பொதுவாழ்க்கையை மதம் கட்டுப்படுத்தும்போது, மதச்சார்பற்றவராக இருப்பதே நல்லது - எழுத்தாளர் எலிஃப் சாஃபாக்
நேர்காணல் எலிஃப் சாஃபாக் ஆங்கில துருக்கி பூர்வீகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சாஃபாக். தனது பத்தொன்பதாவது நூலை எழுதியிருக்கிறார். அந்த நாவலின் பெயர், தேர் ஆர் ரிவர்ஸ் இன் தி ஸ்கை. நாவலின் கதை தொன்மைக்கால மெசபடோமியா, விக்டோரியா காலகட்ட இங்கிலாந்து எனச் சுற்றி நவீன கால துருக்கியில் வந்து நிறைவு பெறுகிறது. இந்த விஷயங்களை ஒன்றாக இணைக்கும் புள்ளியாக நீர் உள்ளது. ஹெவி மெட்டல் இசை கேட்டபடியே நாவல் எழுதும் பழக்கம் கொண்டவரிடம் பேசினோம். புதிய நாவலில், வரலாறு, நிலப்பரப்பு என இரண்டுமே கலந்துள்ளது. இப்படியான அம்சங்களை தொடர்ச்சியாக எடுத்து எழுத என்ன காரணம்? எழுத்தாளராக எனக்கு கதைகள் மட்டும் பிடித்தமானதில்லை, மௌனமும் பிடிக்கும். வரலாற்றில் மக்கள் மௌனமாக்கப்பட்ட இடங்கள் உண்டு. துருக்கியில் கூறப்பட்ட கதைகள் பெரும்பாலும் அதிகாரத்தில் உள்ளவர்களின் கோணத்தில் அமைந்தவைதான். நமக்கு கூறப்படும் பெரும்பான்மை கதைகள் இப்படியான பின்னணி கொண்டவைதான். அதிகாரமற்ற சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஆண், பெண் ஆகியோரின் கதைகள் மறந்துபோனவையாக உள்ளன. கூறப்படாத கதைகளைக் கூறுவதில் எனக்கு ஆர்வமுண்டு. மௌனம், இட...