நான்கு ஆண்டுகளில் அப்பாவை ஏமாற்றிய தாய்மாமனை பழிவாங்கும் நாயகனின் வெற்றிக்கதை!
ஜெயித்துக் காட்டுவேன் இயக்கம் கே ராகவேந்திர ராவ் இசை ஜே சக்கிரவர்த்தி நடிப்பு வெங்கடேஷ், ஸ்வேதா, ஜெயசுதா படிப்பில்லாமல் கிடைக்கிற கூலி வேலை செய்யும் ராஜா என்பவன், சுந்தரராமன் என்ற பணக்கார தொழிலதிபரின் மகளோடு பந்தயம் போட்டு தொழில் செய்து முன்னேறுகிற கதை. ஏழை நாயகன், பணக்கார நாயகி என்ற அதே கதை. தெலுங்கு ஆட்களைப் பொறுத்தவரை எதிரியாக இருந்தாலும் அவன் நாயகனுக்கு தாய்மாமனாக, அப்பாவாக, பெரியப்பாவாக இருக்கவேண்டும். நாயகி யாரோ ஒருவரைக் காதலித்தால் எப்படி? அவள் நிச்சயம் தனது தாய்மாமனையே காதலிக்கவேண்டும். கல்யாணம் செய்துகொள்ளவேண்டும். இதெல்லாம் இயக்குநர் உள்நோக்கத்துடன் செய்யும் விஷயங்கள். அப்போதுதான் தெலுங்கு கலாசாரம் வானளவு புகழோடு வளர்ந்தோங்கும். உதவாக்கரையான இயக்குநர் எழுதிக்கொடுப்பதை ஒப்பிக்கும் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் கூட மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அந்தளவு மழுமட்டையாக மக்களை மாற்ற திரைப்படங்கள்தான் ஒரே வழி. கே ராகவேந்திர ராவ், பெண்கள் உடற்பயிற்சி செய்வதை கீழிருந்து கேமராவில் பதிவு செய்து அவர்களை காட்சி ரீதியாக கண்ணியப்...