இடுகைகள்

சுத்தியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடவுளின் ஆணைக்கு இணங்கி பெண்களை கொலை செய்தவர் - ஹார்வி லூயிஸ்

படம்
  ஹார்வி லூயிஸ் பெண்களைக் கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி. சட்டம் சீர்திருத்தம் செய்யப்பட்ட காலத்தில் அதன் பயனை அனுபவித்தார். இப்படி சட்ட ரீதியாக பயன் பெற்றவர் அதைப் பயன்படுத்தி திருந்தியிருக்கலாம். ஆனால், ஹார்வி அப்படி ஏதும் செய்யவில்லை. 1951ஆம் ஆண்டு மரணதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்த பிறகு   1960ஆம் ஆண்டு,   பிணை வழங்கப்பட்டது. ஹார்வியைப் பொறுத்தவரை சிறைக்கு முன்னும் பிறகும் எந்த மாற்றமும் இல்லை. கொள்ளை, கொலை, தாக்குதல் என்றுதான் வாழ்ந்தார். இதற்காக, 1965ஆம் ஆண்டு பதினைந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் நல்லவிதமாக நடந்துகொண்டதற்காக தண்டனை குறைக்கப்பட்டு   1969ஆம் ஆண்டு விடுதலையானார். தண்டனைகள், சிறை என்பதெல்லாம் ஹார்வி விஷயத்தில் எதிர்மறையாகவே மாறிப்போனது. சமூகத்தையும், அதில் இடம்பெற்ற பெண்களையும் கடுமையாக வெறுக்கத் தொடங்கினார். இரண்டு முறை விதவைப் பெண்களை திருமணம் செய்தார். ஆனால் யாரிடமும் நெருக்கமாக இல்லை. அவர் பாட்டிற்கு காரை எடுத்துக்கொண்டு தனியாக சுற்றி வந்துகொண்டிருந்தார். இதனால் ஹாரியின் திருமண