இடுகைகள்

நாசா 60! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாசா 60! - இதுவரையிலான சாதனைகள் என்ன?

நாசா 60! 1958 ஆம் ஆண்டு தொடங்கிய அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் பயணம் இவ்வாண்டோடு அறுபது ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதுதொடர்பான ஒரு நிமிட வீடியோவை நாசா வெளியிட்டு அதில் சாதனை நிகழ்வுகளை தொகுத்துள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய திட்டங்கள் 166, பூமியை ஆய்வு செய்யும் செயற்கைக்கோள்கள் 116, தொலைநோக்கிகள், ஆய்வகங்கள் 116, சூரியக்குடும்பத்தை ஆராயும் விண்கலங்கள் 17 என இஸ்‌ரோ தொடங்கிய காலம் முதலாக தீவிரமாக செயல்பட்டு சாதித்துள்ளது. 1957 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் ஸ்புட்னிக் என்ற செயற்கைக்கோளை அதிரடியாக விண்ணில் ஏவியது இஸ்‌ரோவை அமெரிக்கா உடனே தொடங்குவதற்கு முக்கிய காரணம். 1960-70 களில் நிலவை தொடும் ஆசையை நிறைவேற்றி இன்று செவ்வாயில் காலனி அமைக்கும் வேகத்தில் முன்னேறியுள்ளது நாசா. புதன், வெள்ளியை ஆராயும் மெசஞ்சர், மெகல்லன், மெரினர் ஆகிய விண்கலங்களுடன் சனி, வியாழனை ஆராயும் திட்டங்களும் நாசாவில் உண்டு. அமெரிக்க தேசியக்கொடியின் பின்னணியில் விண்வெளியை ஆராயத்தொடங்கிய நாசா, கண்டுபிடிப்பு, ஆராய்ச்சியின் தீராதவேட்கையின் அடையாளமாக தொடங்கிய ஆண்டு முதலாக இருப்பது அதன் இளமை ரகசிய