இடுகைகள்

இந்தியா - தரம் குறையும் கல்வி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் பல்கலைக்கழகங்களின் தரம் என்ன?

படம்
அறிவோம் தெளிவோம் !   உலகளவிலான பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியலில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸின் இடம் 420.   328(2014), 341(2015), 354(2016) என உலகளவிலான ரேட்டிங்கில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் சரிவைச் சந்தித்து வருகின்றன . தரவரிசைப்பட்டியல் ஆராய்ச்சி அறிக்கைகள் அளவு , தரம் பொறுத்து அளிக்கப்படுகிறது . மத்திய பல்கலையில் 5 ஆயிரத்து 606 பேராசிரியர் பணியிடங்கள் (33%) நிரப்பப்படாமல் உள்ளதாக மனிதவளத்துறை அமைச்சர் சத்யபால்சிங் மக்களவை அறிக்கையில் ( ஜூலை 23,2018) கூறியுள்ளார் . இதில் ஐஐடியில் மட்டும் 2 ஆயிரத்து 802 பணியிடங்கள் (34%) காற்று வாங்குகின்றன .  " கடந்த இருபது ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியிடங்களில்   புறக்கணிப்பு நிலவுகிறது " என்கிறார் ஹைதராபாத் பல்கலையைச் சேர்ந்த சமூகவியல் பேராசிரியரான லஷ்மி நாராயணன் . இந்திய அரசின் 4.13%(2014) கல்வி ஒதுக்கீடு விகிதம் இங்கிலாந்து (5.68%), அமெரிக்கா (5.22%), தென் ஆப்பிரிக்கா (6.05%) நாடுகளை விட குறைவு . 2018-2019 டாப் 100 பட்டியலில் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் 51, இங்கிலாந்தில் 8 ப