இடுகைகள்

சூப்பர் 30 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

படிப்பதற்கு பொருளாதாரமும், சூழலும் தடையாக இருக்க கூடாது! - ஆனந்த் குமார், பீகாரின் சூப்பர் ஆசிரியர்!

படம்
                    பொருளாதாரம் எனது படிப்பை குலைத்துவிட்டது ! ஆனந்த்குமார் . பாட்னாவில் வாடகைவீட்டில் இருந்த அந்த சிறுவனை பள்ளி செல்வதற்காக அதிகாலையில் காலைத் தொட்டு எழுப்புவது தந்தை ராஜேந்திர பிரசாத்தின் வழக்கம் . ஒருநாள் அப்படி எழுந்த சிறுவன் , எதற்கு இப்படி எழுப்புகிறீர்கள் என்று கேட்டான் . நான் நீ பிற்காலத்தில் செய்யும் சாதனையைப் பார்க்க இருப்பேனா என்று தெரியவில்லை . ஆனால் நீ அந்த உயரத்திற்கு செல்ல நான் என் பங்கினை செய்துவிடவேண்டும் . எழுந்து பள்ளிக்கு கிளம்பு என்று சொன்னார் . கணிதத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆனந்த் குமாருக்கு கேம்பிரிட்ஜில் படிக்க இடம் கிடைத்தும் கையில் பணம் இல்லாத சூழ்நிலையில் அக்கனவு கனவாகவே போய்விட்டது . இவரது பல்வேறு கட்டுரைகளை ஆய்வு இதழ்கள் வெளியிட்டுள்ளன . 1994 ஆம் ஆண்டில் இவரது தந்தை இறந்துவிட பொருளாதார சிக்கலால் படிப்பை கைவிடவேண்டிய சூழல் . நகரத்தின் தெருக்களில் அப்பளம் விற்றபடி நிலைமையை சமாளித்திருக்கிறார் . பிறகு பல்வேறு தனியார் நிறுவனங்களில் கணிதம் கற்பித்திருக்கிறார் . 1992 இல் கணிதம் தொடர்பான கிளப் ஒன்றை தொடங்கியவர் பின்னாளில்