இடுகைகள்

ஐரிஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்க, ஐரிஷ் மக்களுக்கு இடையிலான அதிகாரப்போர்! - கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க் - மார்ட்டின் ஸ்கார்சி

படம்
  கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க் மார்ட்டின் ஸ்கார்ஸி 2002 அமெரிக்கத் திரைப்படம். கருப்பினத்தவர்களுக்கும் வெள்ளையர்களுக்குமான உள்நாட்டுப் போர் காலகட்டத்தில் நடைபெறுகிறது. அங்கு, வாழும் அமெரிக்கர்களுக்கும் புதிதாக குடியேறும் ஐரிஷ் மக்களுக்குமான யார் நிலம் இது என்ற சண்டைதான் படம்.  நியூயார்க் நகரில் ஃபைவ் பாய்ண்ட்ஸ் குடிசைப்பகுதியில் வாழும் பில் என்பவர்தான் ஐரிஷ் மக்களை எதிர்க்கும் குழுவுக்கான தலைவர். இவருக்கு தொழிலே பன்றிக்கறி வெட்டுவதுதான். அப்படியே பன்றியை குத்தி இறுதியில் மனிதர்களை குத்திப்போடும் ரவுடி ஆகிறார். இவருக்கென தனி குழுவே உருவாகிறது.  நகரில் நடக்கும் அனைத்து தண்டால், வழிப்பறி, கொள்ளை என அனைத்துக்குமே கமிஷன், பர்சென்டேஜ் வந்தே ஆகவேண்டும். அப்படி வராதபோது கோடாரி சம்பந்தப்பட்ட ஆளின் முதுகில் பதிந்திருக்கும் அல்லது குறுவாள் வயிற்றில் குத்தியிருக்கும். இந்த நிலையில் சில பல ஆண்டுகளுக்கு முன்னர், ஐரிஷ் மக்களுக்காக ஒரு தலைவர் - பிரிஸ்ட் வாலன் போராடி சாகிறார். அவரை பில் தான் கொல்கிறான். அதற்குப் பிறகே அந்த பகுதியில் முழுக்க பில்லுக்கு அடிபணிகிறார்கள். ஐரிஷ் ஆட்கள் வேறுவழியின்றி பில்லை ஏற்க