இடுகைகள்

கிரேக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிலங்களை மனிதர்களை அடையாளம் காணத்தொடங்கியது எப்போது?

படம்
  நிலங்கள், மலைகள் வரலாறு!  புவியியல் என்று சொல்லும்போது மீண்டும் பாடநூல்களை படிக்கும் வெறுப்புணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால்தான் மேலேயுள்ள தலைப்பு. பேசப்போவது புவியியல் துறை சார்ந்துதான். பூமி உருவாகி, அதை மனிதர்கள் உணரத் தொடங்கியபோது தங்கள் சுற்றுப்புறத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கினர். காலையில் எழுந்து உணவு தேடினால்தான் பசியாற முடியும். இதில் நிலப்பரப்புகளை தெரிந்து என்னவாகப் போகிறது என உங்களுக்குள் கேள்வி எழுகிறதா? லாஜிக்கான கேள்விதான். ஆனால் அப்படி நிலப்பரப்புகளை அடையாளம் தெரிந்தால்தானே எங்கே என்ன கிடைக்கும், அதை எப்படி பெறுவது என திட்டமிட முடியும். கூடுதலாக எரிமலை அபாயம் வேறு மனிதர்களை மிரட்டியது. கூடவே மழை, புயல், ஆறு, ஓரிடத்திற்கு செல்வதற்கான சுருக்கமான வழி என நிறைய பிரச்னைகளை மனிதர்கள் எதிர்கொண்டனர். இதற்கான ஒரே வழி நிலப்பரப்புகளை அடையாளம் கண்டறிவதுதான். புவியியலை மனிதர்கள் புரிந்துகொள்வதில் வெற்றி அடைந்ததன் அடையாளம்தான், குடியேற்றம். மனிதர்கள் அன்று தொடங்கி இன்றுவரை நினைத்தே பார்க்கமுடியாத கடினமான சவால் நிறைந்த நிலப்பரப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள்.  தொன்மைக் காலத்தில்

தொன்மைக்காலத்தில் நோயாளிகளை சித்திரவதை செய்த அறுவைசிகிச்சை கருவிகள்!

படம்
            பீதியூட்டும் பண்டைய அறுவை சிகிச்சை உபகரணங்கள் ! நவீன அறுவை சிகிச்சை உபகரணங்கள் பார்க்க அழகாக இருந்தாலும் , தொடக்கத்தில் அப்படி இல்லை . கரடுமுரடாக இருந்த ஆயுதங்களை டிரிம்மிங் செய்து செதுக்கியது போலவேதான் இருக்கும் . அதனைப் பார்த்தே வைத்தியம் செய்துகொள்ளாமல் ஓட்டம் பிடித்தவர்கள் உண்டு . ஆனாலும் சிகிச்சை செய்யாவிட்டால் எப்படி அரைவைத்தியன் லெவலுக்கு வருவது ? எனவே நோயாளிகளை பிடித்து கட்டி வைத்து மண்டையில் ஓட்டை போட்டு சூடுபோட்டு என பண்ணாத சித்திரவதைகள் கிடையாது . ஆனாலும் இதற்காக நீங்கள் கவலைப்பட்டு ஐ . நாவில் புகார் கொடுக்கவேண்டியதில்லை . அதனால்தான் , புதிய கருவிகள் உருவாக்கப்பட்டன . டிரெபான் இன்று நமக்கு காலையில் ஹேங்ஓவரால் தலைவலிக்கிறது என்றால் உடனே ஆஸ்பிரின் மாத்திரை ஒன்றை எடுத்து போட்டால் போதும் . ஆமாங்க ஆமாம் என தலைவலி தலையாட்டிக்கொண்டே ஓடிவிடும் . ஆனால் கி . பி .6500 காலகட்டத்தில் நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் தலைவலி பிரச்னையை கொடூரமாக இயக்குநர் பாலா ஸ்டைலில் அணுகியிருக்கிறார்கள் . அதற்கான கருவிதான் டிரெபான் . தலைவலிக்கு தீர்வு எப்படி கருவி எ

உளவியலும் அதன் மேம்பாடும்!

படம்
கடந்த நூற்றைம்பது ஆண்டுகளாக உளவியல் துறை சிறப்பான முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. உளவியல் சார்ந்த விஷயங்களுக்கு க்ரீஸ், பெர்சியா ஆகிய நாட்டு ஆராய்ச்சியாளர்களே முன்னோடியாக இருந்து வந்துள்ளனர். உளவியல் துறை அடைந்த முன்னேற்றங்களைக் குறித்து பார்ப்போம். கிரேக்கம் கி.பி 1550ஆம் ஆண்டி எபிரஸ் பாபிரஸ் எனும் இதழில் மன அழுத்தம் பற்றி எழுதப்பட்டுள்ளது. கிபி 47- 370 காலகட்டத்தில் டெமோகிரைடஸ் உணர்வுகளின் மூலம் நாம் பெறும் அறிவு குறித்து உலகிற்கு அறிவித்தார். ஹிப்போகிரேட்டஸ் மனநலன்களுக்கான மருந்துகளை எப்படி தயாரிப்பது என்று அதற்கான விதிமுறைகளை வகுத்தார். கிபி 387 இல் பிளேட்டோ, மனிதனின் மூளைதான் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு காரணம் என்று கூறினார். 350ஆம் ஆண்டில் அரிஸ்டாட்டில் (பிளேட்டோ மாணவர், பின்னாளில் பிளேட்டோ சொன்ன கருத்துகளை மறுத்தவர்) டி அனிமா, டபுலா ரசா  எனும் உளவியல் சார்ந்த பதங்களை அறிமுகப்படுத்தினார். விளக்கினார். 300-30 காலகட்டத்தில் ஸெனோ, ஸ்டோய்சம் எனும் மனநிலை பற்றிய தன்மையை கற்பித்து வந்தார். இதனை 1960 இல் சிபிடி என்று பழக்க வழக்கம் சார்ந்த தெரபியாக உளவியலாளர்கள் வர

கிரேக்க கணிதமேதை யூக்லிட்!

படம்
கிரேக்க கணிதவியலாளரான யூக்லிட், இன்றைக்கு நாம் பள்ளிகளில் படிக்கும் வடிவியல் கணக்குகளை உருவாக்கியவர். இவர் அத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக, வடிவியலின் தந்தை என புகழ்பெற்றார். யூக்லிட் என்ற பெயருக்கு, மகிமை என்று பொருள். கி.மு.300 இல் இவர் எழுதிய தி எலிமென்ட்ஸ் (The Elements) என்ற நூல், கணிதத் துறையில் முக்கியமானது. இவற்றோடு எண்ணியல், வடிவியல், எண்கணிதம் ஆகியவற்றைப் பற்றி 13 நூல்களை எழுதியுள்ளார். எகிப்திலுள்ள அலெக்சாண்ட்ரியாவுக்கு வருவதற்கு முன்பு, பிளேட்டோவின் அகாடமியில் நூல்களை வாசித்து வந்தார். மேலும் நகரில் அரசு அமைத்திருந்த பெரிய நூலகம் யூக்லிட்டின் அறிவுப்பசியைப் போக்கியது. இவரின் காலத்தில் புகழ்பெற்றிருந்த மற்றொரு கணிதவியலாளர்,  கிளாடியஸ் டோலமி (கி.மு.323-283). தகவல்: .10-facts-about.com நன்றி: ஆர்.வெங்கடேஷ்

மீதியுள்ளவை அனைத்தும் டான் ஃபைனாரு]

16 மீதியுள்ளவை அனைத்தும் டான் ஃபைனாரு] உங்களது பெற்றோர்கள் தென் பகுதியைச் சேர்ந்த பெலோனிசஸ் மறும் க்ரேட்டே பகுதியைச் சேர்ந்தவர்கள். ஆனால் இன்றும் நீங்கள் கரும் மேகங்கள், கடும் மழை, கடும் குளிர்காலம் கொண்ட வட பகுதியில்தான் பெரும்பாலும் கவனத்தைக் குவித்திருக்கிறீர்கள்.      இக்கேள்வி எப்போதும் என்னை நோக்கி கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கு எவ்வித விளக்கமும் நான் அளிக்கப்போவதில்லை. இதற்கான விடையை கடந்த காலத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அது உண்மையாக இருக்காது. உளவியால் ஆய்வாளர்கள் வேண்டுமானால் இதற்கான ஆதாரங்களை கண்டறிய முடியலாம். மறுகட்டமைப்பு எனும் எனது முழுநீளப்படத்தினை எடுப்பதற்கான சென்றிருந்த நிகழ்வை இங்கு கூற விரும்புகிறேன். அந்த நிலப்பரப்பு முழுக்க சாம்பல் நிறமாக இருந்தது. கருமையான மேகங்கள், கவர்ச்சியற்ற எளிய வீடுகள், பெரும் மலைகள் அவற்றின் பின்னணியில் இருக்க, மெல்லிய தூறலாய் மழை பெய்துகொண்டிருக்க பனி ஒரு திரைபோல மலையினை மூடிய சூழலில் கிராமமே வெறிச்சோடிக் கிடந்தது. 1950 இல் பெரும்பாலான கிரீக் மக்களைப் போல அவர்களில் பெரும்பாலானோர் ஜெர்மனிக்கு வேலை தேடி செ