இடுகைகள்

தேசியக்கொடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொடியை நகல் எடுக்க கூடாது!

படம்
          தனித்துவம் கொண்ட கொடி! வாகைப்பூவோ, தூங்குமூஞ்சி பூவோ உருவாக்கும் கொடி தனித்துவமாக சொல்ல வரும் கருத்தை தெளிவாக கூறவேண்டும். இணையத்தில் நிறைய கொடி வடிவமைப்புகள், டெம்பிளேட்டுகள் உள்ளன. அதையெல்லாம் எடுத்து இசைக்கலைஞர் அனிருத் போல சாம்பிள் பார்த்து கடன் வாங்கி வெற்றியடையலாம் என நினைக்காதீர்கள். எல்லோருக்கும் அந்த அதிர்ஷ்டம் கிடைக்காது. நாட்டின் கொடி என்றால் அங்கு வசிக்கும் மக்கள், கலாசாரம், பெருமை, நிலப்பரப்பு என நிறைய விஷயங்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கவேண்டும். இன்னொரு நாட்டின் கொடியைப் பார்த்து அப்படியே நகல் எடுப்பது விபரீதத்தில்தான் முடியும். கானா நாட்டின் கொடியைப் பாருங்கள். இதில் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய நிறங்களோடு நடுவில் கருப்பு நட்சத்திரம் உள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள பிறநாட்டு கொடிகளை அடிப்படையாக கொண்டு கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தனித்தன்மையாக உள்ளது. இந்தோனேசியா நாட்டின் கொடியைப் பார்த்தால் அப்படியே மொனாக்கோ நாட்டு கொடியைப் போலவே உள்ளது. ஆனால் இரு நாடுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கொடியை அப்படியே தலைகீழாக்கினால் ஸ்பெயின், போலந்த...

இந்தியாவின் அடையாளங்கள் பற்றி அறிந்துகொள்வோம்!

படம்
  இந்தியா தனது 75 ஆவது சுதந்திர தினத்தை கடந்து வந்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் நிறைய மாற்றங்களை இந்தியா சந்தித்துள்ளது. பல்வேறு சோகமான சம்பவங்களையும், மகிழ்ச்சியான நினைவுகளையும் நாம் பார்த்துள்ளோம். இந்தியாவின் அடையாளங்கள் என்றால் நமக்கு என்ன நினைவுக்கு வருகிறது. கொடி, சிங்கம் ஆகியவைதானே அவை பற்றிய விஷயங்களைப் பார்ப்போம்.  இந்திய அரசின் சின்னமான மூன்று சிங்கங்கள் கொண்ட முத்திரை நாணயம், பணம், பாஸ்போர்ட், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அனைத்திலும் பதியவைக்கப்படுகிறது. 1875ஆம் ஆண்டு பங்கிம் சந்திர சட்டர்ஜி தேசியகீதமான வந்தே மாதரம் பாடலை உருவாக்கினார். சிங்க சின்னம் என்பது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிங்கம் அதிகாரப்பூர்வ அரசு சின்னமாக இருந்தாலும் தேசிய விலங்கு என்பது புலியாக உள்ளது.  தேசியக்கொடி  1947ஆம்ஆண்டு ஜூலை 22 அன்று, அரசியலமைப்பு ஹாலில் குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத், பிரதமராக பதவியேற்க உள்ள நேரு ஆகியோர் தேசியக்கொடியை தீர்மானிக்க கூடியிருந்தனர். நேரு, தேசியக்கொடியின் நிறம், சர்கா ஆகியவற்றை எப்படி இருக்கவேண்டும் என கூறியிருந்தார். 1906ஆம் ஆண்டு சுயராஜ்ய கொடியை அறி...

ஜெர்ஸிக்களின் வரலாறு!

படம்
கிரிக்கெட் அணிகளின் நிறம்! இந்தியா 1992 ஆம் ஆண்டு இந்திய அணியின் ஜெர்சி மாற்றம் கண்டது. உலகக் கோப்பையில் புதிய நீலநிற ஜெர்சியை அணிந்து விளையாடியது. பின் ஸ்பான்சராக இடம்பெற்ற நைக், மறுசுழற்சி செய்யப்பட்ட பாலிஸ்டரை ஜெர்சி உடைக்குப் பயன்படுத்தியது. இரு நிறங்களை இதில் நைக் பயன்படுத்தியது. அதை பின்னர் அணியின் உலக கோப்பை வெற்றி வரைக்கும் சொல்லிக்காட்டி சந்தோஷப்பட்டது நமது ஸ்டைல். ஆஸ்திரேலியா 1999 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற ஆஸி. அணி, 2019-20 ஆண்டும் அதே உடையின் நிறத்தை உடையாக்கி பயன்படுத்த உள்ளது. மஞ்சள்தான் பிரைமரி நிறம். இதில் எலுமிச்சைப் பச்சையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தேர்ந்தெடுத்து கொடுத்தது, ரசிகர்கள் என்பதே முக்கியம். வங்கதேசம் பாம்பு நடனம் ஆடும் வங்கதேசத்தினர், விளையாட்டில் தங்களை நிரூபித்தஅணி. ஆனால் பாகிஸ்தானுக்கும் தங்களுக்கும் வேறுபாடு காட்டத் தடுமாறுகின்றனர். பச்சை நிற ஜெர்சி பாகிஸ்தான் போல இருப்பதால், ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அணியின் நிறம் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பேக்கிரவுண்டில் அமைக்க முயற்சித்து ஜெர்ஸியை உருவாக்கினர். மேற்கி...