இடுகைகள்

இளைஞன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மகனின் ராணுவ வேலையை மௌனமாக நிராகரிக்கும் பாச அம்மா! யுவகுடு - கருணாகரன் - தெலுங்கு

படம்
  யுவகுடு சுமந்த், பூமிகா சாவ்லா இயக்குநர் - ஏ.கருணாகரன் திரைக்கதை - ரங்கராஜ், நந்தகோபால் இசை - மணிசர்மா சிவா, கல்லூரி படிப்பை விட தன் அப்பா ராணுவ வீரராக இருந்து உயிரை விட்ட ராணுவத்தில் சேருவதுதான் லட்சியம். இதை அவன் தன் வீட்டிலுள்ள அம்மாவுக்கு கூட சொல்லாமல் செய்கிறான். அம்மா பள்ளி ஆசிரியராக வேலை செய்யும் ஊட்டிக்கு கல்லூரி விடுமுறையை கழிக்க வருகிறான். அங்கே திடீரென சிந்து என்ற பெண்ணைப் பார்த்து காதலில் விழுகிறான். அவனுக்காக அந்த பெண்ணை தேடிப்பிடிக்க சிவாவின் ஆசிரியை அம்மா முயல்கிறார். அந்த தேடல் சாத்தியமானதா இல்லையா என்பதுதான் கதை.  உண்மையில் இது காதலைச் சொல்லும் படம் கிடையாது. மற்றவர்களுக்காக நாம் படும் அக்கறை தான் முக்கியம். ஆணும் பெண்ணும் கொள்ளும் காதல் அந்தளவு முக்கியமல்ல என்றே செய்தி இறுதியில் சொல்லப்படுகிறது.  பிற தெலுங்கு படங்களை விட இந்த படம் வேறுபடுவது, காதலை சொல்லுகிற அல்லது இதுதான் காதல் என நினைத்துள்ள ஊகத்தனமாக விஷயங்களை உடைப்பதுதான்.  சிந்துவின் பாத்திரமே வித்தியாசமானது. அவள் இறுதிவரை சிவாவை காதலிக்க காரணங்கள் ஏதுமே இருப்பதில்லை. இருந்தாலும் ஒரு காட்சியில் சிவா, காதல் ஆவேச