இடுகைகள்

கீர்த்தி சுரேஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தான் வளர்த்த நாய் மூலம் பால்ய கால காதலியை பழிவாங்கும் நாயகன் - ரிங் மாஸ்டர் - ரஃபி

படம்
  ரிங் மாஸ்டர் - திலீப், கீர்த்திசுரேஷ், ஹனிரோஸ் ரிங் மாஸ்டர்   ரிங் மாஸ்டர் இயக்கம் – ரஃபி திலீப், ஹனிரோஸ், கீர்த்தி சுரேஷ், சுரேஷ் வெஞ்சரமூடு சர்க்கஸ் கூடாரத்தில் வளர்க்கப்பட்ட அப்பாவுக்கு பிடிக்காத பிள்ளையான பிரின்ஸ், நாய் மருத்துவமனையில் தனது நண்பர் முத்துவுடன் வேலை செய்கிறார். வெளிநாடு சென்று வேலை தேடிக்கொள்ள நினைப்பவருக்கு   கிடைப்பதோ, பணக்கார வீடுகளில் நாய் பராமரிப்பு வேலைதான். அந்த வேலையின் மூலமே அவருக்கு நினைத்துப் பார்க்க முடியாத வாய்ப்புகள் கிடைக்கின்றன அப்போது, கடந்தகாலத்தில் பிரின்ஸைப் பயன்படுத்திக்கொண்டு காதலிப்பதாக நடித்து சினிமாவில் உயர்ந்த பால்ய கால தோழியையும் சந்திக்கிறார். இருவருக்குள்ளும் உறவு உருவானதா, பிரின்ஸ் வன்மம் கூடி பழிவாங்கினாரா என்பதே கதை.   படம் முழுக்க   காமெடிதான். எனவே அதிகம் லாஜிக் பார்த்தால் ஜனப் பிரியனின் நகைச்சுவையை ரசிக்க முடியாமல் போய்விடும். எனவே, ஜாலியாக ரசியுங்கள். லிசா என்ற நாயைப் பார்த்துக்கொள்ளும் வேலை பிரின்சுக்கு கிடைக்கிறது. அதை சரியாக செய்தால், அந்த நாயின் உரிமையாளர் மூலம் வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அந்த நாய்

நம்பிக்கை அளிக்கும் கலை நாயகர்கள் - கீர்த்தி சுரேஷ், சைதன்ய தம்கனே, பிரியங்கா சர்மா

படம்
  கீர்த்தி சுரேஷ் என்ன ஒரு சிரிப்பு! கீர்த்தி சுரேஷ் நடிகை மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமார், நடிகை மேனகா ஆகியோருக்கு பிறந்த பெண். அப்பாவின் தயாரிப்பில் சில படங்களில் குழந்தையாக நடித்தார். சென்னையில் உள்ள பியர்ல் அகாடமியில் ஃபேஷன் டிசைனிங் படித்தார்.  பிறகு  நாம் நடிக்கலாமே என்று தோன்ற அதை அப்படியே மனதில் தோன்றியபடியே செய்தார். முதலில் மலையாளத்தில் நடித்தார். அப்படியே தமிழ், தெலுங்கிற்கு வந்தார்.  முதலில் தமிழில்  முகம் தென்பட்ட படங்களில் பெரிதாக நடிக்கும் வேலையே இல்லை. அந்தளவு தான் கீர்த்திக்கு வாய்ப்பு கிடைத்தது. பாடலுக்கு வருவார். சிரிப்பார். இப்படித்தான் ரஜினி முருகன், ரெமோ, சர்க்கார். பைரவா படங்களில் இவரது பங்களிப்பும் இருந்தது.  2018இல் இவர் நடித்த மகாநடி என்ற படம் யாருமே எதிர்பார்க்காத வெற்றியாக அமைந்தது. நடிகை சாவித்ரியை உடல் அளவிலும் பிரதிபலித்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினார். பலரும் நடிப்பை பாராட்டினர். இதில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினரும் உண்டு.  பிறகுதான் பெங்குயின், மிஸ் இந்தியா, அண்ணாத்தே படங்களில் நடித்தார். இந்த படங்களின் முடிவு என்ன என்று கேட்க