 50 ஆண்டுகள் நிறைவு! வங்கிகள் தேசியமயமாகி இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று 14 வங்கிகளை அரசு வங்கிகளாக மாற்றியது. ரிசர்வ் வங்கி வரலாற்றில் 1947க்குப் பிறகு அமலான முக்கியமான நிதிச் சீர்த்திருத்தம் இதுவே. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை தொண்ணூறுகளில் நடைபெற்ற தாராளமயமாக்கலோடு பொருளாதார வல்லுநர்கள் ஒப்பிடுகின்றனர். வங்கிகள் தேசியமயமானது காங்கிரசுக்கு அன்று ஆதாயம் அளித்தது. ஆனால், பின்னாளில் அரசுகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தின.  அன்றைய இந்தியாவில்  தனியார் வங்கிகள் செயற்பட்டு வந்தாலும், அவற்றின் மீது பெரியளவு நம்பிக்கை உருவாகவில்லை. மக்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றுவது தினசரி செய்தியாக மாறி வந்தன. 1951-68 வரையிலான காலத்தில் தனியார் வங்கிகள் தொழில்துறைக்கு 68 சதவீத கடன் தொகைகளையும், விவசாயத்திற்கு 2 சதவீத கடன்களையும் அளித்தன. அக்காலகட்டத்தில்தான் கிராமங்களிலுள்ள விவசாயத்துறைக்கு உதவுவது போல வங்கிகள் தேசியமயம் என்ற இந்திய அரசின் உத்தரவு வெளியிடப்பட்டது.

வங்கிகள் தேசியமயமானதன் 50 ஆண்டு நிறைவு!

படம்
வங்கிச் சீர்த்திருத்தங்களில் முக்கியமானது 14 வங்கிகளை அரசு தேசியமயமாக்கியதுதான். இது காங்கிரசுக்கு சோசலிச அரசு என்று பெயர் தந்ததோடு, தேர்தலிலும் வெல்ல உதவியது. ஏழை மக்களிடம் இதன் மூலம் இந்திராவுக்கு செல்வாக்கு பெருகியது. 1960 ஆம் ஆண்டு பல்வேறு தனியார் வங்கிகள் மக்களின் பணத்தை ஏமாற்றிவிட்டு காணாமல் போய்க்கொண்டிருந்தன. பெங்களூருவில் ஜூலை 12 அன்று வங்கிகளை தேசியமயமாக்குவதை நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாயிடம் கூறினார். ஆனால் அவர், தனியார்மயத்தை , தொழிற்சாலைகளுக்கு ஊக்கம் தருபவர். எப்படி அதை ஏற்பார்? உடனே தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அப்போது இந்திராவுக்கு பதவியை தக்க வைத்துக்கொள்ளும் அவசியமும் இருந்தது. இந்திராவின் தேசியமயமாக்கல் முடிவுக்கு ஆர்பிஐ ஆளுநர் எல் கே ஜா, ஐ பொருளாதார செயலாளர் ஜே படேல் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். அப்போது வங்கிகள் விவசாயத்திற்கு 2 சதவீதத்திற்கு மட்டுமே வங்கிகள் தந்து வந்தன. தொழிற்சாலைகளுக்கு 68 சதவீத கடன்களை வழங்கியிருந்தன. அப்போதுதான் பசுமைப் புரட்சி திட்டமும் அமலுக்கு வந்தது. திட்டத்தைத் தயாரித்து அமைச்சரவையைக் கூட்டி முடிவைச் சொல்லி அவர்களின் அனு

தேர்தலின் கதை!

படம்
Wishesh தேர்தலின் கதை! 1951 - 52 காங்கிரசின் காலம். இடதுசாரி, சோசலிச கட்சிகள் இணைந்து  போட்டியிட்டன.  சோசலிச கட்சியை முன்னிலைப்படுத்திய தேவ் ஆச்சார்ய நரேந்திர தேவ், பனிரெண்டு சீட்டுகளை வென்றார். கிசான் மஸ்தூர் பிரஜா பார்ட்டியின் கிருபாளினி 9 சீட்டுகளை வென்றார். தேர்தலில் ஜனதா கட்சியின் சியாம பிரசாத் முகர்ஜி 3 சீட்டுகளை வென்றார். 1957 இம்முறையும் கைக்கட்சியே வென்றது. பிளவுபடாத இடதுசாரி கட்சி 33 சீட்டுகளை வென்றது. ஜனதா கட்சி முன்னர் பெற்றதை விட இருமடங்கு வாக்குகளைப் பெற்றாலும் மைனர் கட்சியாகவே இருந்தது. அம்பேத்கரின் அனைத்திந்திய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு(SCF) தேர்தலில் ஆறு சீட்டுகளை வென்றது குறிப்பிடத்தக்க நிகழ்வு. 1962   இந்தியாவின் மூன்றாவது தேர்தலில் கட்சிகளிடையே பிளவுகள் தோன்றின. ராம் மனோகர் லோகியா, பிஎஸ்பி கட்சியை விட்டு விலகி சோசலிச கட்சி சார்பில் நின்றார். சுதந்திர வணிகம் உள்ளிட்ட கோரிக்கைகளோடு காங்கிரஸ் கட்சியினர் சிலர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியை ஆதரித்தனர். 1967 நேரு இறந்தபின் நடந்த தேர்தல். காங்கிரஸ் இக்காலத்தில் செல்வாக்கில் பெரும் சரிவைச் ச