இடுகைகள்

டாக்டர் ஜி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மகப்பேறு மருத்துவத்தின் மூலம் தன்னைச்சுற்றியுள்ள பெண்களை புரிந்துகொள்ளும் மருத்துவர்! டாக்டர் ஜி

படம்
  டாக்டர் ஜி ஆயுஷ்மான் குரானா, ரகுல் ப்ரீத் சிங், ஷெபாலி ஷா இசை அமித் திரிவேதி   பொதுமருத்துவம் படித்த உதய் குப்தா, சிறப்பு மருத்துவராக மாற எலும்புகள் பற்றி படிக்க நினைக்கிறார். ஆனால் அதை படிப்பதற்கான சீட், அவருக்கு அருகில் கிடைப்பதில்லை. எனவே மகப்பேறு மருத்துவத்தை அவர் தேர்ந்தெடுக்கிறார். ஆனால் அதை முழு மனதாக செய்யவில்லை. ஆண் என்றால் மகப்பேறு மருத்துவம் எதற்கு செய்யவேண்டும் என நினைக்கிறார். பெண்களுக்குத்தான் அது சரியானது என நினைக்கிறார். இந்த மனநிலையை அவர் மாற்றிக்கொண்டு நல்ல மகப்பேறு மருத்துவராக அவர் மாறுவதுதான் கதை. உதய் குப்தா, ஆணாதிக்க கருத்துகள் கொண்டவர். அவருக்கு அவரது நெருங்கிய உறவினரான எலும்பு மருத்துவர்தான் ரோல்மாடல். அதுபோல மருத்துவராகி சந்தோஷமாக வாழவேண்டும். வெற்றிகரமான மருத்துவராக செயல்டுவதே கனவு. ஆனால் நிலைமை அப்படி எளிதாக செல்லவில்லை. அவருக்கு மகப்பேறு மருத்துவம்தான் படிக்க கிடைக்கிறது.   மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை என இரண்டு இடங்களிலும் அவர் தன்னை மிகவும் அந்நியமாக உணர்கிறார். வகுப்பில் அவர் மட்டும்தான் ஒரே ஆண். வேலையின்போது, ஆசிரியரும் துறை தலைவருமான நந்த