இடுகைகள்

இழப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிலநடுக்கத்தை முன்னரே அறிந்து இழப்பைத் தடுக்க உதவும் கருவிகள், முறைகள்!

படம்
  நிலநடுக்கத்தை அறிய உதவும் பல்வேறு முறைகள்!  பூமியின் கீழுள்ள அடித்தட்டு பகுதி (Crust), மேற்புற மூடகம் (Mantle) ஆகியவற்றுக்கு இடையில்  புவித்தட்டுகள் அமைந்துள்ளன. இவை ஒன்றன் மீது மற்றொன்று நகரும்போது  நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிலநடுக்கம் தொடங்கும் பூமியின் புள்ளி, ஃபோகஸ் அல்லது ஹைப்போசென்டர்  (Hypo center)என்று அழைக்கப்படுகிறது.  நெகிழ்வுத்தன்மை கொண்ட பொருளை எளிதாக நீட்ட முடியும். இதில் கூடுதலாக அழுத்தம் சேரும்போது, குறிப்பிட்ட வரம்புவரை நீளும். அதையும் தாண்டி அழுத்தம் கொடுத்தால் அப்பொருள் உடைந்துவிடும். பூமியும் அப்படித்தான் இயங்குகிறது. பூமியின் கீழ்ப்பகுதியில்  வெப்பம், அழுத்தம் உருவாகிறது. இப்படி உருவாகும் ஆற்றலை பூமி, நெகிழ்வுத்தன்மை கொண்ட அலையாக மாற்றுகிறது. இதனை நிலநடுக்க அலைகள் (Seismic waves) என்று புவியியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.  நிலநடுக்க அலைகளை, நிலநடுக்க அளவீட்டு நிலையங்கள் கண்டறிகின்றன. அலைகளின் ஆற்றலை அறிய, சீஸ்மோகிராப் கருவிகள் உதவுகின்றன. இந்தியாவில், புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் தேசிய நிலநடுக்க அளவீட்டு மையம் (National Center for Seismology (NCS)) செயல்பட்டு

தனது காதலியை பறித்த ஊரை வேட்டையாடத் துடிகும் ஷிபு! - மின்னல் முரளி - பசில் ஜோசப் - மலையாளம்

படம்
  மின்னல் முரளி பசில் ஜோசப் மலையாளம்  ஜெய்சனை மின்னல் முரளியாக கண்டுபிடித்துப் பேசும் காட்சி ஒரு கிராமம். அங்கு ஏற்படும் வரலாற்று முக்கியமான கிரக சூழ்நிலையில் மின்னல் தாக்குகிறது. அதன் பாதிப்பில் கிராமத்திலுள்ள இருவர் மாட்டுகின்றனர். இருவரும் அதனால் சக்தி பெறுகிறார்கள். அதனை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதே கதை.  ஜெய்சன், ஊரில் டெய்லர் கடை வைத்திருக்கிறார். அவருக்கு ஒரே லட்சியம், பாஸ்போர்ட் வாங்கி அமெரிக்காவுக்கு போவதுதான். தனியாக அமெரிக்காவுக்கு போய் என்ன செய்வது என, அந்த கிராமத்து  இன்ஸ்பெக்டர் பெண்ணையும் காதலிக்கிறார். அதாவது, ஜெய்சனுக்கு அந்தப் பெண் மீது காதல் இருக்கிறது. அந்தப் பெண்ணுக்கான பொழுதுபோக்குக்கு ஜெய்சன் உதவுகிறான். ஆனால் அவள், வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை  திருமணம் செய்துகொள்ள இசைகிறாள்.  உஷாவை சந்தித்துப் பேசும் நெகிழ்ச்சியான காட்சி... இதனால், ஜெய்சன் கோபம் கொள்ளுகிறான். அதேநேரம், அங்குள்ள டீக்கடையில் மாஸ்டராக வேலை செய்பவன், ஷிபு. இவனை கிராமத்தில் யாருக்கும் பிடிப்பதில்லை. இதற்கு காரணமான காட்சி, தாசனுடன் ஷிபு பேசும் காட்சி.  ஷிபுக்கு ஒரே லட்சியம், பசியைச் சமாளிப்பது

2022இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் புதிய நூல்கள்!

படம்
  டிரேஸி ஃபிளிக் கேனாட் வின் டாம் பெரட்டா டிரேஸி ஃபிளிக்  என்ற பாத்திரம் எப்படி பாலின வேறுபாடுகளைத் தாண்டி தனது துறையில் வெல்கிறார் என்பதே கதை. எலக்சன் என்ற நூலை எழுதியபிறகு 25 ஆண்டுகள் கழித்து டிரேஸி ஃபிளிக் என்ற பாத்திரத்துடன் வாசகர்களை எழுத்தாளர் டாம் பெரட்டா சந்திக்க வந்துள்ளார். உயர்நிலைப்பள்ளி துணை முதல்வராக உள்ள டிரேசி பல்வேறு சவால்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை.  தி கிரேன் வைஃப் சிஜே ஹாசர் ஆய்வுக்காக செல்லும் பயணத்தில் காதல், அன்பு, திருமணம் ஆகியவற்றை புரிந்துகொள்கிறார் எழுத்தாளர் ஹாசர். இதன் விளைவாக நடக்கவிருந்த தனது திருமணத்தைக் கூட நிறுத்திவிடுகிறார். இப்படி செய்ய என்ன காரணம் என்பதை நூலில் ஹாசர் வாசகர்களுக்கு கூறுகிறார்.  ரெயின்போ ரெயின்போ லிடியா கான்கிளின் நூல் முழுக்க மாற்றுப்பாலினத்தவர்களின் கதைகள் நிரம்பி வழிகின்றன. ஓரினச்சேர்கைத் தம்பதிகள், சமூகத்தோடு இணைந்து வாழ விரும்பும் மாற்றுப்பாலினத்தவர்கள் சந்திக்கும் அனுபவங்கள், இதில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் என பல்வேறு உணர்வுகளை சொல்லும் கதைகளாக உள்ளன. விரும்புபவர்கள் இதனை வாங்கி வாசிக்கலாம்.  எய்தர் ஆர்

பறவையால் அழகாகிறது வானம்! - கடிதங்கள்

படம்
           பறவையால் அழகாகிறது வானம்!   அன்பு நண்பர் சபாவுக்கு , வணக்கம் . நான் செனைனக்கு வந்துவிட்டேன் . பள்ளிகள் தொடங்கிவிட்டதால் , மாணவர்கள் பஸ்ஸில் தொங்கியபடி செல்லும் காட்சிகளை இனி பார்க்க முடியும் என நினைக்கிறேன் . அறை முழுக்க தூசு காற்று போல நிரம்பியிருந்தது . வாடகைப்பணத்தைக் கொடுத்துவிட்டேன் . படிக்க வேண்டிய நூலாக நேரு எனக்காக இன்னும் காத்திருக்கிறார் . அதனை இப்போதுதான் மெல்ல படிக்கத் தொடங்கியுள்ளேன் . வரும் திங்கள் முதல் அலுவலகம் தொடங்கவிருக்கிறது . வேலைகள் நெருக்கும் என்று நினைக்கிறேன் . ஆசிரியர் சிவராமன் வீட்டுக்கு போகவேண்டும் என நினைத்துள்ளேன் . இந்த பிறந்தநாளுக்கு அவர் வீட்டிற்கு செல்ல நினைத்தே்ன் . ஆனால் பல்வேறு சிக்கல்களால் அதனை சாத்தியப்படுத்த முடியவில்லை . அதற்காக கடிதம் ஒன்றை எழுதி அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பினேன் . மனிதர் பதறிப்போய் போனில் அழைத்து என்னாச்சு என்று கேட்டார் . அவரைப்பற்றி நான் என்ன நினைத்தேன் என்பதை உணர்ச்சிகரமாக எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன் . பிறகு எப்போதுதான் இதனை சொல்லுவது ? அவர் கொடுத்த ஊக்கம்தான் எனக்கு என்மேல் நம்பிக

பொருளாதாரத்தை வீழ்த்திய கொரோனா! 2020இல் என்ன நிலையை உலகம் சந்தித்து கடந்து வந்தது?

படம்
                 உலகப் பொருளாதாரத்தை வீழ்த்திய கொரோனா! சீனாவில் 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா நோய்த்தொற்று தற்போதுவரை 188 நாடுகளைத் தாக்கியுள்ளது . முன்னதாக பொதுமுடக்க அறிவிப்புகளை அறிவிக்காத நாடுகள் கூட இப்போது இரண்டாவது அலை கொரோனா தொற்றைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன . உலக நாடுகளில் உள்ள பங்குச்சந்தைகளும் , ஓய்வூதியம் , தனிநபர் சேமிப்பு கணக்குகள் உட்பட அனைத்தும் பெருந்தொற்று சூழலால் பாதிக்கப்பட்டன . நாடுகளிலுள்ள மத்திய வங்கிகள் மக்களுக்காக வட்டி சதவீதத்தைக் குறைத்தன . மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டன . உலக நாடுகளின் அரசுகள் மானிய உதவிகளையும் , கடன் தவணைகளை நீட்டித்து தொழிற்துறைக்கு உதவின . கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெருநிறுவனங்கள் பணியாளர்களுக்கு சம்பள வெட்டை அமல்படுத்தின . இன்னும் சில நிறுவனங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்தன . வீட்டிலேயே வேலை செய்யும் முறை அறிமுகமானது . உலகின் பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவில் வேலையிழப்பு 10.4 சதவீதம் என உலக நிதி கண்காணிப்பகம் கூறியுள்ளது . வல்லரசு நாடுகளின்

உலகப் பொருளாதாரத்தின் அடிப்படை இயற்கைதான்!

படம்
pixabay உலகளவில் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் இயற்கையான சூழலை அழித்து அதில் பெரும் கட்டுமானங்களை நிறுவுவதாகவே இருக்கின்றன. இத்தொழிற்சாலைகளும் கூட இயற்கையான கனிமங்களை நம்பியே உருவாகின்றன. அல்லது அவற்றிலிருந்து புதிய பொருட்களை உருவாக்குவதாக உள்ளன. உலக பொருளாதார அமைப்பு இதுபற்றிய அறிக்கையில் இயற்கையைச் சார்ந்தே உலக நாடுகளின் பொருளாதார வலைப்பின்னல் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் இயற்கை ஆதாரங்களை சார்ந்துள்ள நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 44 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும். ஒரு ட்ரில்லியன் என்பது லட்சம் கோடி. உலக நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு 86 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும். உலகளவில் இயற்கையைச் சார்ந்துள்ள மூன்று துறைகள் கட்டுமானத்துறை 4 ட்ரில்லியன் டாலர்கள் விவசாயத்துறை 2.5 ட்ரில்லியன் டாலர்கள் உணவு மற்றும் குளிர்பானங்கள் துறை - 1.5 ட்ரில்லியன் டாலர்கள் இயற்கையோடு சம்பந்தப்படாத சில துறைகளும் உண்டு. அவை விமானத்துறை, வேதிப்பொருட்கள், சுற்றுலாத்துறை. ரியல் எஸ்டேட், சுரங்கம், உலோகம், நுகர்பொருட்கள் ஆகியவை மறைமுகமாக இயற்கையைச் சார்ந்துள்ளவ

வங்கிகள் தேசியமயமானதன் 50 ஆண்டு நிறைவு!

படம்
வங்கிச் சீர்த்திருத்தங்களில் முக்கியமானது 14 வங்கிகளை அரசு தேசியமயமாக்கியதுதான். இது காங்கிரசுக்கு சோசலிச அரசு என்று பெயர் தந்ததோடு, தேர்தலிலும் வெல்ல உதவியது. ஏழை மக்களிடம் இதன் மூலம் இந்திராவுக்கு செல்வாக்கு பெருகியது. 1960 ஆம் ஆண்டு பல்வேறு தனியார் வங்கிகள் மக்களின் பணத்தை ஏமாற்றிவிட்டு காணாமல் போய்க்கொண்டிருந்தன. பெங்களூருவில் ஜூலை 12 அன்று வங்கிகளை தேசியமயமாக்குவதை நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாயிடம் கூறினார். ஆனால் அவர், தனியார்மயத்தை , தொழிற்சாலைகளுக்கு ஊக்கம் தருபவர். எப்படி அதை ஏற்பார்? உடனே தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அப்போது இந்திராவுக்கு பதவியை தக்க வைத்துக்கொள்ளும் அவசியமும் இருந்தது. இந்திராவின் தேசியமயமாக்கல் முடிவுக்கு ஆர்பிஐ ஆளுநர் எல் கே ஜா, ஐ பொருளாதார செயலாளர் ஜே படேல் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். அப்போது வங்கிகள் விவசாயத்திற்கு 2 சதவீதத்திற்கு மட்டுமே வங்கிகள் தந்து வந்தன. தொழிற்சாலைகளுக்கு 68 சதவீத கடன்களை வழங்கியிருந்தன. அப்போதுதான் பசுமைப் புரட்சி திட்டமும் அமலுக்கு வந்தது. திட்டத்தைத் தயாரித்து அமைச்சரவையைக் கூட்டி முடிவைச் சொல்லி அவர்களின் அனு

காரின் திறன் குறைவதை தடுக்க முடியுமா?

படம்
ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி கார்கள் தன் திறனை ஆண்டுகள்தோறும் இழக்கிறதா? ஏன் நீங்கள் கூடத்தான் இருபது வயதில் செய்த விஷயங்களை அறுபதில் செய்ய முடியாமல் தடுமாறுகிறீர்கள். கார்களும் அதேபோல்தான். என்ன அம்பாள் சர்வீஸ் சென்டரில் சர்வீஸ் செய்தால், சும்மா விர் வேகம் காட்டும் மாருதி போல இழப்பு குறையும். நீங்கள் செல்லும் சாலை, பயன்படுத்தும் எரிபொருள், வண்டியை ஓட்டும் விதம் ஆகியவை காரின் திறன் குறைவில் முக்கிய பங்காற்றுகின்றன. ஆண்டுகள்தோறும் காரின் திறன் குறைவு தவிர்க்க முடியாது. எந்திரங்கள் தேய்மானம் அடைவது இயற்கை. எனவே அதனைக் கூடுமான அளவு குறைக்க முயற்சிப்பது மட்டுமே நம்மால் முடியும். நன்றி: பிபிசி

கார்பன் வரி கட்டுவது மக்களின் கடமை

படம்
கார்பன் வரி கட்டவேண்டிய நேரம் இதுவே. பிரான்சில் கார்பன் வரி காரணமாக நாடு திரண்டு போராடிய போராட்டங்களைப் பார்த்திருப்போம். உண்மையில் அது அவசியமா இல்லையா என்பது அவரவருக்கு கருத்து மாறுபடலாம். ஆனால் அந்த வரி தவிர்க்க முடியாது என்கிறார் கில்பெர்ட் மெல்காஃப். பசுமை பொருளாதாரம் என்பது பேச்சளவில் நன்றாக இருந்தாலும் நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என உறுதிப்பட பேசுகிறார் பொருளாதார வல்லுநர் கில்பர்ட் மெல்காஃப். பேயிங் ஃபார் பொல்யூசன்: வொய் எ கார்பன் டாக்ஸ் இஸ் குட் ஃபார் அமெரிக்கா என்ற நூலை அண்மையில் எழுதியுள்ளார். நீங்கள் இப்போது கரிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கார்பன் வரியை விதிக்காவிட்டால் பின்னாளில் பெரும் விலையை தரவேண்டி வரும் என எச்சரிக்கிறார் இவர். கார்பன் வரி கட்டுவதை எப்படி உங்கள் நூலில் நியாயப்படுத்துகிறீர்கள்? கரிம எரிபொருட்களை எரிப்பதால் வரும் கார்பன் டை ஆக்சைடு பசுமை இல்ல வாயுக்களை அதிகரிக்கும். மேலும் பருவநிலை மாறுபாடு ஏற்படும்போது, பசுமை இல்ல வாயுக்களின் பாதிப்பு மேலும் அதிகரிக்கும். மக்கள் தாங்கள் பயன்படுத்தும் வசதிகளுக்கேற்ப ஏற்படும் ப