இடுகைகள்

துப்பாக்கி விதிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

துப்பாக்கி விதிகள் மாற்றவேண்டுமா? - கலிஃபோர்னியாவில் புதிய பிரச்னை!

படம்
வடக்கு கலிஃபோர்னியாவிலுள்ள கில்ராய் எனுமிடத்தில் உணவுத்திருவிழா நடைபெற்றது. இதில் வெள்ளை இனவெறியர் துப்பாக்கியில் சுட்டதில் 12 பேர் காயமடைந்தனர். 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2014 ஆம் ஆண்டிலிருந்து கலிஃபோர்னியாவில் நடைபெறும் ஏழாவது துப்பாக்கிச்சூடு சம்பவம் இது. டெக்சாஸ் மாநிலம் இவ்வகையில் நான்கு துப்பாக்கிச்சூடுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. துப்பாக்கிச்சூட்டை செய்தவருக்கு வயது 19 தான். சான்டினோ வில்லியம் லீகன் என்பவர் போலீசாரால் உணவுத்திருவிழா இடத்திலேயே கொல்லப்பட்டார். இவர் இன்ஸ்டாகிராம் கணக்கில் துப்பாக்கிச்சூட்டிற்கு சில மணிநேரம் முன்பு மைட் ஈஸ் ரைட் எனும் ராக்னர் ரெட்பியர்டு 1890 ஆண்டு எழுதிய நூலை பகிர்ந்துள்ளார். இது வெள்ளையர்களின் இனமேன்மையை தூக்கி பிடிக்கும் நூல். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடுகள் நடைபெறும் சமயம் மட்டும் பேசப்படும் சமாச்சாரமாக மாறிவிட்டது. தேசிய ரைபிள் அசோசியேஷனின் பணம் பெற்று பிரசாரத்தில் ஈடுபட்ட ட்ரம்ப் நிச்சயம் துப்பாக்கிகளை இளைஞர்கள் வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பில்லை. வெள்ளை இனவாதம் என்பதை போலியாக உருவாக்கி தேர்தலில் வெல்ல