ஒருவர், மக்கள் திரளின் முடிவுகளை பின்தொடர்வது ஏன்?
உளவியல் கேள்வி பதில்கள் அதிகாரத்தை எதிர்ப்பது எப்படி? உண்மைகளை மக்களுக்கு கொண்டு செல்லவேண்டும். தொடர்ந்து நீங்கள் நம்புகிற உண்மைக்காக போராடவேண்டு்ம். இந்த போராட்டத்தில் யாருக்காக போராடுகிறீர்களோ அவர்களே கூட உங்களை இழிவு செய்யலாம். அரசு உங்களை பயங்கரவாத சட்டத்தில் கைதுசெய்யலாம். உங்கள் வீடு புல்டோசரால் இடிக்கப்படலாம். அமலாக்கத்துறை சொத்துக்களை பறிமுதல் செய்யலாம். வழக்கு பதிவு செய்து அலைய வைக்கலாம். ஆனால் பொதுநலனுக்கான போராடும், உண்மையைப் பேசும் மனிதர்கள் உலகமெங்கும் இதுபோன்ற நெருக்கடிகளை சந்தித்துதான் முன்னேறுகிறார்கள். இந்த முயற்சியில் அவர்கள் சிறைப்படலாம் அல்லது கொல்லப்படலாம். ஆனால், உங்களின் வாழ்க்கை உண்மையை பேசி மக்களுக்காக போராடுபவர்களுக்கான உரமாகும். முட்டாள்தனமான பணிதல் அரசை வலுப்படுத்தலாம். சர்வாதிகாரப் பாதையில் பயணிக்க ஆதரவளிப்பதாக அமையும். நெருக்கடி வந்தாலும் நேர்மையான அணுகுமுறையை கைவிட்டுவிடக்கூடாது. மதவாதம், அதன் தொடர்ச்சியாக மூடநம்பிக்கைகள், கடந்தகால வரலாற்று வெறுப்பு ஆகியவை நிகழ்கால மக்களின் வாழ்வை குலைத்து போட்டுவிடும். அவற்றை தடுப்பது சிந்தனையாளர்களின் பணி. அ...