இடுகைகள்

அணைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியா பாகிஸ்தான் நதிநீர் ஒப்பந்தம்@ 60! - ஒப்பந்த வரலாறு, பிரச்னைகள், தீர்வுகள்

படம்
            இந்தியா பாகிஸ்தான் நதிநீர் ஒப்பந்தத்திற்கு வயது 60! கடந்த செப்டம்பர் மாதம் 19 அன்று இந்தியா பாகிஸ்தான் நதிநீர் ஒப்பந்தம் , வெற்றிகரமாக 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது . இந்தியா , பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடையே இன்று அரசியல்ரீதியான நிலை , சுமூகமாக இல்லை . ஆனால் அதேசமயம் , இருநாடுகளுக்கு இடையில் உருவான நதிநீர் ஒப்பந்தம் (IWT) பல்வேறு தடைகளைத் தாண்டி 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது . இதன்மூலம் இருநாடுகளும் மனம் வைத்தால் அமைதியான அரசியல் உறவையும் ஏற்படுத்திக் கொள்ளமுடியும் என்பது உறுதியாகியுள்ளது . இந்தியா , பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு உறவுகளையும் கடந்து உலகவங்கி இந்த ஒப்பந்தம் உருவாக பெரும் உதவிகளைச் செய்துள்ளது . எந்த இடையூறுகளுக்கும் உட்படாத , தொந்தரவுகளும் செய்யமுடியாத ஒப்பந்தம் என்று கூறப்படும் பெருமை கொண்டது இந்த நதிநீர் ஒப்பந்தம் . 1947 ஆம் ஆண்டு சிந்து , ஜீலம் , செனம் , சட்லெஜ் , பீஸ் , ரவி ஆகிய நதிகளை இருநாடுகளும் பகிர்ந்து நீர் பெறும் முயற்சிகள் தொடங்கவிட்டன . அப்போது இந்தியா பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்ட காலகட்டம் . மேற்கு நதிகள் என்று அழைக