இடுகைகள்

மவுஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சைக்கோபாத் கொலைகாரனுக்கு விபத்தில் நினைவுகள் அழிந்து, மீண்டும் நினைவுகள் திரும்பினால் - மவுஸ்

படம்
  மவுஸ் - கே டிராமா மவுஸ் கொரிய டிராமா பதினாறு எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   வன்மம் கொண்ட ஆபத்தான சீரியல் கொலைகாரனை கொரிய போலீஸ் தேடி வருகிறது. ஆனால், அவனோ அவர்களுக்கு ஒரு படி முன்னே சென்றுகொண்டே இருக்கிறான். அவனை பிடிக்கும் முயற்சியில் ஏராளமானோர் கொல்லப்படுகிறார்கள். அவர்களைச் சேர்ந்த குடும்பங்கள் ஆதரவற்றவையாக மாறுகின்றன. சீரியல் கொலைகாரர்களால் தனது ஒட்டுமொத்த குடும்பத்தை இழந்த போலீஸ்காரர்   துணிச்சலாக களமிறங்க, அவருக்கு சைக்கோபாத் கொலைகாரன் சவால் விட ஊடகங்கள் இடைத்தரகர்களாக மாற என்னவானது என்பதே கதை. மேலே சொன்னது கதையின் ஆதாரமான பகுதி அல்ல. பொதுவாக சைக்கோபாத்/ தொடர் கொலைகாரர்கள் கதையில் பூனை – எலி விளையாட்டு போல ஓடுதல், தப்பித்தல், வேட்டையாடுதல் எல்லாமே உண்டு. இந்த கதையிலும் அதெல்லாம் உண்டுதான். ஆனால், அதையெல்லாம் தாண்டி இந்த டிவி தொடர் பேசும் விஷயம் சற்று சர்ச்சையானது. இங்கிலாந்தில் படித்து ஆராய்ச்சி செய்யும் மருத்துவர், டேனியல் கொரியாவை பூர்விகமாக கொண்டவர். இவர். சியோ ஹன் என்ற மூளை அறுவை சிகிச்சை நிபுணர் மூலம் அடையாளம் காணப்பட்டு புகழ்பெறுகிறார். மூளை தொடர்பான ஆய்வ

ஆபீசிற்கான பொருட்களை வாங்கவேண்டாமா?

படம்
  ஹெக்டார் லேப்டாப் பேக் மேக்புக் ஏர், டெல் எக்ஸ்பிஎஸ் 13 என்ற இரு கணினி வகைகளை உள்ளே வைக்கும் விதமாக பையை வடிவமைத்திருக்கிறார்கள். தோல்பை என்பதால் அழகாக இருக்கிறது. பேனா, பென்சில், அண்ணாச்சி கடையில் வாங்கிய பில்லைக் கூட  நிறைய ஜிப்களைத் திறந்து பைகளில் வைத்துக்கொள்ளலாம்.  பழசாகும்போது இன்னும் அழகான பையாக மாறும் வாய்ப்பிருக்கிறது.  விலை ரூ.24, 500 லாகிடெக் எம் எக்ஸ் எர்கோனாமிக் மவுஸ் அசல் எலி என நினைப்பீர்கள். வடிவமைப்பு எலி குனிந்து உட்கார்ந்து எதையோ கொறிப்பது போல உருவாக்கியிருக்கிறார்கள். செயல்பாடு அனைத்து கருவிகளிலும் இணைத்து பணிபுரியும்படி இருக்கிறது. நீண்டநேரம் மவுசைப் பிடித்து வேலை செய்தாலும் மணிக்கட்டு வலிக்காது என்கிறார்கள். விலை 9300. லாகிடெக் வயர்லெஸ் கீபோர்டு ஆப்பிள், ஆண்ட்ராய்ட், விண்டோஸ், குரோம் ஓஎஸ்சில் கூட இதனை வைத்து வேலை செய்ய முடியும். நன்றாக உள்ளது. கைகளுக்கு உறுத்தலாக இல்லாமல் பணி செய்ய உதவும்.  லாகிடெக் காம்போ டச் பார் ஐபேட் புரோ லாகிடெக் பற்றியே நிறைய எழுத காரணம், அந்தளவு புதிதாக ஏதாவது செய்கிறார்கள் என்பதுதான். ஐபேட் புரோவுக்கான பொருள்தான். பயன்படுத்தினால் மேக் ப