இடுகைகள்

நே்ர்காணல்- சமூகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"என் மகனைக் கொன்றவர்கள் மனிதர்களே அல்ல"- இம்தாதுல்லா ரஷீதி

படம்
முத்தாரம் நேர்காணல் இம்தாதுல்லா ரஷீதி , நூரானி மசூதி இமாம் ( அசன்சோல் ) தமிழில் : ச . அன்பரசு மேற்கு வங்கத்தில் அசன்சோல் நகரில் நடைபெற்ற ராமநவமி விழாவின்போது சிப்துல்லா என்ற பத்தாம்வகுப்பு மாணவன் படுகொலை செய்யப்பட்டார் . இதற்கு பழிவாங்க துடித்த தன் உறவினர்களை இறந்த சிப்துல்லாவின் தந்தையும் மசூதி இமாமுமான இம்தாதுல்லா ரஷீதி தடுத்துள்ளது நாடெங்கிலும் மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது . உங்கள் மகனின் படுகொலைக்கு பின்னே யார் உள்ளனர் ? போலீசில் புகார் கொடுத்துள்ளோம் . என் மகனைக் கொன்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மனிதர்களே அல்ல . நிலைமையை எப்படி சமாளித்தீர்கள் ? எனது மகன் படுகொலை செய்யப்பட்டதும் எங்கள் சமூகத்தில் கடுமையான எதிர்வினை உருவானது . நமாஸ் செய்தபின் அனைவரையும் ஓரிடத்தில் அழைத்து பேசினேன் . யாரேனும் பழிக்குபழி என இறங்கினால் நான் அசன்சோல் நகரை விட்டு சென்றுவிடுவேன் என எச்சரித்ததோடு இஸ்லாம் ஈவிரக்கமற்ற கொலைகளையும் தாக்குதல்களை ஏற்றுக்கொள்வதில்லை என அறிவுறுத்தினேன் . கோபத்துடன் இருந்தவர்களில் பெரும்பாலோர் எனது மாணவர்கள்