இடுகைகள்

டெங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஷி ச்சின்பிங் உரைகள், கட்டுரைகள் மூலமாக நடக்கும் பிரசாரம்!

படம்
 ஷி ச்சின் பிங்கின் உரைகள் பாடமாக.... ஷி ச்சின் பிங் ஆற்றிய உரைகள், எழுதிய கட்டுரைகள், உலக நாடுகளிலுள்ள 33 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ளவர்கள் அறிந்துகொள்ள ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதிபர் ஷி என்ன நினைக்கிறாரோ அதிலிருந்து துளியும் விலகாமல் கட்சியினர், உறுப்பினர்கள், வணிகர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிறர் அப்படியே வழிமொழிய வேண்டும். இப்படித்தான் சீன கனவுக்கான அடிக்கல் உருவாக்கப்பட்டு வருகிறது. வலிமையான தேசியவாதம், நாடுபற்றிய பெருமை, வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிராத தன்னிறைவு கொண்ட நாடு, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றி்ல ஷி, முன்னாள் அதிபரான மாவோவைப் பின்பற்றுகிறார். அடுத்து கன்பூசியசின் பல்வேறு கருத்துகளை விரும்புகிறார். ஐந்து வகை உறவுகளை சமூகம் பின்பற்றவேண்டுமென கன்பூசியஸ் கூறியுள்ளார். அரசர் - மக்கள், தந்தை - மகன், அண்ணன்-தம்பி, கணவர்-மனைவி, இரு நண்பர்களின் உறவு ஆகியவைதான் அவை.  அடிப்படை தலைவர், மக்கள் தலைவர் என பல பட்டங்கள் அதிபர் ஷிக்கு வந்துகொண்டே இருக்கின்றன. பொதுவுடைமைக் கட்சியின் பொதுசெயலாளார்,தே...

மூன்றுலக கோட்பாடு எப்படி திரிக்கப்பட்டது என்பதை விளக்குகிற நூல்!

படம்
          மாசேதுங்கும் மூன்றுலக கோட்பாடும் சீன பொதுவுடைமைக் கட்சியின் தலைவரும், ஆட்சியாளருமான மாசேதுங்கின் ஆதரவாளர்களால் எழுதப்பட்ட நூல். இந்த நூலில் மாவோவின் மூன்றுலக கொள்கை எவ்வாறு தவறாக குருச்சேவ், டெங் ஷியாவோபிங் ஆகியோரால் மாற்றப்பட்டு கூறப்பட்டது என கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அதில் உள்ள தவறுகளையும் சுருக்கமாக விவரிக்கிறது. நூல் மொத்தம் ஐம்பத்தாறு பக்கங்களைக் கொண்ட சிறு நூல்தான். அதிலேயே மூன்றுலக கோட்பாடு என்றால் என்ன, அதில் மாவோ கூறியது என்ன, பின்னாளில் ஆட்சிக்கு வந்த டெங், ரஷ்யாவின் அதிபராக இருந்த குருச்சேவ் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அதை எப்படி மாற்றினார்கள் என விளக்குகிறது. கூடவே ஆசியான் அமைப்பையும் கடுமையான தொனியில் விமர்சிக்கிறது. நூலின் மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது. தலைவர்கள் கூறிய கருத்துக்கு ஆதரவான விஷயங்களை மக்கள் தினசரி உள்ளிட்ட பத்திரிகையிலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சீன பொதுவுடைமைக் கட்சி பற்றி தமிழில் படிப்பது நன்றாக உள்ளது. அதன் நோக்கத்தை, மாவோவின் லட்சியத்தை புரிந்துகொள்ள நூல் உதவுகிறது. உலகளவில் ஐக்கிய முன்னணி என கூட...