இடுகைகள்

மறுசுழற்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொருட்களை திரும்ப பயன்படுத்தும் வட்டப் பொருளாதாரம்!

படம்
  வட்ட பொருளாதாரம் ஒரு பொருளைப் பயன்படுத்திவிட்டு அதை அப்படியே பயன்பாடு முடிந்ததும் தூக்கிப்போட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போவது சூழல் பிரச்னையை தீவிரமாக்குகிறது. இதற்கு எதிரானது, வட்டப் பொருளாதாரம். அதாவது சர்குலர் எகனாமி. இக்கருத்துப்படி, மூலப்பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி செய்து அதைப் பயன்படுத்துவது, பிறகு அந்தப் பொருளை மீண்டும் மறுசுழற்சி செய்வது ஆகியவை உள்ளது. இதனால், கழிவுகள் உருவாவது குறைக்கப்படும். இதன்மூலம் இயற்கை சூழல் கெடுவது பெருமளவு குறைக்கப்படுகிறது. லீனியர் எகனாமி முறையில் பொருட்கள் பயன்பாடு முடிந்ததும் நேரடியாக குப்பைக்கு சென்றுவிடுகிறது. அதில் பயன்பாடு ஏதுமில்லை. அந்த பொருட்களை மறுசுழற்சி செய்வதும் கடினம். இந்த முறையில்தான் பல நூற்றாண்டுகளாக தொழில் உற்பத்தி நடைபெற்று வந்தது. நன்னீருக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே, தொழிற்சாலைகள் தாங்கள் பயன்படுத்தும் நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவது தொடங்கப்பட வேண்டும். அல்லது நீர்த்தேவையைக் குறைத்து சிக்கனமாக செயல்படுவது முக்கியம். பசுமை இல்ல வாயுக்களை அதிகரிக்காத வகையில் வாகனங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

எந்தெந்த பிளாஸ்டிக்குகளை எப்படி மறுசுழற்சி செய்வது?

படம்
  மறுசுழற்சி  பிளாஸ்டிக் பாலிமர்கள் நீளமான சங்கிலி பிணைப்புகளாலான மூலக்கூறுகளைக் கொண்டவை. கார்பன் அணுக்களால் இணைக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பாட்டில்களின் கீழே என்ன வகையான பிளாஸ்டிக் என்று எண்களால் குறிப்பிடப்பட்டிருக்கும்.  பெட் (PET) - பாலி எத்திலீன் டெரா பைத்தலேட் (Polyethylene Teraphthalate) பாட்டில், உணவு ஜார்கள், உடை, கார்பெட்டுகள், ஷாம்பு, மௌத்வாஷ் பாட்டில்கள் இவற்றை எளிதாக மறுசுழற்சி செய்யலாம். இவற்றை அடையாளப்படுத்தும் எண் 1. ஹெச்டிபிஇ (HDPE) - ஹை டென்சிட்டி பாலிஎத்திலீன் (High density polyethylene) சலவைத் திரவ பாட்டில்கள், நொறுக்குத்தீனி பெட்டிகள், பால் குடுவைகள், பொம்மைகள், வாளி, செடிவளர்க்கும் தொட்டிகள், குப்பைத்தொட்டிகள் இவற்றை எளிதாக மறுசுழற்சி செய்யலாம். இதன் அடையாள எண் 2. பிவிசி (PVC) - பாலிவினைல் குளோரைடு (Polyvinyl chloride) கடன் அட்டைகள், ஜன்னல், கதவு பிரேம்கள், குழாய்கள், செயற்கை தோல்.  இவற்றை மறுசுழற்சி செய்வது மிக கடினம். இதன் அடையாள எண் 3. எல்டிபிஇ (LDPE) - லோ டென்ஸிட்டி பாலி எத்திலீன் (Low Density Polyethylene) பேக்கேஜ் ஃபிலிம், பேக்குகள், பபிள்ரேப், நெகிழ்வுத் த

பட்டாசுகளை மறுசுழற்சி செய்ய முடியுமா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பட்டாசுகளை மறுசுழற்சி செய்ய முடியுமா? உண்மை. பட்டாசுகளில் உலோகத்துடன் கலந்த வேதிப்பொருட்கள் (Aluminium, Iron,Sodium Salicylate, potassium perchlorate) ஏராளமாக உள்ளன. வெடிக்காத பட்டாசுகளை நீரில் நனைத்து பிறகே அப்புறப்படுத்தவேண்டும். பட்டாசுகளில் உள்ள உலோகங்கள், வேதிப்பொருட்கள் தனியாக இருந்தால் அதனை மறுசுழற்சி செய்யலாம். இப்பொருட்கள், பட்டாசில் வெடிமருந்தாக ஒன்றாக கலந்துவிட்டால், அதனை மறுசுழற்சி செய்வது கடினம்.   நீர்யானைய விட மனிதரால் வேகமாக ஓட முடியுமா?  உண்மை. யானைக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் உள்ள பெரிய விலங்கு, நீர்யானை. இதன் எடை 1,800 கி.கி. எடை அதிகமிருந்தாலும், நீர்யானை காட்டில் மணிக்கு 48 கி.மீ. வேகத்தில் ஓடும் திறன் பெற்றது. இதோடு ஒப்பிடும்போது மனிதனால் மணிக்கு 37 கி.மீ. வேகத்தில்தான்  ஓட முடிகிறது.  https://www.fswaste.co.uk/can-you-recycle-fireworks/ https://www.smithsonianmag.com/arts-culture/14-fun-facts-about-fireworks-180951957/ https://www.britannica.com/story/how-fast-is-the-worlds-fastest-human#:~:text=Since%20many%20people%20are%20more,%3A%2037.58%20or%2023.35%2C

அலுமினியம் எப்படி மறுசுழற்சி செய்யப்படுகிறது?

படம்
  அலுமினியத்தின் மறுசுழற்சி! தொழில்துறையில், அலுமினியம் மதிப்பு மிக்க பொருள். அதிகளவில் இதனை மறுசுழற்சி செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதனை எளிதாக பல்வேறு வடிவங்களுக்கு மாற்ற முடியும். இதனால், அலுமினிய பாயில், டின்கள், கார் பாகங்கள் ஆகியவற்றை மறுசுழற்சி செய்கிறார்கள். சுரங்கத்திலிருந்து பெறும் பாக்சைட்டிலிருந்து, அலுமினியத்தைப் பிரித்தெடுக்கின்றனர். இப்படி புதிதாக அலுமினியத்தை எடுப்பதை விட, அலுமினிய பொருட்களை மறுசுழற்சி செய்யும்போது குறைந்தளவு ஆற்றலே செலவாகிறது.  நாம் பயன்படுத்தும் மூன்றில் இருபங்கு குளிர்பான கேன்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தால் உருவாக்கப்படுகின்றன. இவற்றை அமெரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்துகின்றன. மேற்கு நாடுகளில் அலுமினிய கேன்களின் மறுசுழற்சி செயல்பாடும் அதிகம்.  அலுமினியம் பிற உலோகங்களைப் போலவே மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்துகிறது.  அவ்வளவு எளிதாக அரிக்கப்படாத காரணத்தால், அதிகளவு பயன்பாட்டில் உள்ளது.  அலுமினியத்தை எளிதாக வயர்களாக்க முடியும். இப்படி வடிவம் மாறினாலும் கூட அதன் வலிமை குறையாது. இதனை எளிதாக அறுக்க முடியாது.  அலுமினியத்தின் வடி

சிகரெட் துண்டுகளால் ஏற்படும் மாசுபாடு! - அதிகரிக்கும் விழிப்புணர்வும், மறுசுழற்சியும்....

படம்
  பெருநகரங்களைப் பார்த்தால் நிச்சயம் அலுவலகங்களுக்கு வெளியில் டீக்கடைகள் இருக்கும். அவற்றில் டீயோடு சிகரெட்டைப் பிடித்தபடி உலகை முன்னேற்றும் சிந்தனையுடன் பலர் நின்றிருப்பார்கள். சில கடைகளில் குப்பைத்தொட்டிகளை வைத்திருப்பார்கள். ஆனால் பெரும்பாலானோர் சிகரெட்டை புகைத்து முடித்தவுடன் அதனை கீழே போட்டு காலால் ஒரு தேய்ப்பு கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள். அதைக்கூட செய்ய வேண்டாம் என நினைக்கும் மென் மனத்தினரே மனிதர்களில் அதிகம்.  இப்போது தேய்த்து எறியப்பட்ட சிகரெட் துண்டுகளில் புகைபிடிக்கும் பகுதியைப் பார்த்திருப்பீர்கள். இதில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக் எளிதில் மண்ணில் மட்காது. இதை நிறையப் பேர் அறியாமல்  தரையில் வீசிவிட்டு மிடுக்காக பீம்லா நாயக்காக நடந்து வருகிறார்கள். உலக சுகாதார நிறுவனம் சிகரெட் கழிவுகளில் 7 ஆயிரம் வேதிப்பொருட்கள், நச்சுகள் இருப்பதாக கூறியிருக்கிறது.  சிகரெட் பட்களில் காகிதமும், ரேயானும் கலந்துள்ளது. இவை நீர்நிலையில் சேர்க்கப்படும்போது, உப்புநீர், நன்னீரில் உள்ள மீன்களை கொல்வதற்கு 50 சதவீத வாய்ப்புகள் உள்ளன என அமெரிக்காவில் உள்ள ட்ரூத் இனிஷியேட்டிவ் அமைப்பு கூறியுள்ளது. இதனை 96

திருச்சியில் மறுசுழற்சி பொருட்களை விற்கும் மருத்துவர் பாரதி பவாதரன்!

படம்
  நாம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களை மறுசுழற்சி செய்வது கடினமானது. பிளாஸ்டிக் பிரஷ்ஷை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் முதன்முதலில் சிறுவனாக இருந்தபோது என்ன நிறத்திலான பிரஷ்ஷைப் பயன்படுத்தினோம் என்பதை மறந்திருப்போம். ஆனால் அந்த பிரஷ் இன்னும்  மக்கிப்போகாமல் மண்ணுக்குள்தான் இருக்கும். காரணம், அது முழுக்க மட்கிப் போக 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.  இதுபோல ஏராளமான தகவல்களை படித்த மருத்துவர் பாரதி, நம்மைப்போல அடுத்த செய்திக்கு போகவில்லை. ஃபார்ம்வில்லே வேதா பிஸ்கெட்டையும் கூட தொடாமல் யோசித்தார். இதன் விளைவாக ஈகோடோபியா என்ற கடையைத் திறந்தார். அதில் மறுசுழற்சி செய்யப்பட்ட பைகள், பொருட்களை விற்று வருகிறார். இவரிடம் மூங்கில் பிரஷ்கள் கிடைக்கின்றன. வீட்டை சுத்தம் செய்ய அல்ல. பற்களை சுத்தம் செய்ய என்பதுதான் இதில் விசேஷம். நாம் என்ன மாதிரியான உலகை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்கிறோம் என்ற கேள்வி எனக்குள் வந்தது. அதனால்தான் நான் இயற்கையை, சூழலை பாதிக்கும் விஷயங்களை நோக்கி நகர்ந்தேன் என்கிறார் பாரதி.  மறுசுழற்சி காகிதம், விதைகளைக் கொண்ட குண்டு ஆகியவற்றையும் விற்கிறார். உணவுப்பொருட்களை வாங்குபவர்களுக்கு ச

அப்கிரேட் எனும் கட்டாய டெக் கொள்கை!

  அப்கிரேட் எனும் கட்டாய டெக் கொள்கை ! இணையம் வழியாக பல்வேறு டிஜிட்டல் பொருட்களை வாங்குகிறோம் . ஸ்மார்ட்போன் , கணினி போன்றவற்றை வாங்கிய உடனே இணைய இணைப்பில் இணைத்து மென்பொருட்களை மேம்படுத்துவது முக்கியம் . அதற்குப் பிறகுதான் அதனை சீராக பயன்படுத்த முடியும் . ஒருமுறை மேம்படுத்திவிட்டால் , டிஜிட்டல் சாதனங்களை பிரச்னையின்றி நீண்டகாலம் பயன்படுத்த முடியும் என நினைத்திருப்போம் . ஆனால் அதுவும் கூட குறைந்த காலத்திற்குத்தான் . கூகுள் , ஆப்பிள் ஆகிய டெக் நிறுவனங்கள் வெளியிடும் ஸ்மார்ட்போன்களில் , சில ஆண்டுகளிலேயே புது இயக்கமுறைமை , பாதுகாப்பு வசதி ஆகிய மேம்பாட்டு சலுகைகள் நிறுத்தப்பட்டு விடுகின்றன . இதனால் ஒருவர் பயன்படுத்தி வரும் சாதனங்களை வேறுவழியின்றி கைவிட்டு புதிய சாதனங்களுக்கு மாறவேண்டிய கட்டாயம் உருவாகிறது . உதாரணமாக 2017 இல் வெளியிடப்பட்ட கூகுளின் பிக்ஸல் 2 போனுக்கான பாதுகாப்பு வசதிகள் நடப்பு ஆண்டின் இறுதியில் நிறுத்தப்பட்டுவிடும் என கூறப்படுகிறது . அக்டோபர் 2020 ஆம் ஆண்டு , விற்கப்பட்ட கூகுள் பிக்சல் 5 போனை , 2023 ல் பயன்படுத்தமுடியாது . இதற்கு நிறுவனங்கள் தரப்பில்

தலைமுறைகளை காப்பாற்றும் கலை ஐடியா!- துணிக்கழிவுகளிலிருந்து கலைப்பொருட்கள் தயாரிக்கும் பெண்மணி!

படம்
  2017ஆம் ஆண்டு ஸ்ரீநிதி உமாநாதன் திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்திற்கு சுற்றுப்பயணமாக சென்றார். போகும் வழியில் மேல காலகண்டர் கோட்டை அருகே நிறைய கழிவுகள் கிடப்பதைப் பார்த்தார். அவற்றில் பெரும்பாலானவை துணிக்கழிவுகள்தான்.  அப்போது பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த 23 வயது பெண்தான் அவர். அப்போதே முடிவு செய்துவிட்டார். இனி பேஷன் டிசைனராக மாறினாலும் கூட கழிவுகளை முடிந்தளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என முடிவு செய்துகொண்டார். இப்போதுவரை துணிகளை மறுசுழற்சி செய்வது பற்றியும், சூழலுக்கு ஆபத்தில்லாமல் வாழ்வதும் பற்றியும் பிரசாரம் செய்.து வருகிறார்.  இரண்டாவது ஆண்டு படிப்பின்போது, ரீடெய்லர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதில் பயன்படுத்திய துணிவகைகளைப் பயன்படுத்தி பைகள், தலையணை உறைகள், ஸ்க்ரீன்கள், சிறு பைகள், கால் மிதியடிகள் என நிறைய பொருட்களை தயாரிக்கத் தொடங்கினார். மாற்றுத்திறனாளியான தனது சகோதரரிடமிருந்து, துணிகளை எப்படி கலைப்பொருளாக மாற்றவேண்டும் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டார். பிறகு இப்படி தயாரித்த பொருட்களை திருச்சியில் உள்ள என்எஸ்பி சாலையில் உள்ள கடைகளில் விற்பனைக்கு

எளிதாக கிடைக்கும் பிளாஸ்டிக்!

படம்
                பிளாஸ்டிக் . இன்று சூழலியலாளர்கள் கனவிலும் கூட எதிர்த்து வரும் பொருள் . ஆனால் பிளாஸ்டிக் , புழக்கத்திற்கு வந்தபிறகுதான் மக்களுக்குத் தேவையான தினசரி பொருட்களின் விலை குறைந்தது . இன்று எந்த பொருளையும் எளிதாக எடை குறைந்த மலிவான விலையில் பிளாஸ்டிக்கால் உருவாக்க முடியும் . கச்சா எண்ணெய் , எரிவாயு ஆகியவற்றிலிருந்து பிளாஸ்டிக் பெறப்படுகிறது . கார்பன் கொண்டுள்ள மூலக்கூறுகளை பாலிமர் என்று கூறலாம் . பெரும்பாலான தொழிற்சாலை தயாரிப்பு பிளாஸ்டிக்குகளில் மோனோமர்கள் பயன்படுகின்றன . பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வது என்பது அதனை அதிக வெப்பநிலையில் உருக்கி வேறு ஒரு பொருளாக மாற்றுவதுதான் . தெர்மோபிளாஸ்டிக்குக்குகளை எளிதில் உருக்கினாலும் தெர்மோசெட் வகை பிளாஸ்டிக்குகளை இப்படி மாற்றி வேறு பொருட்களாக மாற்றுவது கடினம் . கச்சா எண்ணெய வளம் என்பது தீர்ந்துபோக கூடியது என்பதால் , கரும்பு , சோளத்திலிருந்து பயோபிளாஸ்டிக் தயாரிக்கும ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன . இதன் விளைவாக பிளாஸ்டிக்கை 3 டி பிரிண்டில் முறையில் உறுப்புகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்த முடியும் . இதிலுள்ள வக

பௌர்ணி நிலவு ஒளி மனிதர்களின் மனநிலையை பாதிக்கும்! - உண்மையும் உடான்ஸூம்

படம்
      கரப்பான் பூச்சிகள் இல்லாத உலகம் சாத்தியம் ! ரியல் : கதிர்வீச்சிலும் கூட சமாளித்து வாழும் என்று கூறப்படுவது , கரப்பான் பூச்சி . மனித இனத்திற்கு பாக்டீரியா , ஒவ்வாமை பிரச்னைகளை ஏற்படுத்தியபடி வாழும் இந்த பூச்சி இனம் , பத்தாயிரம் ஆண்டுகளாக நம்மோடு வாழ்ந்து வருகிறது . மரம் , இலை ஆகியவற்றை உண்டு , நைட்ரஜன் சத்தை நிலத்திற்குப் பெற்றுக் கொடுக்கிறது . இயற்கையின் உணவுச்சங்கிலியில் கரப்பான் பூச்சி முக்கியமானது . எனவே , அவற்றால் ஏற்படும் தொற்றுநோய்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வதே புத்திசாலித்தனம் . அதன் இனத்தை ஹிட் ஸ்ப்ரே அடித்து கொல்ல நினைக்காதீர்கள் . தற்போதைக்கு இம்முயற்சி சாத்தியமல்ல . உலகிலுள்ள அனைத்து மக்களும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யத்தொடங்கினால் சூழல் மேம்படும் ! ரியல் : நிச்சயமாக சூழல் மேம்படும் . இந்திய குடிமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய முயன்றால் , கழிவுகளை நிலத்தில் கொட்டுவது குறையும் . இந்தியாவின் நகர்ப்புற பகுதிகளில் ஆண்டுதோறும் 62 மில்லியன் டன்கள் கழிவுகள் உருவாகின்றன . இந்த எண்ணிக்கை 2030 இல் 165 மில்லியனாக

உணவு வீணாவதை தடுப்பது எப்படி?

படம்
உணவு உற்பத்தி முறைகளிலும் அதனை பயன்படுத்தும் முறைகளிலும் பெருமளவு உணவு வீணாகி வருகிறது. இதைத்தடுக்க உணவுப்பொருட்களை கவனமாக தேவைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். வளர்ந்த வளரும் நாடுகளில் உள்ள குறிப்பிட்ட சதவீத மக்கள் உணவின்றி தவிக்கும்போது மற்றொரு இடத்தில் உணவுப்பொருட்கள் தேவையின்றி வீண்டிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் நமக்கு கிடைக்கும் உணவுப்பொருட்களின் இன்றியமையாத தன்மையை நாம் அறியாததே ஆகும். இம்முறையில் உலகெங்கும வீணாகும் உணவுப் பொருட்களிலிருந்து 3 பில்லியன் டன்கள் பசுமை இல்ல வாயு வெளியாகி உலகை வெப்பப்படுத்தி வருகிறது. அதாவது உலகில் 23 சதவீத விவசாய நிலங்களிலிருந்து பெறும் விளைபொருட்கள் பயன்படுத்தப்படாமல் வீண்டிக்கப்படுகின்றன.  மக்களின் உணவுத்தேவைக்காக விளைவிக்கப்படும் மூன்றில் ஒரு பங்கு காய்கறிகள் உணவுகள் வீண்டிக்கப்பட்டு வருகின்றன. இதனை எப்படி தவிர்ப்பது? அருகிலுள்ள காய்கறிகடைகளுக்கு செல்லும்போது தேவையான காய்கறிகளை மட்டும் வாங்குங்கள். உணவு தயாரிக்கும்போது எத்தனை பேர்களுக்கு என திட்டமிட்டு அதனை செய்யுங்கள். முடிந்தவரை ஒட்டுமொத்தமாக காய்கறிகளை வாங்குவதை தவிருங்க

பேட்டரிகளின் மறுசுழற்சி!

படம்
மிஸ்டர் ரோனி பேட்டரிகளை எப்படி மறுசுழற்சி செய்கிறார்கள்? லித்தியம் அயன் பேட்டரிகளை தற்போது மறுசுழற்சி செய்யும் முறை சரியானது அல்ல. இதற்கு ஆகும் செலவு அதிகம். எனவே புதிய பேட்டரிகளை செய்வதே சரியானது. பழைய பேட்டரியில் அதாவது கார்களுக்கு பயன்படும் பேட்டரிகளை உடைத்து, மீண்டும் அதில் புதிய முறையில் தயாரிப்பார்கள். காரீய அமிலம் கொண்ட பேட்டரிகளை இம்முறையில் மறுசுழற்சி செய்கிறார்கள். இதேபோல அல்கலைன் பேட்டரிகளில் ஜிங்க். மாங்கனீசு ஆகியவற்றை இம்முறையில் மாற்றம் செய்து தயாரிக்கின்றனர்.  நன்றி - பிபிசி

வளைவான கண்ணாடியை எப்படி உருவாக்குகிறார்கள்?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி கண்ணாடியை எப்படி வளைத்து அழகாக மாற்றுகிறார்கள்? அனைத்துக்கும் சிலிகா மூலக்கூறுகள்தான் காரணம். அதனை 700 டிகிரி செல்சியஸிற்கு வளைத்து கண்ணாடியை வளைவாக தயாரிக்கிறார்கள். மிகவும் கவனமாக வேலை செய்துதான் இந்த வகை கண்ணாடியை உருவாக்குகிறார்கள். கால்சியம் கார்பனேட், சோப்பு ஆகியவற்றைப் போட்டு இதனை துடைத்து மெருகேற்றுகிறார்கள். நன்றி - பிபிசி

சூழலைக் காப்பாற்றுவது பாஜக அரசுதான்!

படம்
மினி நேர்காணல் பிரகாஷ் ஜாவேட்கர், சுற்றுச்சூழல் அமைச்சர் பஞ்ச பூதங்களை காப்போம் என்று கூறினீர்கள். எப்படி? நீரைக் காக்க ஜெய்சக்தி எனும் துறையைத் தொடங்கியுள்ளோம். உலக மக்கள் தொகையில் இந்தியர்கள் 17 சதவீதமும், விலங்குகள் உயிரினங்கள் அளவில் 20 சதவீதமும் உள்ளது. மழையில் இந்தியா 4 சதவீதம் மட்டுமே பெறுகிறது. டெல்லியில் ஏற்படும் காற்று மாசு பிரச்னையைக் குறைக்க முயற்சித்து வருகிறோம். நிலங்களைப் பாதுகாக்க 50 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க உள்ளோம். பாஜக அரசு பதவி ஏற்றதிலிருந்து சூழலைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறோம். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காற்றின் தரத்தை உயர்த்தியுள்ளதாக கூறியுள்ளாரே? அவர் செய்யாத விஷயத்திற்கு புகழைத் தேடுகிறார். நாங்கள் இதுபற்றி சரியான புள்ளிவிவரங்களுடன் அறிக்கையை வெளியிடுவோம். அப்போது அவர் கூறிய பொய் வெட்டவெளிச்சமாகும். வெப்பமயமாதல் இந்தியாவை பாதிக்கும் என்று கூறியிருக்கிறார்கள். நீங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லையா? ஆயிரம் ஆண்டுகளாக பூமி இதுபோல சூழலைச் சந்தித்து வருகிறது. நாம் உயிர்வாழவில்லையா?  இந்தியாவின் நடைமுறைக்கு ஏற்ப ச

மறுசுழற்சிக்கு முட்டுக்கட்டை போடுவது யார்?

படம்
மறுசுழற்சி என்றவுடன் சூழலியலாளர்கள் மகிழ்ந்துபோவார்கள். ஆனால் அம்முயற்சி எளிதில் கைகூடாது என்பதுதான் சோகம். அதற்கு தடையாக நிற்பது சிறப்பங்காடி ஆட்கள்தான். பிளாஸ்டிக் பை தராவிட்டால் சூழல் பிரச்னைகள் குறைந்துவிடுமா இல்லை என்பதே நிஜம். லேஸ், குர்குரே உள்ளிட்ட பாலீதின் பைகள் லேமினேட் செய்யப்பட்ட பிளாஸ்டிக் ரக பைகள் இவைகள் எப்படி மண்ணில் செரிமானம் ஆகும் என்கிறார் மறுசுழற்சி சங்கத் தலைவர் கிரெய்க் கர்டிஸ். இங்கிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு இப்போது தலைவலி தொடங்கிவிட்டது. மறுசுழற்சி செய்யும்  பிளாஸ்டிக்குகளுக்கு பிரச்னை இல்லை. ஆனால் அதில் 30 சதவீதம்தான் மறுசுழற்சி செய்யமுடியும் என்ற கண்டுபிடித்தால் அதற்கு ஏராளமாக வரி போட முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை பிலிப் ஹாலந்து வெளியிட்டுள்ளார். ஐஸ்லாந்து,  இந்தப் பிரச்னையை சீரியசாக எடுத்துக்கொண்டு 2023 ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் இல்லாத தேசத்தை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. டெஸ்கோ, லிடில் ஆகிய சூப்பர்மார்க்கெட் நிறுவனங்களும் இதில் மறுசுழற்சிக்கான வேலைகளைத் தொடங்கியுள்ளன. ஆண்டுதோறும் இங்கிலாந்தில் 7.3 டன் பி

ரீசைக்கிள் பிளாஸ்டிக் ரெடி! - அன்லிமிடெட் மறுசுழற்சி செய்யலாம்

படம்
ரீசைக்கிள் செய்துகொண்டே இருக்க உதவும் பிளாஸ்டிக்! பிளாஸ்டிக்கை ரீசைக்கிள் செய்யலாம் என்ற ஒரே காரணத்திற்காக அதனைப் பயன்படுத்த முடியாது. பிளாஸ்டிக்கில் பல்வேறு வகைகள் உண்டு. சிலவற்றை மறுசுழற்சி செய்யும் முயற்சி அதனைத் தயாரிக்கும் செலவையே மிஞ்சும். அப்போது என்ன செய்வீர்கள். அமெரிக்க அரசின் ஆற்றல் துறையைச் சேர்ந்த லாரன்ஸ் பெர்க்கிலி தேசிய ஆய்வகம் இதற்காகவே பலமுறை மறுசுழற்சி செய்ய முடியும் தன்மையிலான பிளாஸ்டிக்கை உருவாக்கி உள்ளனர். அனைத்து பிளாஸ்டிக்குகளையும் ரீசைக்கிள் செய்ய முடியாது. அதற்காவே நாங்கள் புதியமுறையில் பிளாஸ்டிக்கின் மூலக்கூறுகளை மாற்றியுள்ளோம் என்கிறார் வேதியியலாளர் பீட்டர் கிறிஸ்டென்சன். பிளாஸ்டிக் பொருட்கள் பெரும்பாலும் கச்சா எண்ணெயிலிருந்து எடுக்கப்படுவை. இதில் பல்வேறு வேதிப்பொருட்களை சேர்த்து பொருட்களாக த்தயாரிக்கிறார்கள். அப்படித்தான் கேரிக்பேக், உடைகள், ஸ்ட்ராக்கள், நாற்காலிகள் தயாராகின்றன. 750 மிலி பெப்சி ரூ.35 ரூபாய்க்கு என ஆபரில் அசங்காமல் வாங்கும் பெப்சி பெட்களை ரீசைக்கிள் செய்வது மிக கஷ்டம். புதிய பிளாஸ்டிக்கை டிகடோனாமைன் என்று அழைக்கின்றனர்  - டி

குப்பைகளை மறுசுழற்சி செய்யத் தடுமாறும் தமிழகம்!

படம்
Pammal municipality  கழிவு மேலாண்மையில் தடுமாறும் தமிழகம்! தமிழக அரசு, மாநிலம் முழுவதும் தினசரி உருவாகும் 14 ஆயிரத்து 500 டன் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் தடுமாறி வருகிறது. மத்திய அரசு, திடக்கழிவுகளை கையாள்வதற்கான கொள்கைகளை புதுப்பித்துள்ளது. மறுபுறம்,  உச்ச நீதிமன்றம் தமிழக அரசைக் கண்டித்து அபராத தண்டனைகளை விதித்துள்ளது. இதெல்லாம் எதற்கு? வீடுதோறும் அரசு பெறும் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வது தொடர்பாகத்தான்.  தமிழக அரசு, இதுதொடர்பான புதியகொள்கைகள் உருவாக்கி ஆறுமாதங்கள் ஆகின்றன. ஆனால், திட்டம் இன்னும் செயற்பாட்டிற்கு வரவில்லை. கொள்கை குழப்பம் தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளும், 124 நகராட்சிகளும், 528 நகர பஞ்சாயத்துகளும் இயங்கி வருகின்றன. இதில் சென்னை மாநகராட்சியில் மட்டும் தினசரி 5 ஆயிரம் டன் கழிவுகள் உருவாகின்றன. பிற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உருவாகும் கழிவுகளின் அளவு 7 ஆயிரத்து 600 டன். நகர பஞ்சாயத்துகளின் கழிவு அளவு 2 ஆயிரம் டன். தமிழக அரசு தற்போது உருவாக்கி வரும் கழிவு மேலாண்மை கொள்கையில், மக்களின் வீடுகளில் பெறும் கழிவுகளை என்ன செய்வது என்பது குற