இடுகைகள்

சிபாரிசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிபாரிசு ஏற்படுத்தும் சங்கடங்கள்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  3 13.8.2021 அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? முத்து செல்லக்குமார் போன்றவர்கள் திறமையானவர்களாக இருந்தால் கவலைப்படவே வேண்டாம். அவர்களுக்கான வாய்ப்பு கேட்காமலேயே அவர்களுக்கு கிடைக்கும். அதில் சாதித்து வெல்ல முடியும். நான் வேலை செய்யும் இதழின் ஆசிரியர் வலதுசாரி கருத்து கொண்டவர். இவர் போன்றவர்களிடம் திறமையைத் தாண்டி கவனமாக நடந்துகொள்வது அவசியம். எனக்கு வேலை சிபாரிசில் தான் கிடைத்தது. நான் பிறருக்கு சிபாரிசுகளை செய்வது கிடையாது. இதுவரையிலும் வேலை சிபாரிசுகள் பெரும் சங்கடங்களையே உருவாக்கியுள்ளது.   இப்போது முழங்கால் வழி மட்டுப்பட்டுள்ளது. இதனால் நடக்க முடிகிறது. உடல் பலவீனமாக இருப்பதை உணர்கிறேன். இதனால் முட்டை சாப்பிட முயன்று வருகிறேன். அலுவலகத்திற்கு நடந்து சென்று வருவதை ஈடுகட்ட சரியாக சாப்பிடுவது அவசியம்.  அன்பரசு  4 22.8.2021 அன்பிற்கினிய நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? வேலைப்பளு காரணமாக நேரம் ஒதுக்கி பேச முடியவில்லை. அலுவலகத்தில் அமர்ந்து வலைப்பூ எழுதுவதில்லை என முடிவு செய்துள்ளேன். எனவே அறைக்கு வந்துதான் செய்திகளை, கட்டுரைகளை தட்டச்சு செய்ய

பத்திரிக்கை அரசியல், கற்றலைத் தடுக்கும் பரபரப்பு, கருத்து சுதந்திரம் - கணியம் சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
        த.சீனிவாசன், நிறுவனர், கணியம்     5 சுதந்திரமான செயல்பாடும் , தடையும் ! 27.1.2021 அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? எங்கள் இதழ் குழுவினரை இன்னும் நிர்வாகம் ஆபீசுக்கு வரச் சொல்லவில்லை . இவர்களின் வேகமான செயல்பாடுகளால் மயிலாப்பூரிலுள்ள வாடகை அறையை யும் கூட காலி செய்யவில்லை . ஏதேனும் முடிவெடுத்தால்தான்தானே ? அறைக்கு தங்கினாலும் இல்லாவிட்டாலும் வாடகை தண்டச்செல்வு . உங்களது உதவியால் இப்போது மடிக்கணினி பிரச்னையின்றி இயங்குகிறது . இந்த அளவில் கணினி இயங்குவதே போதும் . இனிமேல் நூலை எழுதி எனது வலைத்தளத்தில் வெளியிடுவதோடு நிறுத்திக்கொள்ளவிருக்கிறேன் . பிறரது வலைத்தளங்களில் வெளியிடுவதற்கு இனி மின்னஞ்ச்ல்களை அனுப்ப போவதில்லை . சில வலைத்தளங்களில் நூல்களை எந்த அறிவிப்புமின்றி தகவல்களும் சொல்லாமல் வெளியிடுகிறார்கள் . பிறகு அதை நீக்கும்போது மட்டும் இப்படி செஞ்சிட்டீங்களே என பிலாக்கணம் பாடுகிறார்கள் . சுதந்திரமான கருத்துகளுக்கு நிறைய இடங்களில் ஏன் எங்கேயுமே தடைகள் உண்டு . ஸ்டார்ட்அப் பற்றிய நூலொன்றைப் படி