தென்னிந்திய குலங்களும் குடிகளும் ந சி கந்தையா
தென்னிந்திய குலங்களும் குடிகளும் ந சி கந்தையா ஆய்வு நூலின் சுருக்கம் ஆங்கில ஆய்வாளர் எட்கர் தர்ஸ்டீன் மேற்சொன்ன பெயரில் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். அதன் மொழிபெயர்ப்பு தமிழில் கிடைக்கிறது. ந சி கந்தையா எழுதிய நூல், பல்வேறு நூல்களின் சுருக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எந்தெந்த நூல்கள் என்ற தெளிவு இல்லை. நூலின் முன்னுரையில் எட்கர் தர்ஸ்டீன் ஆய்வை பார்ப்பனர்களிடம் கேட்டு எழுதிக்கொண்டார். கள ஆய்வுக்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படியானால் இந்த நூலை ந சி கந்தையா கள ஆய்வு செய்து எழுதினாரா என்றால் அதற்கு எந்த பதிலுமில்லை. ஆங்கிலத்தில் எழுதி வைத்ததை அப்படியே தமிழில் சுருக்கமாக 85 பக்கங்களில் எழுதியிருக்கிறார். அவ்வளவே மற்றபடி சில இடங்களில் தெளிவுக்கு அடிக்குறிப்பு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சாதிகள், அவர்களின் பழக்க வழக்கங்கள், பட்டப்பெயர்கள், திருமண சடங்குகள் ஏன ஏராளமான விஷயங்கள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. சில சாதிகளைப் பற்றிய தகவல்கள் விரிவாக உள்ளன. சில சாதிகளுக்கு சொல்ல ஏதுமில்லை என்பது போல சுருக்கமாக உள்ளது. வதந்தி பத்திரிகையில் வர...