இடுகைகள்

போலீஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கள்ளக்கடத்தல் செய்யும் நாயகன் திருந்தி வாழ நினைக்கும்போது ஏற்படும் விளைவுகள்!

படம்
  உள்ளத்தில் நல்ல உள்ளம்  விஜயகாந்த், ராதா, ராதாரவி, வினுசக்ரவர்த்தி இயக்கம் மணிவண்ணன் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து நைனாவின் உதவியால் கள்ளக்கடத்தல் தொழிலுக்குள் நுழையும் ஒருவன், காதல்வயப்பட்டு தனது தொழிலை கைவிட முயன்றால் என்ன நடக்கும் என்பதே கதை.  சுபமாக முடியும் கதை கிடையாது. அதை முதலிலேயே கூறிவிடுகிறேன். படத்தில் அந்தமோசமான முடிவுக்கு நைனா பாத்திரம் மூலம் ஏற்கெனவே நம்மை தயார்படுத்திவிடுகிறார்கள். அதனால் பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை, மைக்கேல்ராஜ் என்பவர், கடலை ஒட்டியுள்ள ஊரில் கள்ளக்கடத்தல் செய்கிறார். அதில் கிடைக்கும் பணத்தை காவல்துறை அதிகாரிகளுக்கு கொடுக்கிறார். இதனால் அவர் செய்வதை காவல்துறை கண்டுகொள்வதில்லை. அங்கு புதிதாக வரும் இன்ஸ்பெக்டர் ஷீலா இதை தடுக்க நினைக்கிறார். இவரை மைக்கேல்ராஜ் பெரிதாக தடுக்கநினைப்பதில்லை. கல்யாணம் செய்துகொள்ள நினைக்கிறார். உண்மையில் அவர் யார் என்பது சற்று சுவாரசியமாக உள்ளது.  நைனாவிடம் தொழில் கற்றவரான மைக்கேல் ராஜ், தான்செய்யும் தொழிலை நியாயப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.இறுதியாக அவரோடு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த, இப்போதைக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள ஷீலா சொல்

ஜோம்பி தனது கடந்தகாலத்தை தானே டிடெக்டிவ்வாகி கண்டறியும் கதை!

படம்
              ஜோம்பி டிடெக்டிவ் கொரிய தொடர் ராகுட்டன் விக்கி மருத்துவக் கழிவு கொட்டிக்கிடக்கும் இடத்தில் இருந்து ஒரு உருவம் எழுகிறது . அதுதான் நாயகன் காங் மின்கோ . எழுந்தவர் சிகரெட் பிடிக்கிறார் . வாயில் புகைவிட நினைத்தால் வயிற்றில் உள்ள ஓட்டை வழியாக புகை வெளியே செல்கிறது . அப்போதுதான் அவர் வயிற்றில் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதை உணர்கிறார் . அங்கிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் அதிர்ந்துபோ கிறார் . இறந்து புதைக்கப்பட்டவர் மீண்டும் உயிர் வந்தால் உடல் சதைகள் எப்படி சிதைந்து கிடக்கும் . அப்படித்தான் அவர் உடல் முழுக்க பஞ்சர் ஒட்டியது போல சதைகள் கிழிந்து ஒ ட்டுப்போடப்பட்டது போல உள்ளன . சுருக்கமாக வாழும் பிணம் . அதாவது ஜோம்பி . அவருக்கு தான் யார் , பெயர் , ஆதார் எண் , வங்கியில் கொடுத்த பான் எண் , வீட்டு முகவரி என எதுவுமே நினைவில்லை . தான் யார் , எப்படி கொல்லப்பட்டோம் . ஏன் ஜோம்பி ஆனோம் என்ற உண்மையை மெல்ல கண்டுபிடிக்கிறார் . இந்த கதையை நகைச்சுவையாக கூறியிருக்கிறார்கள் . அடுத்த பாகம் தொடங்கி ஒளிபரப்பப்பட்டாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை . காங் சன்ஜ

நக்சலைட் காதலியைக் காப்பாற்றும் போலீஸ் காதலன்!

படம்
  ஹீரோ 2008 - நிதின், பாவனா ஹீரோ நிதின் , பாவனா எலன் மஸ்க் செவ்வாயை காலனியாக்க துடிக்கிறார் அல்லவா ? அங்கு திரையிடப்பட வேண்டிய படம் . படத்தில் அனைத்துமே மிகையாக நம்ப முடியாமல் உள்ளது . இ து வேறு உலகம் ப்ரோ . நிதினின் அப்பா போலீஸ் கமிஷனர் . அவருக்கு தனது மகனை தனது துறையில் வேலையில் சேர்த்துவிடவேண்டுமென நினைக்கிறார் . ஆனால் அதற்கு அவரது மனைவி சரளா எதிராக நிற்கிறார் . மகன் சினிமா ஹீரோ ஆகவேண்டும் என்பது அவரின் ஆசை . மகனுக்கும் அதுதான் லட்சியம் . இந்த நேரத்தில் நியாய உணர்வு கொண்டவர்கள் போலீஸ்காரர்களாக மாறலாம் என மாநில அரசு சட்டம் கொண்டு வருகிறது . நிதினை பயிற்சிக்கு அப்பா அனுப்புகிறார் . மகனும் வேண்டாவெறுப்பாக மூன்று மாதத்தை கடத்த அங்கு வருகிறார் . மூன்று மாத காலத்தில் போலீஸ் அகாடமியில் நடக்கும் காதல் , நட்பு , தேசப்பற்று இதர சமாச்சாரங்கள்தான் கதை . '' என்னை எதுக்காக காதலிக்கிற ? என்னோட கண்ணு , மூக்கு , வாய் , உதடு , கழுத்து பிடிக்குமா ?'’ என காதலி கிருஷ்ணவேணி கேட்க , சட்டென நாயகன் ராதாகிருஷ்ணன் அவளின் நீலநிற இடுப்

அப்பாவின் முன்கோபத்தால் திருடனாக மாறும் மகன் - கூண்டா - சிரஞ்சீவி, ராவ் கோபால் ராவ், ராதா

படம்
  கூண்டா  சிரஞ்சீவி, ராதா, சைகலா நாராயணா  இயக்கம் - கோதண்டராமி ரெட்டி இசை கே சக்ரவர்த்தி கொல்கத்தாவில் தொடங்கும் கதை, ஆந்திரத்தின் ஹைதராபாத்தில் முடிவடைகிறது. கொல்கத்தாவில் காளிதாஸ் என புகழ்பெற்ற நகை கொள்ளையன் தனது வளர்ப்பு தந்தையோடு வாழ்கிறான். வளர்ப்புத்தந்தைக்கு திருட்டுதான் தொழில். அதில் சாதிக்கும்படி காளிதாசுக்கு பயிற்சி கொடுக்கிறார்.அ வனும் வளர்ந்து, வளர்ப்புத்தந்தையின் வணிகத்தை பெருமளவு வளர்த்துக்கொடுக்கிறான். இந்த நிலையில் வளர்ப்புத் தந்தையின் தொழிலை யார் தொடருவது என காளிதாசுக்கும், வளர்ப்புத்தந்தையின் மருமகன் காசிராமுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதில் தோற்றுப்போகும் காசிராம் காளிதாசை கொலைசெய்ய நேரம் பார்த்து காத்திருக்கிறான். இந்தநேரத்தில் வளர்ப்புத்தந்தை விபத்து ஒன்றில் இறக்க, அங்கிருந்து கிளம்பும் காளிதாஸ் ஹைதராபாத்திற்கு வேலை தேடி வருகிறான். அ்ங்கு எஸ் பி ஒருவரை ரயில் சந்திக்கிறான். அவரை கொல்ல முயல்பவர்களை விரட்டுகிறான். பிறகு அவர் வீட்டில் தங்கி வேலை தேடுகிறான். உண்மையில் அந்த எஸ்பி யார், காளிதாசின் சிறுவயது, அவனது பெற்றோர் யார் என்பதை படம் விவரிக்கிறது.  மேற்சொன்னபடியும் கதை

மகளின் காதலனின் மேல் தந்தைக்கு உருவாகும் அதீத வன்மம்! தனா 51

படம்
  தனா 51 சுமந்த், சலோனி அஸ்வானி, முகேஷ் கண்ணா இயக்குநர் சூரிய கிரண் இசை சக்ரி  தனா போலீஸ் ஆகவேண்டும் என துடிக்கும் இளைஞர். தினத்தந்தி ஸ்டைலில், வாலிபர். அந்த முயற்சியில் இருக்கும்போது கமிஷனர் அந்த ஊரிலுள்ள ரௌடிகளை பிடிக்க தனாவை ரௌடி போலீஸ் ஆக வற்புறுத்துகிறார். தனாவும் அதன் உள்ளர்த்தம் அறியாமல் ஒப்புக்கொள்கிறார். ஆனால் இறுதியில் அவரது வாழ்வை அழிக்கும் சூழ்ச்சி புரிந்துகொள்ளும்போது காலம் கடந்திருக்கிறது. காதலும் அவரது கையை விட்டு போய்விட்டது. இந்த சூழலில் அவர் என்ன செய்கிறார், கமிஷனரை எப்படி பழிவாங்குகிறார் என்பதே கதை.  படத்தின் சுமந்தின் எனர்ஜிக்கு எதுவுமே ஈடு கொடுத்து நிற்பதில்லை. செய்யும் விஷயங்களை யோசிக்காமல் செய்வது போல தெரிந்தாலும் அதன் பின்னணி ஸ்ட்ராங்காக இருக்கும் என்பதுதான் தனாவின் பலம். இப்படி இருப்பவனை யாருக்குத்தான் பிடிக்காது. கல்லூரியின் முன்னாள் மாணவன் என்றாலும் அங்கு நடக்கும் ராக்கிங், சீர்கேடுகளை தட்டி கேட்டு உதைத்து திருத்துவது தனாவின் வாடிக்கை.  இப்படி இருக்கையில் அந்த கல்லூரியில் புதிதாக படிக்க வருகிறாள் லட்சுமி. தனா செய்யும் நல்ல விஷயங்களைப் பார்த்து அவளுக்கு அவனைப்

தனது காதலி செய்த கொலையை கணித அறிவால் மறைக்கும் கணித ஆசிரியர்! - தி பர்ஃபெக்ட் நம்பர் - தென் கொரியா

படம்
பர்ஃபெக்ட் நம்பர் (2012) பர்ஃபெக்ட் நம்பர் தென்கொரியா ஜப்பான் எழுத்தாளர் எழுதிய தி டிவோஷன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ் என்ற நாவலைத் தழுவிய படம்.  ஒரு பெண் செய்த கொலையை அவளை விரும்பும் கணித ஆசிரியர் எப்படி மறைக்கிறார். அந்த முயற்சியில் தன்னை எப்படி எரித்துக்கொள்கிறார் என்பதே கதை.  சிறு வயதிலிருந்து கணிதம் தவிர வேறெதையும் கண்டுகொள்ளாதவர்தான் நாயகன். நட்பு, காதல் என எதுவுமே அவருக்கு அமையவில்லை. கணிதம் சார்ந்த சிக்கல் முடிச்சை அவிழ்க்கும் முயற்சியில் இருக்கிறார். நண்பன் மீது சந்தேகம் கொள்ளும் டிடெக்டிவ்  தினமும் எழுந்து பள்ளிக்கு வேலைக்கு செல்வது, அங்கு செல்லும் வழியில் உள்ள கடையில் மதிய உணவை வாங்குவது என வாழ்க்கை செல்கிறது. மதிய வாங்கும் இடத்தில் வேலை செய்யும் பெண்ணை மெல்ல நேசிக்கத் தொடங்குகிறார். அந்தப் பெண், திருமணமாகி விவகாரத்தானவர். அவர் தனது உறவினர் குழந்தையுடன், கணித ஆசிரியரின் அறைக்கு அருகில் தங்கியிருக்கிறார். ஹோட்டலில் வேலை செய்யும் பெண்ணுக்கு முன்கதை உள்ளது. அது சோகமான வருத்தக்கூடிய கதை. அதிலிருந்து தப்பிக்கவே அவர் சியோலுக்கு வந்து வேலை செய்துகொண்டிருக்கிறார்.  இந்த நிலையில் நாம் மறக்க

கொச்சி பின்னணியில் ரோமியோ ஜூலியட் கதை! - ரொமான்டிக் - தெலுங்கு

படம்
  ரொமான்டிக் ரொமான்டிக்  தெலுங்கு  இயக்குநர் அனில் பதூரி கதை, திரைக்கதை, தயாரிப்பு, வசனம் - ஆல் இன் ஆல் அனைத்துமே பூரி ஜெகன்னாத்.  கோவாவில் உள்ள போதைப்பொருள் கும்பலின் தலைவன் வாஸ்கோவுக்கும், இன்ஸ்பெக்டர் ஒருவரின் தங்கை மோனிகாவுக்குமான காதல், இன்ன பிற பிரச்னைகளும்தான் கதை.  படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தவுடனே பலரும் கேத்திகா சர்மா மீது மையல் கொண்டு படத்தை எப்போது புக் செய்யலாம் என ஸ்மார்ட்போனில் ஐநாக்ஸ் ஆப்பை தேடுவார்கள். ஆனால் அவசரப்படாதீர்கள்.  ரொமான்டிக் - ஆகாஷ் பூரி, கேத்திகா சர்மா ரோமியோ ஜூலியட் ரகத்தில்தான் முடிகிறது,. ட்ரெய்லரில் உள்ள காட்சிகள் மட்டுமே முழுமையாக படத்தில் தேறுகிற சில காட்சிகள். எனவே பணத்தை வீணடிக்காதீர்கள்.  படத்தைப் பார்க்க வைக்கத் தூண்டுவது ஒரே ஒருவர்தான் அது கேத்திகா சர்மாதான். அவரது அழகான உடலும் அதனை மேயும் கேமரா கோணங்களும்தான் படத்தை அழகாக்குகிறது. படத்தில் வேறு ஒன்றும் இல்லை.  கோவாவில் இரண்டு போதைக் கடத்தல் கும்பல்கள், அதில் ஒன்றில் வாஸ்கோ சேருகிறார்.வேலை மோசம் என்றாலும் லட்சியம் பெரிது. குடிசையில் வாழும் தனது மக்களை வீடுகட்டி வாழ வைப்பதுதான் நோக்கம். அதற்காகவ