இடுகைகள்

உயிரினம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெரிஞ்சுக்கோ - திமிங்கலம்

படம்
  தெரிஞ்சுக்கோ – திமிங்கலம் ஊரில் உள்ள பெரிய மனிதர்களை, சமகாலத்தில் திமிங்கலம் என குறிப்பிடுகிறார்கள்.பெருசு, சீயான், பெரிய தலைக்கட்டு என்ற வரிசையில் திமிங்கலமும் சேர்கிறது. உண்மையில் கடல் உயிரினமான திமிங்கலத்திற்கு அப்படி என்ன சிறப்பு உள்ளது என பார்ப்போம். பவ்ஹெட் திமிங்கலத்தின் வாய் 2.4 மீட்டர் நீளமானது. அதாவது, மூன்று வயது வந்த மனிதர்களின் வாய்களின் அளவுக்கு பெரியது. ஹம்பேக் திமிங்கலத்தின் எடை 36 டன்னுக்கும் அதிகம். ஸ்பெர்ம் திமிங்கலம் வேட்டையாட செல்லும்போது கடலுக்குள் 3 கி.மீ. தூரம் பயணிக்கிறது. நீலத்திமிங்கலம் 30 மீட்டர் நீளத்திற்கு வளர்கிறது. நீலத்திமிங்கலத்தின் இதயத்தின் எடை 200 கிலோவுக்கு அதிகம். விலங்குகளில் அதிக எடை கொண்ட இதயம் இதுவே. ஸ்பெர்ம் திமிங்கலத்தின் மூளை 7.8 கி.கி எடை கொண்டது. விலங்குகளில் அதிக எடை கொண்ட மூளை இதுவே. பவ்ஹெட் திமிங்கலம், இருநூறு ஆண்டுகள் வாழ்கிறது. நீலத்திமிங்கலத்தின் எடை 150 டன்னுக்கும் அதிகம். அதாவது 32 ஆசிய யானைகளின் எடைக்கு நிகரானது. ஹம்பேக் திமிங்கலம் பாட ஆரம்பித்தால், பாடல் 35 நிமிடங்களுக்கு நீள்கிறது. இந்த திமிங்கலங்கள், இனப்

பாதாள உலகில் வாழும் புதிய அரிய உயிரினங்கள்!

படம்
  பூமிக்கு அடியில் வாழும் உயிரினங்கள்!  இயற்கைச்சூழல் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ வாய்ப்பு அளிக்கிறது. ஹவாய் தீவில் உள்ள எரிமலை குழாய்களில் வாழும் உயிரினங்கள் பற்றி அறிந்தால் உங்களுக்கு இப்படி வியப்பு ஏற்படலாம். இங்கு நிலத்திற்கு கீழே வெளுத்த கண் பார்வையற்ற நிறைய உயிரினங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எரிமலைகள் ஹவாய் தீவு நெடுக அமைந்துள்ளன. இருளான வெளிச்சமில்லாத சூழலையும் சமாளித்து வௌவால், எலி தவிர நிறைய உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சியை ஹவாய் பல்கலைக்கழக  ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர்.  பிக் ஐலேண்ட் எனும் இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் அறிவியலுக்கு புதிய உயிரினங்கள் (Planthoppers,Omnivores,Milipedes) தெரிய வந்துள்ளன. கடந்த மார்ச் மாதம், ஆராய்ச்சி குழுவினர் எரிமலைக்குழாயில் மேலும் ஆய்வு செய்ய ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. “இங்கு நாங்கள் ஆராய்ச்சி செய்யும்போது ஒவ்வொருமுறையும் புதிய உயிரினங்கள் கண்டறியப்படுகின்றன. அவை புதிய உயிரினங்கள் அல்லது அறிந்த உயிரனத்தின் புதிய வகையாகவே இருப்பது ஆச்சரியம்” என்றார் ஹவாய் பல்கலைக்கழக உதவி

குரோசோம்களின் எண்ணிக்கை உயிரினங்களைப் பொறுத்து மாறுபடும்! ஜே.வி. சமாரி

படம்
  பரிணாம வளர்ச்சி உயிரியலாளர்  ஜேவி சமாரி ( JV Chamary ) அனைத்து உயிரினங்களும் குரோமோசோம்கள் கொண்டிருக்குமா? ஆம். எளிமையான செல் அமைப்பைக் கொண்ட பாக்டீரியா, வட்ட வடிவிலான குரோமோசோம் அமைப்பைக் கொண்டிருக்கிறது. சிக்கலான செல் அமைப்பைக் கொண்டுள்ள உயிரினங்கள் அதிக குரோமோசோம்களைக் கொண்டுள்ளன என்று கூறமுடியாது. ஜேக் ஜம்பர் என்ற ஆண் எறும்பு, ஒரே ஒரு குரோமோசோமைக் கொண்டுள்ளது. ஆனால், ஒற்றைச் செல்லைக் கொண்டுள்ள அமீபா போன்ற ஸ்டெர்கீலா (sterkiella) என்ற உயிரி 16 ஆயிரம் குரோமோசோம்களை கொண்டுள்ளது.  உயிரினங்களில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை  மாறுபடுவது ஏன்? உயிரினங்களில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை அதன் பரிணாம வளர்ச்சியைப் பொறுத்தது. மனிதக்குரங்குகளின் உடலில் 48 குரோமோசோம்கள் என்றால் அதிலிருந்து வளர்ச்சி பெற்ற மனிதர்களின் உடலில் மொத்தம் 46 குரோமோசோம்கள்தான் உள்ளன. நமது உடலில் தேவையான குரோமோசோம்கள் கூடுதலாக இருந்தால் அல்லது  இல்லாமல் போனால் புற்றுநோய் ஏற்படும். டவுன்  சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்டவர்களின் உடலில், 21 குரோமோசோம்கள் மூன்று நகல் பிரதிகளாக இருக்கும்.  அனைத்து உயிரினங்களிலும் குரோமோசோம்கள

இயற்கைச் சூழல் என்பது அனைத்து உயிரினங்களுக்குமானது! - நிதின்சேகர்

படம்
  நேர்காணல் நிதின் சேகர் இயற்கை செயல்பாட்டாளர், எழுத்தாளர் காட்டுக்குள் நீங்கள் தங்கியிருந்திருக்கிறீர்கள். அதில் உங்களுக்கு பிடித்தமான நினைவுகள் ஏதேனும் இருக்கிறதா? நாங்கள் ஒரு யானையைப் பிடித்து கட்டி வைத்திருந்தோம். அதன் பெயர், திகாம்பர். ஒருநாள் நான் அதன் நின்றபடி நோட்டில் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென எனது நெஞ்சில் ஏதோ ஒன்று வேகமாக வந்து பட்டது. கீழே விழுந்த பொருளைப் பார்த்தேன். அப்போதுதான் பிடுங்கி எறியப்பட்ட செடி.  திகாம்பர் தான் சலிப்பு தாங்காமல் என்மேல் செடியை எறிந்துள்ளது என புரிந்துகொண்டேன். திரும்ப அதே செடியை அதன் காலடியில் போட்டேன். திரும்ப திகாம்பர் என் மீது செடியை தும்பிக்கையால் பற்றி என் மீது எறிந்தது. ஆம் இப்போது நாங்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை சில நிமிடங்களுக்கு பிறகே அறிந்தேன். யானையை சுதந்திரமாக வைத்திருக்க நினைக்கிறோம். அதற்காக சூழலியலாளர்களாக நாங்கள் நிறைய உழைக்கிறோம்.  காட்டின் நடுவே சிறு குடிலைக் கட்டிக்கொண்டு வாழ்ந்திருக்கிறீர்கள். அதுவும் அங்கு வாழும் மக்களின் மொழியும் கூட உங்களுக்குத் தெரியாது அல்லவா? மேற்கு வங்கத்தில

இயற்கை, சூழல் சார்ந்த நூல்கள்- வாசிப்போம் வாங்க!

படம்
  ஐ பாட் எ மௌண்டைன் தாமஸ் ஃபிர்பேங்க் ஷார்ட் புக்ஸ்  1940ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட நூலின் மறுபதிப்பு. கிளாஸிக்கான நூலை, இயற்கை காதலர்களுக்காக புதிய தலைமுறைக்காக பதிப்பித்து இருக்கிறார்கள். ஸ்னோடோனியா என்ற மலைமீது உள்ள பண்ணை ஒன்றை தாமஸ் வாங்குகிறார். இதனால் அவரும், அவர் மனைவியும் சந்திக்கும் நிறைய சிக்கல்களை கூறியிருக்கிறார்.  தி ஸ்லாத் லெமூர்ஸ் சாங்க்ஸ்  அலிசன் ரிச்சர்ட் ஹார்ப்பர் கோலின்ஸ்  லெமூர் பற்றி 50 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருபவர் அலிசன் ரிச்சர்ட். நூலில் காட்டுயிர் வாழ்க்கை, புவியியல், சூழல் இவற்றை உள்ளடக்கிய சமூகம் என நிறைய விஷயங்களைப் பேசுகிறார். மடகாஸ்கர்தான் நூலில் பேசப்படும் முக்கியமான இடம். அதன் ரகசியங்களை அறிய நூலை வாங்கி வாசியுங்கள்.  டீர் மேன் ஜியோப்ராய் டெலோர்ம் லிட்டில் ப்ரௌன் புக் க்ரூப் புகைப்படக்காரர் டெலோர்ம் நார்மண்டியில் உள்ள லூவியர் காட்டுக்கு செல்கிறார். அங்கு சென்று தங்கி மான்களுடன் பழகுகிறார். அதன் வாழ்க்கையைக் கவனிக்கிறார். அதைப்பற்றிய குறிப்புகள், அனுபவங்கள் நூல் முழுவதும் விரவிக்கிடக்கிறது.  வைல்ட் சிட்டி ஃப்ளோரன்ஸ் வில்கின்சன் ஓரியன் பப்ளிசிங் மனிதர

மீன் பிடிப்பதைத் தடை செய்தால் என்னாகும்?

படம்
  மீன் பிடிப்பதை தடை செய்தால்... உலகம் முழுக்க  உள்ள மக்கள் மீன்களை அதிகளவு உண்டு வருகிறார்கள். இதற்காக, கடலில் பிடிக்கப்படும் மீன்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் கடலில் மாசுபாடும் கூடுகிறது. 1961 முதல் 2016 வரை செய்யப்பட்ட ஆய்வில் இறைச்சியை விட மீன்களை அதிகளவு உணவாக மக்கள் எடுத்துக்கொண்டது தெரியவந்துள்ளது. உலக நாடுகளிலுள்ள அரசுகள் மீன்பிடிப்பதை தடை செய்தால் என்னாகும்? உணவுத்தேவை உலகம் முழுக்க 40 கோடிக்கும் அதிகமான மக்கள்  மீன்பிடித்தொழில் இருக்கிறார்கள்.அரசின் தடையால், இவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்.  ”சிறியளவில் மீன்களை பிடித்து விற்கும் மீனவர்களைப் பற்றிய ஆவணங்கள் கிடைப்பதில்லை” என்றார் சூழலியலாளர் ஸ்டீவன் பர்செல். தெற்காசியா, இந்தியா, மற்றும் பசிபிக் கடல் தீவுகளில் உள்ள மக்கள் புரத தேவைக்கு அதிகமும் மீன்களையே சார்ந்துள்ளனர்.  ஐரோப்பா, அமெரிக்காவில் அதிகளவு மக்கள் புரத தேவைக்கு இறைச்சியை சார்ந்துள்ளனர். நிலத்தில் குறைந்தளவு விவசாயம் செய்யும் நாடுகளில் மீன்பிடி தடை என்பது உணவுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். மீன் பிடிப்பதை முழுமையாக தடை செய்தால், மக்கள் பலரும் பதப

ஆர்க்டிக்கில் அதிகரிக்கும் வெப்பமயமாதல் விளைவுகள்!

படம்
  ஆர்க்டிக்கில் தீவிரமாகும் பருவச்சூழல் விளைவுகள்! சைபீரியாவின் ஆர்டிக் பகுதியில் வெப்பம் 10 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக கூடியுள்ளதை ஐ.நா அமைப்பு, சுட்டிக்காட்டியுள்ளது. இதுபற்றிய அறிக்கையை  உலக தட்பவெப்பநிலை அமைப்பு (WMO) வெளியிட்டது. ஆர்க்டிக் பகுதியில் இம்முறையில் அதிகரித்துள்ள வெப்ப அளவு, கடந்த கோடைக்காலத்தை விட அதிகம். இப்படி வெப்பம் அதிகரிப்பது காட்டுத்தீ மற்றும் பனிப்பாறைகள் உருகுவது ஆகியவற்றை நிகழ்ச்சிகளை அதிகரிக்கக்கூடும்.  கடந்த ஆண்டு சைபீரியாவில் செய்த ஆய்வில், 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதுவே சமகாலத்தில் ஆர்க்டிக் பகுதியில் பதிவான  அதிக வெப்பநிலை ஆகும். பருவச்சூழல் மாறுபாடுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள ஐ.நா அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. கடந்த ஆண்டு ரஷ்ய நகரமான வெர்க்கோயான்ஸ்க் (verkhoyansk)என்ற இடத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்நகரம் ஆர்க்டிக் பகுதியிலிருந்து 115 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தட்பவெப்பநிலை கணக்கீடு 1885ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடைபெற்று வருகிறது.  2020ஆம் ஆண்டு, உலகளவில் அதிக வெப்பநிலை நிலவிய மூன்று ஆ

சதுப்புநிலங்களை மீட்பது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட!

படம்
  குப்பைகளால் அழியும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்! செய்தி: தமிழகத்திலுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் 8.4 ஜிகா டன்கள் மீத்தேன் வாயு உருவாகி சூழலை மாசுபடுத்துவதாக ஆய்வுத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சனிக்கிழமை உலக சதுப்புநில நாள் அரசு வனத்துறையால் அனுசரிக்கப்பட்டது. இதுதொடர்பான சந்திப்பில் இயற்கை ஆர்வலர்கள், சூழல் செயல்பாட்டாளர்கள் பங்குபெற்று, பள்ளிக்கரணையில் குப்பை கொட்டும் இடமாக மாறிய சதுப்புநிலங்களை மீட்பது குறித்து ஆலோசித்துள்ளனர். பள்ளிக்கரணையில் பல்வேறு இடங்களில் கருவிகளைப் பொருத்தி கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் ஆகிய வாயுக்களின் அளவை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.  மீத்தேன் அதிகரிப்பு நன்னீர் சதுப்பு நிலப்பகுதியான பள்ளிக்கரணையில்  கொட்டப்படும் நகரின் ஒட்டுமொத்தக் கழிவுகளால்  8.4  ஜிகா டன்கள் மீத்தேன் உருவாகி உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழு தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் சூழல் ஆராய்ச்சிக் கழக இயக்குநரான ஏ.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.  கடந்த 50 ஆண்டுகளாக பள்ளிக்கரணையிலுள்ள சதுப்புநிலத்தில் கொட்டப்படும்

மிஸ்டர் ரோனி - நான்கு கேள்விகள் - அதிரடி பதில்கள்!

படம்
pixabay மிஸ்டர் ரோனி - பேக் டூ பேக் கேள்விகள் -பதில்கள் புதிய உயிரினங்களை எப்படி வகைப்படுத்துகிறார்கள்? வகைப்படுத்துவது என்பது மிகப்பெரிய நீண்ட பணி. முதலில் ஆராய்ச்சியாளர்கள் தாம் கண்டறியும் உயிரினத்தின் மரபணுவையும், அதன் பரிணாம வளர்ச்சி பற்றியும் ஆராய வேண்டும். இதுபற்றிய செய்திகளை நன்றாக படித்துவிட்டு மரபணு ரீதியாகவும், பிற உயிரினங்களுடன் உள்ள தொடர்பையும் அறிந்துகொண்டு அப்போதும் அது புது உயிரி என்றால் அறிவியல் இதழ்களுக்கு அறிக்கையாக எழுதி அனுப்பலாம். அப்போதும் அது புதிய உயிரினம் என்பதற்கு உறுதி கிடையாது. பத்திரிகையில் வெளியான பிறகுதான் அதைப்பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலரும் விவாதிப்பார்கள். பின்னர், அதற்கான ஆதாரங்களோடு நாம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தால் அந்த உயிரினம் புதிது என கருதப்பட, நிரூபிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த உயிரினத்திற்கும் நாம் தனுஸ்ரீ என பெயர் வைத்துவிட முடியாது. அதற்கும் உலக ஜூவாலஜிகல் நோமன்கிலேச்சர் என்ற அமைப்பின் அனுமதியும் ஒப்புதலும் தேவை. அப்போது பெயர் சூட்டி ஏ2பி லட்டை பரிமாறி சந்தோஷப்பட முடியும். உலகிலுள்ள ஆக்சிஜன் தீர்ந்துவிட்டால் என்னாகும் ப்ரோ?