இடுகைகள்

டிமென்சியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிமென்சியா நோயாளிகளுக்கு உதவும் க்யூடி ஹியூமனாய்ட் ரோபோட்!

படம்
  டிமென்சியா நோயாளிகளுக்கு உதவும் சமூக ரோபோட்டுகள்!  சமூக ரோபோட்டுகள் என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாய், பூனை, உதவியாளர் என பல்வேறு வடிவங்களில் நிறைய ரோபோக்கள் உண்டு. அவையெல்லாம் இந்த வகையில் சேரும். இப்படியான ரோபோட்டுகள் நமக்கு ஏதாவது ஒரு வகையில் உதவும், குறைந்தபட்சம் மனிதர்களின் வஞ்சனையிலிருந்தேனும் விலக்கி நட்பு பாராட்டும். நோயாளிகளுக்கு வழிகாட்டியாக உதவும்.  ஆனால் தற்போது இந்தியானா பல்கலைக்கழக ரோபோட் ஆராய்ச்சியாளர் செல்மா செபானோவிக் (selma sabanovic) உருவாக்கியுள்ள ஹியூமனாய்ட் ரோபோட்டான க்யூடி வேறு வகையில் உள்ளது. அதாவது, சாட் ஜிபிடி 4 எனும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் சமூக ரோபோட்டான க்யூடி, டிமென்சியா நோயாளிகளுக்கு உதவுகிறது. இத்தொழில்நுட்பம் மூலம் இந்த ரோபோட் பல்வேறு உணர்ச்சிகளை தனது திரையில் காட்டி உரையாடுகிறது. டிமென்சியா நோயாளிகளுக்கு நினைவுகள் மெல்ல அழிந்துகொண்டே வரும். அதுவரை நன்கறிந்த திறனான கார் ஓட்டுவது கூட மெல்ல மறந்துபோகும். மைக்ரோவேவ் ஓவனை இயக்குவது எப்படி என தடுமாறுவார்கள். உச்சபட்சமாக உணவு சாப்பிடுவது, உடை மாற்றுவது கூட மறந்துபோகும்.  சில ஆண்டுகளு