இடுகைகள்

லிண்டா வில்லாரோஸா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் இனவெறி காரணமாக கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்! - லிண்டா வில்லாரோஸா

படம்
  லிண்டா வில்லாரோசா எழுத்தாளர் பல ஆண்டுகளா கருப்பின மக்களின் உடல், மன ஆரோக்கியம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பெண்மணி. அண்மையில் அண்டர் தி ஸ்கின் - தி ஹைடன் டோல் ஆஃப் ரேசிசம் ஆன் அமெரிக்கன் லைவ்ஸ் அண்ட் ஆன் தி ஹெல்த் ஆஃப் அவர் நேஷன் என்ற நூலை எழுதியுள்ளார்.  இனவெறி என்பது கருப்பின மக்கள் கடந்த எப்படி நாட்டின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உருவாகியுள்ளது என நினைக்கிறீர்கள்? அமெரிக்காவின் நிலையை நீங்கள் பிற நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்துத்தான் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளின் இறப்பு அதிகரிப்பதோடு, மக்களின் ஆயுளும் குறைந்து வருகிறது. கர்ப்பிணிகளின் இறப்பும் கூடி வருகிறது. இதனை பிற வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டுத்தான் கூறுகிறேன். இப்படி நடக்கும் சம்பவங்கள் அனைத்துமே கருப்பின மக்கள் மட்டும் சார்ந்தது கிடையாது. நாடு முழுக்க இந்த பிரச்னை உள்ளது.  அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு உடல் மனரீதியான பிரச்னைகள் உள்ளன. அவர்கள் குழந்தை பெறுவதே சிக்கலானது என கூறுவது ஏன்? பெருந்தொற்று காலத்தில் பிறரை விட அதாவது வெள்ளையரை விட பத்து வயது இளமையானவர்கள் கூட இறந்துபோனார்கள். கோவிட் காலத்தில் ஏராளமான கருப்ப