இடுகைகள்

சூப்பர் கணினி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டாப் 1 அமெரிக்க சூப்பர் கம்ப்யூட்டர் ஃபிரான்டியர்!

படம்
  உலகின் வேகமான சூப்பர் கம்ப்யூட்டர்!  டாப் 500 சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில், அமெரிக்க சூப்பர் கம்ப்யூட்டர் புதிதாக இடம்பிடித்துள்ளது. இதன்  பெயர், ஃப்ரான்டியர்  எக்ஸாஸ்கலே கணினி  என அழைக்கின்றனர்.  எக்ஸாஸ்கலே கணினி ஒரு நொடிக்கு, குயின்டில்லியன் கணக்குகளை போடும் திறன் கொண்டது. நான்கு ஆண்டுகளுக்கு பூமியிலுள்ள அனைத்து மனிதர்களும் 24 மணிநேரமும் கணக்கு போடுவதை இக்கணினி ஒரு நொடியில் போட்டுவிடும்.  ஜப்பானில் உள்ள ஃபுகாகு என்ற சூப்பர் கணினியை ஃபிரான்டியர் கணினி பின்னுக்கு தள்ளியுள்ளது. கணினியின் வேகத்தை பெட்டாஃபிளாப்ஸ் என்று அழைக்கின்றனர்.  இந்த வகையில் ஃபுகாகுவின் வேகம் 442 பெடாஃபிளாப்ஸ்களாக உள்ளது.  ஃபிரான்டியர் , 1 எக்ஸாஸ்கேல் என்பது 1000 பெடாபிளாப்ஸ்க்கு ஒப்பானது. இந்த வகையில் எக்ஸாஸ்கேல், பட்டியலில் முதன்மையாக உள்ள நான்கு கணினிகளையும் தாண்டிய திறனைக் கொண்டுள்ளது.  ஃபிரான்டியர் சூப்பர் கணினி 2023 ஆம் ஆண்டு வெளியாக உள்ளது. இதனை அமெரிக்க ஆற்றல் துறையில் தேசிய ஆய்வகத்தில் சோதித்து வருகிறார்கள்.  இப்போதைக்கு டாப் சூப்பர் கணினிகளைப் பார்ப்போமா 1 . ஃபிரான்டியர் 2. ஃபுகாகு, ஜப்பான் 3. லூமி, ப

இந்தியா உருவாக்கும் சூப்பர் கணினிகள்!

படம்
இந்தியா, 2015ஆம் ஆண்டு முதலாக சூப்பர் கணினிகளை உருவாக்கும் முயற்சிகளைத் திட்டமிட்டது. இதற்காக நேஷனல் சூப்பர்கம்ப்யூட்டர் மிஷன் - என்எஸ்எம் தொடங்கப்பட்டது. இதற்காக 750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக மின்னணு மற்றும் தகவல்தொடர்புத்துறை, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து பணிபுரிந்து வருகின்றன. ஏழு ஆண்டுகளில் மூன்று சூப்பர் கணினிகளை உருவாக்குவது திட்டமாகும். இதற்காக அரசு திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. ”அரசின் நோக்கம் சிறப்பானதுதான். ஆனால் அரசு இத்திட்டத்திற்காக நிதியை குறைத்து வழங்கியிருப்பதால், பணிகள் வேகம் பிடிக்கவில்லை ” என்கிறார் இத்திட்டத்திற்காக இயங்கும் அதிகாரிகளில் ஒருவர். கணினிகளை உருவாக்குவதில் பல்வேறு தொழில்நுட்ப இடர்பாடுகளை இக்குழு சந்தித்துள்ளது. இதன் விளைவாக அடிப்படையான மென்பொருட்களையும் வன்பொருட்களையும் என்எஸ்எம் திட்டக்குழுவினர் உருவாக்குவதில் தொடக்க காலங்களை செலவழித்து உள்ளனர். இன்று உலகளவில் சீனா சூப்பர் கம்ப்யூட்டர் போட்டியில் முதல் இடத்தில் உள்ளது. இந்த நாடு மொத்தம் 227 சூப்பர் கணினிகளை வைத்துள்ளது. அடுத்தபடியாக அம

ஏ.ஐ. பிட்ஸ்! - பின்லேடனின் மறைவிடத்தைக் கண்டுபிடித்த சூப்பர் கணினி!

படம்
தெரியுமா? செயற்கை நுண்ணறிவு என்பது நமது செல்போன்களின் ஆப்ஸ் தொடங்கி அனைத்து செயல்பாடுகளிலும் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. இயந்திர வழி கற்றல் என்பது அல்காரிடம் மூலம் தகவல்களை ஆராய்ந்து அவற்றிலிருந்து கற்பது என்கிறது சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா. செயற்கை நுண்ணறிவுத்துறை 2030 ஆம் ஆண்டு 15.7 டிரில்லியன் டாலர்கள்( 1 டிரில்லியன் - லட்சம் கோடி) கொண்டதாக வளரும் என்று மதிப்பிட்டுள்ளனர். உலகம் முழுக்க தானியங்கி கார்களை தயாரிப்பதற்காக 25க்கும் மேற்பட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள், டெக் நிறுவனங்களோடு கைகோர்த்திருக்கின்றன. இச்சந்தையின் மதிப்பு 127 பில்லியன் (ஒரு பில்லியன் - நூறு கோடி)டாலர்களாகும். உலகிலுள்ள தொழில் நிறுவனங்களில் 70 சதவீதம், 2030க்குள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கிவிடும் என ஆய்வு நிறுவனமான மெக்கின்சி கூறியுள்ளது. காருக்கு எப்படி எரிபொருள் அவசியமோ அதுபோல செயற்கை நுண்ணறிவுக்கான தேவை தகவல்கள்தான். எவ்வளவு அதிகம் தகவல்களை ஏ.ஐ. பெறுகிறதோ அவ்வளவு துல்லியமாக இயங்கும். ஏ.ஐ அமைப்புக்கு ஒவ்வொரு முறையும் நடைமுறைக்கான தகவல் தொகுப்பு தேவை இல்லை. எப்படி தேவையோ